ThirupPavithrothsavam
day 2 @ Thiruvallikkeni : 2026
In the
ongoing ThiruPavithrothsavam at Thiruvallikkeni, today 23.8.2026 is day 2
Pavithrotsavam
is an annual ritual - the word itself is a derivative from the combination of
two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity). This
Uthsavam is penitential as also propitiatory ~ for sure, there is nothing
good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all
our endeavours. It is our own attempt to get rid of the evils that might
have been caused by the omissions and commissions in the performance of various
rituals throughout the year.
Sriman
Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and
cannot in any manner be having anything in short or less. The festivals are
only intended to be error correction [dosha nirvana] of the rituals that we,
the humans conduct and fail in some manner. Lord only accepts them
with Divine Grace, blessing us all the time beyond what we
deserve. For a Srivaishnavaite, nothing needs to be done by self as
Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide
us to do kainkaryam to Him.
During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti. In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used. The poornahuthi / the conclusion of Thirupavithrothsava Sarrumurai is to take place on 28.8.2026
Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings. Here are some photos taken during today’s chinna maada veethi purappadu of Sri Parthasarathi Pavithrothsavam day 2.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.
திருப்பவித்ரோத்சவம்
ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில்
யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால்
யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்; அத்யாபகர்கள் மற்றும்
திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும்
நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும்
பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.
திருப்பவித்ரோத்சவம்
மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு
ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில்
ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள்
“திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும்
குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப்
படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும்
பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி
: ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)
முடிச்சோதியாய்
ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது. ஸகல
சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந்
திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன். சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம்,
சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும் தன்னகத்தே கொண்டவன்.
எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை. எம்பெருமானின் திருவடிகளையே சரணாய்
கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம்
கொள்கிறோம்.
திருவல்லிக்கேணி
திருப்பவித்ரோத்சவம் இரண்டாம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்
இங்கே :
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment