To search this blog

Sunday, October 28, 2018

Celebrating birth of Sri Bootath Azhwar ~ பெருந்தமிழன் பூதத்தாழ்வார்



ரொம்ப பெருமையாக இருக்கு !  ~  மேடைகளில் பங்குகொள்போர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல் !!  ~  before proceeding,  have you had darshan at Thirukkadanmallai (most probably you had visited this place as a tourist); in case, you had darshan, have you travelled to this place with the prime purpose of worshipping Emperuman at this divyadesam  and the Azhwar who was born at this sthalam  ??


நாம் எதற்கெல்லாம் பெருமை கொள்வோம் ??  ~  பட்டியல் நீளலாம்.. ..  .. தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்று பெருமை கொண்டவர் நம் நாயகன் .. .. பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை உடையவன் - : "பெருந்தமிழன் நல்லேன் பெரிது" என்றும்  பெருமிதம் அடைந்தவர் இவர் .. ..
முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில் ல், ஒரு குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நட்சரத்திலே, எம்பெருமானின்  கதையின் திருவம்சமமாய்  அவதரித்தவர். 

Sri Sthalasayana Perumal Thirukovil is at Thirukkadanmallai ~ in case the name does not ring a bell – it is more famously known as Mahabalipuram (simply Mamallapuram) known for its great architecture.   It is at this divyadesam our Boothathazhwar was born.  Thiru thiruvavathara uthsavam of Bootath Alwar gets celebrated in the month of Aippasi (Oct-Nov).  The temple is one of the 32 Group of Monuments at Mahabalipuram that are declared as UN world heritage sites, but unlike others that are maintained by the Archaeological Survey of India, the temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

During the rule of Mahendravarman I (600 CE – 630 CE), Mahablipuram started to flourish as a centre of art and culture. His patronage helped the creation of a number of the city’s most iconic landmarks. This period of artistic excellence was duly continued by his son Narasimhavarman I (630 CE – 680 CE) and subsequent Pallava kings. Mahabalipuram was already a thriving sea port on the Bay of Bengal before this time. A significant amount of coins and other artefacts excavated from this region also indicate a pre-existing trade relation with the Romans even before it became a part of the Pallava Empire.   Constructed with formidable finesse by the Great Pallavas in 7th century BC, Mahabalipuram symbolises the confluence of Indian history, geography and ancient Indian economy. Historical relevance of Mahabalipuram dates back to the ancient days of Sangam literature and Bhakti movement that flourished here, eventually contributing to the development of Dravidian architecture in Tamil Nadu.

                           ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்'  எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார்.  பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தாம்  ஆழ்வார்கள் என்று சொல்வர்கள். ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே தனி தெய்வம் என்று  எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்.  இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்.  இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்.



                            வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.  அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.

The muthalazhwargal vaibhavam is a very interesting one… the divine  trio came together for the first time at Thirukkovalur on a rainy day when there was lightning accompanied by thunders – in the front passage [idai kazhi] of a house referred as ‘dehali or rezhi’……….. the place being very small – it was good enough for Poigai Azhwar to lie down; when Boothathazhwar joined him, they were able to sit ~ and then came Peyalwar who was invited to their fold saying that ‘one can lie; two can sit while there is sufficient place for all the three to stand’……. After Poigai alwar’s Muthal thiruvanthathi,   Sri Boothathalwar followed – making ‘love as the lamp; eagerness as the oil – the endearing thoughts as the wick to the lamp and the lit the lamp of wisdom’ – Sri Peyalwar having had the benefit of these lights rendered his ‘Moondram Thiruvanthathi’. 

 “Muthal Azhwars (the first among the Azhwars), were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively.  Though necessarily in that order – most years, it would be ‘Poigai azhvar sarrumurai (also of Acaryar Pillai Ulagariyar); next day that of Boothath Azhwar and thence Sri Peyalwar.  This year 2018 it is different – Thiruvonam & Avittam occur twice in the month of Aippaisi ~ Poigaiyar sarrumurai would be on Nov 14th; Sri Boothathazhwar’s would be on Nov. 16th (3oth of Aippaisi).


Here are some photos of Azhwar at Thirukkadanmallai divyadesam taken during last year’s sarrumurai on 29th Oct 2017.

~ adiyen Srinivasadhasan
28th Oct 2018.









No comments:

Post a Comment