To search this blog

Thursday, November 9, 2023

Mamunigal sirappu 2023 - Thirukkudaigal karikolam

ஐப்பசி சிறப்பு ஆசார்யர் பிறப்பு !  ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை 2023


திருக்கோவில் திருக்குடைகளை பற்றி சற்று அறிந்தவர் ஆகின்  - உங்களுக்கு தெரிந்து இருக்கும்.  இக்குடைகள் அகலப்படி - 12 - 14 - 16 - 18 என விரியும்.  18 ஜான் குடைகள் மிக அகலமாக இருக்கும். அவற்றை தூக்கி பெருமாளுடன் வருவது கடினம் - திருவல்லிக்கேணியில் 20 ஜான் குடைகளும் கூட உள்ளன.  இங்கே படத்தில் காணப்படுவன - 18 ஜான் குடைகள் ஜதை.

 


திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெற்று  வரும் ஆசார்யர் மணவாளமாமுனிகள் உத்சவத்தில் இன்று இரண்டாம் நாள்.  இன்று மாலை திருவீதி புறப்பாடு முடிந்தவுடன் சுமார் 8.30 அளவில் மற்றுமொரு சிறப்பு புறப்பாடு நடைபெற்றது !  - "திருக்குடைகள் கரிக்கோலம்"  - எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க படுமுன் - பொருள்கள், வீதி ஊர்வலமாக சென்று பின்னர் மந்திர உச்சாடனங்களுடன் திருக்கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

குடைகள் சிறப்பாக, அழகுற மிளிர்வன.  தொண்டைமண்டலத்தில் அவை தூய வெள்ளை நிறத்திலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.  எம்பெருமான் திருவீதி வலம் வரும்போது - பல கைங்கர்யபரர்களை காணலாம் -  அர்ச்சகர்கள், அருளிச்செயல் கோஷ்டி, வேத பாராயணம், ஸ்ரீபாதம் தாங்கிகள், தீவட்டி என பல.  எம்பெருமானுக்கு அழகான குடைகளை தங்கள் மடியில் (மடி எனப்படும் துணி இடுப்பில் கெட்டியாக சுற்றப்பட்டு, இதனுள் குடை காம்பு அமரும்) ஏளப்பண்ணி வருவர்.  இது மிக கடினமான கைங்கர்யங்களில் ஒன்று. வாஹன புறப்பாடுகளில் இக்குடைகள், திறம்பட தூக்கி பட்டறை (வாகனத்தில் பெரிதாக இருக்கும் பலகையில்) வைக்கப்பட, பட்டாச்சார்யார்கள் இவற்றை தாங்கி வருவார்கள்.  

அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு இதன் கடினம் புரியும்.  குடைகள் சில கிலோகிராம் எடை - பறந்து விரிந்துள்ள மேற்பரப்பு  ஒரு மரக்காம்பில் - கீழே தாங்குவார் அதன் எடையையும், காற்றின்- வேகம், திசை,   பலத்தையும்  சமநிலைப்படுத்தி,  துரித கதியில் நடந்து வர வேண்டும். 

ஆசார்யன் உத்சவத்தில் பற்பல சிறப்புகள் -  தீபாவளி  அன்று காலை மங்களசாஸன  உள்புறப்பாட்டில் 20 ஜான் குடைகள்; சாற்றுமுறை வைபவம் அன்று பெரிய மாடவீதியில் 10 ஜதை அழகு குடைகள் என கொண்டாட்டம்.  நேற்று அழகாக செய்யப்பட்ட இரண்டு 18 ஜான் குடைகள் திரு காவல்கழனி ராஜப்பா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.  திரு கோபி, அஜய் ஸ்ரீவத்சாங்கன் மற்றும் தென்னாச்சார்யா ஸ்ரீபாதம்தாங்கி நண்பர்கள் முக்கிய பங்கு. 

திருவல்லிக்கேணியில் நடந்த கரி கோல புறப்பாட்டின் சில புகைப்படங்கள் இங்கே. 

 
adiyen Srinivasa dhasan 
Mamandur Veeragalli Srinivasan Sampathkumar
8.11.2023 



















No comments:

Post a Comment