To search this blog

Saturday, October 13, 2018

Thiruvananthapuram divyadesam ~ Sri Anandha Padmanabaswamy thirukovil


அந்தமில் புகழ் அனந்தபுர நகர் ஆதி தன்னை ~ என சுவாமி நம்மாழ்வாரால் புகழ்ப்பெற்ற திவ்யதேசம் மலைநாட்டு ஸ்தலமான 'திருவனந்தபுரம்’.

கெடுமிட ராயவெல்லாம் கேசவா என்ன * நாளும்
கொடுவினை செய்யும்  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடமுடையரவில்  பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்*
தடமுடை வயல் அனந்தபுரநகர்   புகுதுமின்றே.

அழகான வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரத்திலே தானாகவே விரும்பி, கொடிய நச்சை உடைய அரவத்தை மேல் துயில் கொண்டருளும் பெருமானை  கேசவா என்று கூவி,  அத்  திருப்பதியிலே சென்று புகுந்தால் போதும்; கொடிய இடரென்று பேர் பெற்றவையெயல்லாம், கேசவா வென்று மூன்றெழுத்தைச் சொன்ன வளவிலே கெடும்; கொடுவினைகளை தரும் யமனை சேர்ந்தவர்கள் பக்கலில்  கூட நெருங்கமாட்டார்;    ~   என்பது நம் சுவாமி நம்மாழ்வாரின் வாக்கு.

For   Srivaishnavaites, abodes of Sriman Narayana, more importantly those sung by Alwars, those temples visited by Acaryas, places where they lived, places associated with them are of utmost importance .. .. .. ‘We say “Kovil Thirumalai Perumal Kovil” ~ meaning ‘Thiruvarangam, Thirumala Tirupathi & Thirukachi’ – and there are divyadesams which  impresses by their sheer big size and their association with yore.  One such divyadesam is the Thiruvananthapuram ~ the magnificent abode of Sri Padmanabha Swami, situate in modern day Trivandrum, the capital of Kerala.

The origin of the Temple of Sree Padmanabhaswamy is lost in antiquity. It is not possible to determine with any exactitude, from any reliable historical documents or other sources as to when and by whom the original idol of Sree Padmanabhaswamy was consecrated. The Temple has references in Epics and Puranas. Srimad Bhagavatha says that Balarama visited this Temple, bathed in Padmatheertham and made several offerings. Nammalwar, has sung  ten hymns in praise of Lord Padmanabha. Some well known scholars, writers and historians, like the late Dr. L.A.Ravi Varma of Travancore, have expressed the view that this Temple was established on the first day of Kali Yuga (which is over 5000 years ago). The legends of the Temple are handed down through the centuries. One such legend which finds a place in the old palm leaf records of the Temple, as also in the famous grantha entitled “Ananthasayana Mahatmya”, mentions that it was consecrated by a Tulu Brahmin hermit named Divakara Muni. On the 950th year of Kali Yuga a reinstallation of the idol was done. In the 960th Kali year King Kotha Marthandan built the Abhisravana Mandapam.


Sree Padmanabhaswamy  :  in the form of reclining idol, the marvellous Sree Padmanabha Swamy takes yogic rest on the mighty five hooded serpent Ananthan.  It is not sleep but conscious cosmic slumber with the head positioned to the south and the feet to the north.  Anantha (or the endless) spreads its hoods above the head of the Idol. The three coils represent the three characteristics of mankind Sattva, Rajas and Tamas and its five hoods indicate the Panchendriyas(five senses) or the five elements(Panchabhootas). From the navel of the Lord emerges a lotus on which Lord Brahma, the Creator, is seated. Just below the stretched right arm of the Lord is the Shiva Linga of the Destroyer.

The munificent idol  is made up of a highly complex amalgam termed Kattusarkarayogam and contains within it 12008 Salagramas collected from the bed of the River Gandaki in Nepal.  The sanctum sanctorum has three entrances representing the three stages of times. It is only through those doors that we have darshan of the famous Anantha Padmanabha.



* அந்தம் இல் புகழ் * ~  அழிவில்லாத புகழையுடையனான அவெம்பெருமானை   திருவனந்தபுரமென்னும் திவ்ய தேசத்திலே  ஆதி புருஷனாக  எழுந்து அருளியிருப்பவன் - ஸ்ரீ அனந்தபத்மநாபன்.  இத்திருக்கோவில், கேரளா மாநில தலைநகரமாம் திருவனந்தபுரத்திலே அமைந்துள்ளது.  இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில்  ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.  திருவிதாங்கூர் அரசர்கள் கால முதலே இத்திருக்கோயில் பெரும் புகழுடன் விளங்கி வருகிறது.

A few years ago  in  June 2011 a review of the temple's underground vaults, by a seven-member panel appointed by the Supreme Court of India, began. The estimates suggested that the temple could be the richest in the world; unofficial estimates on the sixth day of the inventory placed the value of contents at close to  100,000 crore (US$22.3 billion). The local rulers (most recently the Travancore Maharajahs) had  sealed immense riches within the thick stone walls and vaults of the temple, over at least a millennium, as offerings to Lord Padmanabhan.  The stock-taking process was ordered by the Supreme Court.  Some of the list of gold inventory found in the temple include golden crowns, 17 kg of gold coins dating back to the East India Company period, gold in the shape of rice trinkets weighing one tonne, 18 ft long golden necklace weighing 2.5 kg, gold ropes, sack full of diamonds, thousands of pieces of antique jewellery studded with diamonds and emeralds, and golden vessels.   The treasure also  includes antique gold ornaments, diamonds and other precious stones, golden crown, golden bow, golden vessels, and other precious stones were found in the secret chambers (Nilavara in temple) of Sree Padmanabhaswamy Temple in Thiruvananthapuram, Kerala.

Even as the count of treasure got  estimated, there were some orchestrated opinion about the ownership of the treasure.  Can you imagine occurring elsewhere to any other property !  How preposterous was that  to debate on whether it should be distributed or taken over by the Govt.  Whose money ?  Who deposited all these ?  For the benefit of whom ?? and who are to decide ???  ~ it belongs to the Temple and to the Lord and none else need to have any opinion on that even .. ..

It inspires awe as one has darshan through the 3 doors of the Emperuman Sree Ananthapadmanabhan in reclining posture.  The divine  atmosphere can only be felt – cannot be brought out in words.  There is a huge stone platform in front of the sanctum sanctorum. Immediately outside the sanctum is a beautiful mandapam with silver plated stone pillars. Outside this mandapam, there is a very beautiful, small sannidhi for Sri Yoga Narasimha.  The temple has huge corridors adorned by  beautiful sculptures – made of both wood and stone.  There is a separate sannidhi for Sri KrishnA.  The temple’s architecture is very different from the traditional Kerala  style.

இந்த திவ்யதேசத்துக்கு பெருமை மேலும் சேர்ப்பது போலே  - விலை மதிக்க முடியாத அளவு, விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைத்த து உலகையே வியப்பில் ஆழ்த்தியாது.  திருவனந்தபுரம், தொன்று தொட்டே புகழ் வாய்ந்த நகரமாக இருந்தது - முதன் முதலில் சேரமான் பெருமாள் என்ற பட்டம் பூண்ட பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர அரசர், கி.பி., 1050ல், பத்மநாப சுவாமி கோவிலுக்கு திருப்பணி செய்வித்தார். குலசேகர ஆழ்வார்  முகுந்த மாலை என்ற பதிகத்தை இத்திருக்கோவில் குறித்து இயற்றியிருக்கிறார்.  இத்திருக்கோவில் காலப்போக்கில் பன்முறை புதைக்கப்பட்டு உள்ளது.    ஸ்ரீ பத்மநாபர் கோவில் ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்தது. தெப்பக்குளம், 25,700 சதுர அடி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. திரு பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானம், அதன் மேல் விமானம், அதற்கு முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபம், மடப்பள்ளி திருச்சுற்று மண்டபம், அபிஸ்ரவண மண்டபம், கோவிலைச் சுற்றி ஆயிரம் விளக்குகள் இருக்கும் மரச்சட்டங்களுடன் கூடிய விளக்கு மாடம் மற்றும் கோவிலின் உட்பகுதி முதலிய அனைத்துமே, ராம மார்த்தாண்ட வர்மா, 1459லிருந்து 1461 வரை திருப்பணி செய்வித்தார்.  

இத்திருக்கோவிலுக்கு வீர தீர பராக்கிரமம் மிக்க மன்னர்கள் பலர் தங்கள் வெற்றிகளை பறைசாற்றும் போது தந்த  செய்திகள் எல்லாம், ஆயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, பத்மநாப சுவாமி கோவிலில் இன்று வரைகட்டுக் கட்டாக வைக்கப்பட்டு இருக்கின்றன.  1425ல், வீர ரவிவர்மர் என்ற மன்னர், பத்மநாப சுவாமி கோவில் உட்புறத்தில் ஒரு ஆவண காப்பகத்தை கட்டி, அவற்றுள் கோவில் ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை வைக்க ஏற்பாடு செய்தார். 1486ல், இரு வகையான கணக்கர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர், கரணக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். அவர், சட்டப்பூர்வமான ஆவணங்களை பாதுகாக்கவும், தயாரிக்கவும் அமர்த்தப்பட்டார்.மற்றவர் பண்டாரக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார்.  இவர், கோவிலுக்கு கொடுக்கப்படும் தங்கம், பணம், விலை உயர்ந்த அணிகலன்கள் முதலியவற்றின் பட்டியல் தயாரிக்கவும், கணக்கு எழுதவும், பாதுகாக்கவும் அமர்த்தப்பட்டார். இவை எல்லாம் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, நம் அரசர்கள் வகுத்த வரன்முறைகள். - காலம்காலமாக வந்துள்ள இச்சொத்துக்கள் யாவையுமே ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமியுடைவை மட்டுமே .. ..

Had the fortune of worshipping at this divyadesam ~ and here are some photos of the temple Gopuram taken by me.

~adiyen Srinivasadhasan
13th Oct 2018.





No comments:

Post a Comment