To search this blog

Wednesday, October 3, 2018

Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2018


Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2018


The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.



Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   Today 29th Sept 2018 was Sani varam 2  and   at Thiruvallikkeni divyadesam,   there was grand  Purappadu  of Sri Azhagiya Singar.

எவ்வளவு அழகு ! அதி அற்புதமான சுபாவலாவண்யமுடைய திருமேனிமிக அழகான கிரீடம்நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள்-  அழகாக வடிவமைக்கப்பட்ட தோளுக்கு இனியான்”  -   * இன்று மாலை திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.






கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.

எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.  காருண்ய சீலனான எம்பெருமான்தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால்,  எவ்வொறு பகைவர்க்கும்  நாம் அஞ்சவேண்டாவன்றோ?

நீலமணி போன்ற வடிவையுடைய மாய கண்ணன்இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்துபுல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில்,  குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான்.  தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலேபொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை  நகங்களினால் கிழித்த நரசிங்கனதுசீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.:  பேயாழ்வாரின் அமுத வரிகள் .

Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice.  One who has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything, especially that of his foes.  Here are some photos taken during today’s periya maada veethi purappadu. 

adiyen Srinivasadhasan







No comments:

Post a Comment