To search this blog

Monday, April 20, 2020

ஐப்பசியில் சதயம் : Sri Peyalwar Sarrumurai 2019 : morning purappadu


Life’s rewind .. looking back at Muthal Azhwargal sarrumurai vaibhavam now..


7th Nov. 2019 was  Sadayam in the month of  Aippaisi – significant for the birth of Sri Peyalwar.  ஐப்பசியில் ஓணம், அவிட்டம்,  சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீமணவாளமாமுனிகள் தமது 'உபதேசரத்தின மாலையில்'  எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார். 



நாந்தகம் என்ற வார்த்தைதனை  கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  :    சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword)  என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.:  அவை :  ~  உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.



ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது. 

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham. 

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street   in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.





On Thursday morning (7.11.19)   Alwar proceeded to the temple and from there,  Sri Parthasarathi swami had purappadu to Peyalwar sannathi. At Peyazhwar thirukkovil, occurs  thirumanjanam and in the evening periya mada veethi  purappadu – and again Azwar accompanies Perumal from the purappadu from his sannathi to thirukovil. Some photos taken during the morning purappadu are here.

Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Saranam !!

adiyen dhasan ~Srinivasan Sampathkumar
20.4.2020













No comments:

Post a Comment