Dear
(s)
Today 2nd June 2012, is the 3rd
day of Lord Varadharajar Brahmothsavam and in the morning there was the ‘Garuda
Seva’.
For a
Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at
Kanchipuram. Legend has it that Brahma performed Asvamedha yaga at
mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku
Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma
himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called
Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by
various names, prominent among them being : Devarajar, Devathirajar,
Thepperumal, Varadhar, PerArulalar … The
annual brahmothsavam is now on and today, the 3rd day is the famous Garuda Sevai – when Lord is
taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi. Garuda
was born to Kaashyapar and Vinathai.
At
Kanchipuram, there is the legend of Lord Devathirajar atop Garuda, hides away a
few minutes, going to Sholinghur to give darshan to Dhoddacharyar – the leela vinotham of PerArulalar – popularly
known as Doddayachaaryar Sevai.
More on that on my earlier post here :
http://samptamilspeak.blogspot.in/2011/05/sri-varadharajar-garuda-vahanam-and.html
Here
are some photos taken this morning during the purappadu at
Thiruvallikkeni.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி
தேவப்பெருமாள் சன்னதி' தான் ! பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது
யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு
பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம். காஞ்சியிலே இப்போது பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது.
இன்று [2nd June 2012] மூன்றாம்
நாள்; காலை 'கருட சேவை'.
எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம்
செய்யும் கருடாழ்வார் பெரிய திருவடி என சிறப்பிக்கப்படுகிறார். அழகான பட்டு உடுத்திய கருடனின் மீது பெருமாள் எழுந்து
அருளும் கருட சேவை மிக அழகும் கம்பீரமும் நிறைந்தது. கருடன், காச்யபர் என்கிற மகரிஷிக்கும் வினதைக்கும்
பிறந்தவர். 'வினதை சிறுவன்' என பெரியாழ்வார்
மங்களாசாசனம். வினதையின் மற்றொரு புதல்வன்
அருணன், சூரியனுக்கு தேரோட்டி என்றும் ஐதீஹம்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில்
நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தேவப்பெருமாள் கருடனின் மீது ஆரோஹணித்து
கோபுர வாசலில் வரும் போது, தொட்டாசார்
சேவை என்பது பிரசித்தம். பெருமாள் காஞ்சியில் இருந்து, சோளிங்கபுரம் சென்று, தொட்டாசாருக்கு சேவை சாதித்து திரும்புவதாக
ஐதீஹம்.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்
:
"அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்*
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான்,
- முத்தீ*
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான்றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான். - என மங்களாசாசனம் பண்ணியுள்ளார்.
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் தென்னத்தியூரரான
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் தென்னத்தியூரரான
பேரருளாளப் பெருமான் ‘புள்ளையூர்வான்‘ என கருடன் பட்சியின் மீது எழுந்து
அருளி அடியார்களுக்கு சேவை சாதிக்கிறான்.
இன்று காலை[2nd June 2012] திருவல்லிக்கேணியில்
வரதராஜர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment