To search this blog

Tuesday, April 14, 2020

ThirukKandiyur Divyadesam - உலகமேத்தும்- கண்டியூர்

               மத்யமாவதி ராகத்தில் 'முச்சட பிரஹ்(மா)துலகு தொரகுனா' - என தியாகய்யரின் கீர்த்தனை ஒன்று உள்ளதாம்.  தமிழகத்திலே நாயன்மார்கள் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பல உள்ளன. இன்று நாயன்மார்களாலும், ஆழ்வாராலும் பாடப்பெற்ற ஒரு தலம்  - "திருக்கண்டியூர்'.திருஞானசம்பந்தர் தம்  மூன்றாம் திருமுறையில் -  சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்துள்ள கண்டியூர்வீரட்டம் கோவிலில் உறையும் பிரமசிரக்கண்டீஸ்வரர் பற்றி பாடியுள்ளார் :  " வினவினேன்  அறியாமையில்லுரை,   செய்ம்மினீரருள் வேண்டுவீர், கனைவிலார்  புனற் காவிரிக்கரை -    மேயகண்டியூர் வீரட்டன் ... ..'   இத்தலத்திலே  மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி  பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும்  காட்சி தருகிறார்.

Saint Thiyagaraja (Thiyagayya)  saw the reigns of four kings of Maratha dynasty but served none of them.  Every Thiyagaraja aradhana will be recreated at Thiruvaiyaru, where the country’s first music museum is to be set up with  assistance from the Central Government.   The composition  ‘Muccata Brahmadulaku Dorakuna’ (Madhyamavati), recreates the atmosphere of the Saptasthanam festival of Thiruvaiyaru, an annual event that Tyagaraja participated in all his life. It takes place in April and involves Siva Panchanadeesar leaving in a palanquin for the shrines at Thirupazhanam, Thiruchotrutturai, Thiruvedikudi, Thirukandiyur, Thirpoonthuruthi and Thiruneithanam. As the procession moves through each of the villages, the presiding deity of the respective shrine joins Siva Panchanadeesa and by the time Thiruneithanam is reached, there will be seven palanquins, each bearing a deity. The entire proceeding takes as long as 24 hours.

Thiruvaiyaru that way would not need much introduction.  It is a  panchayat town in Thanjavur District situated on the banks of the river Kaveri, 11 km from Thanjavur.  On the way from Tanjavur, one would travel through  five bridges over the Vadavar, Vettar, Vennar, Kudamurutti and Cauvery, the five rivers from which Tiruvaiyaru gets its name.

This is no post on Carnatic music or Thiruvaiyaru but on the divyadesam – thirukkandiyur, a few miles away from Thiruvaiyaru. There are two main temples sharing a common legend – that of Lord Siva plucking out one of the heads of Brahma.  There is a temple of ‘Brahma sira Kandeeswarar’ dedicated to Lord Siva and a stone’s throw away is the Srivaishnava divyadesam of ‘Sri Hara Sapa Vimosana Perumal’.  The purpose of life is to worship Sriman Narayana and here is a pasuram of Thirumangaimannan in his Thirumozhi saying that the hands that do not fold and worship Emperuman are not worthy to be known so.ஸர்வேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, ---  கலியன் திருமொழியில்.

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.

கருங்கடலையும், நீலமணிமயமான மலையையும்,  காளமேகத்தையும், பார்த்தவுடன் கொய்யவேணும் என  விரும்பத்தக்க நீலோற்பலத்தையும், காயாம்பூவையும் போன்று
கறுத்த திருமேனியையுடையவனும், திருமெய்யமலையில் கோயில் கொண்டிருப்பவனும், திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை - அஞ்சலி பண்ணாத கைகளானவை, கைகளேயல்ல - என்பதை நாம் நன்கு அறிவோம் என்கிறார் நம் கலியன்.
This is the divyadesam where Shiva himself got salvation from his curse, and naturally for the bakthas visiting here and worshipping the Emperuman here all  curses will go away.  This divya kshetram is known as the Pancha Kamala Kshetram (Lord Kamalanathan, Goddess Kamalavalli, Kamala Pushkarani, Kamala Vimanam and Kamala Kshetram).  The Moolavar  Hara Saba Vimosana Perumal is in standing posture towards East.  Thayar is Sri Kamalavalli Nachiyar and Uthsavar is Sri Kamalanathan.   

திருக்கண்டியூர் திரு ஹரசாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுக்கு மிக  அருகே அமைந்துள்ளது.   ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், கி.பி எட்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு விஜயநகரப் பேரரசர்களும் தஞ்சாவூர் நாயக்கர்களும் திருப்பணி செய்தனர்.

பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட தோசம் நீங்க, ஹரன் திருக்கண்டியூரில் உள்ள கமல தீர்த்தத்தில் நீராடி, திருக்கண்டியூர் பெருமாளை தரிசனம் செய்தார்.  ஹரன்  சாப விமோசனம் பெற்றதால், இத்தலத்திற்கு ஹர சாப விமோசனப் பெருமாள் பெயராயிற்று.  திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்த தலமிது.

பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே?

பிரம்மனின் பிடுங்கப்பட்ட தலையின் ஓட்டை கையில் ஏந்தி, பிட்சை பெற்று உண்ட சிவபெருமானுக்கு சாப விமோசனம் அளித்தவன், உலகம் போற்றும் திருக்கண்டியூரில் அருள் பாலிக்கிறான். திருவரங்கம், திருமெய்யம், திருக்கடல் மல்லை ஆகிய தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் அப்பிரானை வணங்கி, அவன் திருவடி பற்றி உய்வு பெறுவதைதவிர நமக்கு வேறு நற்கதி ஏது உண்டு என வினவுகிறார் நம் கலியன். 

Many years ago, when I had the fortune of worshipping at this divyadesam – it was Pagal pathu – here are some photos of Uthsavar and azhvar, acaryargal also.

adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
14.4.2020.
No comments:

Post a Comment