To search this blog

Saturday, November 4, 2023

Aippaisi Punarvasu 2023 - இராமபிரானின் கோதண்டம் வில்

நீங்கள் காண்பது என்ன !? -  இராமபிரானின் கரங்களில் ஏந்திய கோதண்டம் எனும் வில்லின் தலை பாகம்.  சக்கரவர்த்தி திருமகனான எம்பெருமான் ஸ்ரீராமபிரான் எத்தகையன் ?  மிக சிறந்த வில் வீரன், முனிவர்களையும், யாகங்களையும், மக்களையும், தர்மத்தையும் ரக்ஷித்தவன்.  கடலை அம்பபெய்திப் பிரித்து மறுகரையை அடைந்து அரக்கர்களையும் இலங்கை வேந்தனையும் கொன்று தம்பிக்கு அரசு கொடுத்து சீதையோடு சிம்மாசனத்தில் அமர்ந்தவன். 

 இன்று 4.11.2023  ஐப்பசி புனர்வசு.  திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே மாச திருநக்ஷத்திர  புறப்பாடு எனினும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அழகான திருவாபரணங்கள் - திருமார்பு பதக்கம், காசு மாலை, மகிழம் பூ, மல்லிகை, சம்பங்கி,  சாமந்தி, சிகப்பு விருட்சி என மலர்மாலைகள்  - இவை எல்லாவற்றையும் விட.. .. இராமனது திருக்கரங்களிலே அழகான மணிகள் கொண்ட கோதண்டம் எனும் வில்; மற்றோரு திருக்கரத்தில் அம்பு பாணம் !   சற்று கூர்ந்து நோக்கினால் அவரது வில்லின் குமிழ் யாளி போன்ற அமைப்பை கொண்டதையும் அங்கேயும் மணி உள்ளதையும் சேவிக்கலாம்.   

கம்ப இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் குகப்படலம்  - இராமபிரான் வனம் ஏகியதை அறிந்து பெரும் சினமுற்ற  பரதன்  கங்கைக் கரைக்குப் போய் சேர்ந்த போது,  அதன் தென்கரைக்கு வந்து நின்ற குகன், ”இராமபிரானோடு போர் செய்வதற்குத் தான் இந்தப் படை திரண்டு வந்திருக்கின்றது” என்று நினைத்து மிக்க   சினம்  கொள்கின்றான். குகனைப் பற்றி அமைச்சனாகிய சுமந்திரன் சொல்லக் கேட்ட பரதன், அவனைக் காண ஆவலோடு நெருங்கி வந்தான்.  மரவுரித்தரித்த நிலையில், இராமனிருக்கும் திசை நோக்கித் தொழுதவண்ணம் பரதன் வரக் கண்ட குகன், இராமனுக்குப் பின் பிறந்தார் பிழை செய்யார் எனக்கூறி படகில் ஏறி, பரதனின் அருகில் வந்து வணங்கினான். 

மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்

கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்

ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின

மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்.

 


மைஉற - தீமை உண்டாகுமாறு -   இறுதி  நாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் நீக்குகின்ற, கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தை ஏந்திய யமனே ஐந்து இலட்சம் வடிவம் எடுத்தாற் போன்ற வலிய உடம்புடைய  சேனையை உடையவன்;  வில்வித்தையில் மிக தேர்ந்தவன் என குகனையும் அவனது பலம் வாய்ந்த சேனையையும் கம்ப நாட்டாழ்வான் வர்ணிக்கிறான்.  பல்லாயிரக்கணக்கான வில் வீரர்கள் இருந்தாலும், சிறந்த வில்வீரன் என்றால் அது நம் ஸ்ரீராமபிரான் மட்டுமே. 

Today being  Punarvasu thirunakshathiram in the month of Aippaisi, with rain clouds threatening to make a heavy downpour, Sri Ramapiran had siriya mada veethi purappadu at Thiruvallikkeni divyadesam.  Here are some photos taken during today’s purappadu 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.11.2023
 
  

No comments:

Post a Comment