To search this blog

Wednesday, January 18, 2023

Our refuge Emperuman - Thai Ekadasi 2023 - சார்வு நமக்கென்றும் சக்கரத்தான்

சார்வு என்றால் என்ன !!??!!



குற்றவியல் நடைமுறை விதிகள், குற்றவியல் சட்டங்களில் மிக முக்கியமானதாகும். இந்த சட்டத்தில் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்றங்கள் செயல்படும் நேரம், சாட்சிகள் பற்றிய விவரங்கள், அழைப்பாணை சார்வு செய்யப்படும் முறை, காவல்துறையினர் புலனாய்வு, வழக்கு தொடுக்கும் முறை போன்றவற்றுக்கான நடைமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. விதி - 11 - மருத்துவ சாட்சிகளுக்கு எப்படி அழைப்பாணையை அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. மருத்துவர்களுக்கு அழைப்பாணையை நேரில் சார்வு செய்ய வேண்டும். இந்த தகவலை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவர் இல்லையென்றால் மாவட்ட மருத்துவ அதிகாரி மூலமாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அழைப்பாணையை சார்வு செய்ய வேண்டும்.   

சார்வு,  எனும் பெயர்ச்சொல்லுக்கு :  இடம், ஒட்டுத்திண்ணை, புகலிடம், ஆதாரம், துணை, வழிவகை, பற்று, அயலிடம், ஒருதலைப்பட்சம் - என பல  பொருட்கள் உள்ளதாக தமிழ் அகராதி தெரிவிக்கிறது.   

A refuge is a concept in ecology, in which an organism obtains protection from predation by hiding in an area where it is inaccessible or cannot easily be found. 

In Buddhism, refuge or taking refuge refers to a religious practice, which often includes a prayer or recitation performed at the beginning of the day or of a practice session. Since the period of Early Buddhism until present time, all Theravada and mainstream Mahayana schools only take refuge in the Three Jewels (also known as the Triple Gem or Three Refuges)  which are the Buddha, the Dharma and the Sangha. However,  Vajrayana school includes an expanded refuge formula known as the Three Jewels and Three Roots. Taking refuge is a form of aspiration to lead a life with the Triple Gem at its core. In early Buddhist scriptures, taking refuge is an expression of determination to follow the Buddha's path, but not a relinquishing of responsibility.  

In 1880, Henry Steel Olcott and Helena Blavatsky became the first known Westerners of the modern era to receive the Three Refuges and Five Precepts, which is the ceremony by which one traditionally become Buddhist.  .. .. and there is - UNHCR, the UN Refugee Agency,  a global organization dedicated to saving lives, protecting rights and building a better future for refugees, forcibly displaced communities and stateless people.  The refugee crisis continues to swamp modern World.




Here is the concluding pasuram of Moondram thiruvanthathi of Sri Peyalwar.   

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும், - காரார்ந்த

வானமரும்  இன்னிமைக்கும் வண்டாமரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு.  

எம்பெருமானே பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று  ஆழ்வார் தலைக்கட்டுகிறார்.   எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - திருவாழியைக் கையிலே உடையவன்,  குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற மலைபோன்ற திருமார்ப யுடையனுமானவன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த   எம்பெருமானால்  ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்,  மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே   நிலைத்து நிற்கக் கூடியதான மின்னல்போல  விளங்குகின்றவளாய்,  அழகிய தாமரைப் பூப்போன்ற நீண்ட திருக்கண்களையுடையளாய்,  தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான பெரிய பிராட்டியார் தான் நமக்கு எப்போதும் சரணம், என அறுதியிட்டு உரைக்கின்றார் நமது தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.

Lord Krishna – the presiding deity of Thiruvallikkeni Sri Parthasarathi is our refuge who protects and takes us to salvation.  Today 18.1.2023  is Thai Krishnapaksha Ekadasi and at Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman had periya mada veethi purappadu.  Here are some photos of the purappadu at Thiruvallikkeni divyadesam.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18th Jan 2023.











2 comments: