Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2026 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"
"கோட்டை மதிலைச்
சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து
பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது
பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று
வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது.
சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக்
கொண்டு போனார்கள்" .. .. .. ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் :
"சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம்.
பல்லவர்கள் கி.பி.மூன்றாம்
நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய
ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின்
சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின்
பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.
The holy divyadesam of
Thiruvallikkeni is replete with festivals all the time - after then
Theppothsavam [float festival]; Thavana Uthsavam, Sree Rama
Navami uthsavam, it is now Pallava
Uthsavam for Sri Ranganathar.
பங்குனி உத்திரத்தில்
முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் - பங்குனி
உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் கருட சேவை. பல்லவ உத்சவம்: திருவல்லிக்கேணி
தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட
உத்சவம் என நினைக்க வாய்ப்பு உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும்
சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும்
கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று
இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்'
எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.
The recorded
history begins with three copper plate grants, all in Prakrit, all dating
from the time of Skandavarman, and all belonging possibly to the latter part of
the third century. The earliest of his grant was issued when Skandavarman was
the Yuvaraja; the others after he had become king. The title Yuvaraja suggests
that he was not the first Pallava ruler. But it is not known who his
predecessors were, although among them there was probably one Simhavarman, a
king mentioned in a Prakrit stone inscription recently discovered in the Guntur
district. Bkandavamian belonged to the Bharadvaja gotra, performed agnistoma,
vajapeya and asvamedha sacrifices and bore the title ‘ Supreme King of Kings
devoted to dharma. His capital was Kanchi and his kingdom extended up to the
Krishna in the north and the Arabian Sea in the west.
Nandivarman II (731-793)
who is known as Pallavamalla had long reign bristling with wars and
invasions. Early in his resign, the Pandyan king, Maravarman, Bajasimha.I,
espoused the pause of Chitramaya and inflicted a number of defeats upon him and
besieged him. He was succeeded by his son Dantivarman (795— 845}.
He seems to have married a Eadamba princess and made many gifts of lands to the
temples, including the Parthasarathi temple at Triplicane.
The Pallava army consisted
of elephants, horses and infantry. Elephants in it occupied a chief place as is
evident from the sculptures. It had its war trumpets (katumukhavaditra) and
its' war drum (samudra ghosha), and was well organised. This is testified
by its various victories on the battle-field. The Pallava navy too seems to
have been well organized as is clear from Narasimhavarman’s naval
expeditions to Ceylon and Rajasimha’s overseas connection with China and Siam.
Its principal base was Mababalipuram and its secondary base Nagapattinam.
Pallavas patronized arts
and culture. The Pallava age was also the age in which classical dancing
as expounded by Bharatha in its Natya Sastra was practised and admired.
That this is so, is clear from the dancing poses exhibited in the numerous
sculptures found in the Sittannavasal cave temple, the Siva temple at
Tiruvottiyur, the Vaikuntaperumal temple and the Kailasanatha temple at Kanchi.
It is equally clear from the descriptions of the dances in the
Mattavilasa.
தமிழ் கோப்பில்
பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது :
· பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்
· ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
· பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
· பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க, செஞ்செவியகஞ்சம்
· நிகர், சீறடியள் ஆகி, - கம்பராமாயணம்.
· சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.
‘விளக்கம் மிக்க செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.
பங்குனி உத்திரத்தில்
முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர்
திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர
ஆர்த்தி கண்டு அருள்வார். தினமும்
ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி
கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்
சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில்
அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.
One odd reference to
Pallavam is found in Thirumangai Azhwar in Thirumozhi ~: “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்*,
ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van
Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman)
... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree
with plenty of tender leaves, jumped on the hood of Kalinga ... .. .. ..
.
திருமங்கை மன்னன்
'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் - தளிர்கள்
பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று
வந்து சிக்கெனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம்
என அருளுகிறார்.
This is the season of
blooming mangoes – season whence you get fresh ‘maavadus’ – the tender
mangoes. Today 28.3.2026, on day 1 of Pallava Uthsavam Sri Ranganathar adorned leaves of mango tree,
fresh ones at that along with other beautiful garlands.
adiyen
Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
History excerpted from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor
of Univ of Paris.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment