திருவல்லிக்கேணி
கோடை உத்சவம்
At Thiruvallikkeni,
there are festivities throughout the year.
During the Summer is celebrated Kodai Uthsavam, when Sri Parthasarathi
used to visit Vasantha Bungalow. The
Kodai Uthsavam takes place for 7 days and on Sat 23.6.12, it was day 4 of the
Uthsavam.
In this Uthsavam, Sri
Parthasarathi and Ubaya Nachimars are taken on procession in separate kedayams. Here are some photos take by me on day 4 of
the Kodai Uthsavam.
திருவல்லிக்கேணியில்
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக
நடைபெறுகின்றன. கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை
உத்சவம்". முன்னாளில் பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு
எழுந்து அருளி இளைப்பாறி,
பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு
அருள்வார்.
இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வேங்கடரங்கம் பிள்ளை
தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்" என்று
அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.
இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி
கேடயத்திலும், உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்" எழுந்து
அருள்வது விசேஷம்.
ஏழு நாள்
நடைபெறும் இவ்வுத்சவத்தில் சனி [23.06.12] அன்று நான்காம் உத்சவம். 'நான்முகன் திருவந்தாதி' சேவிக்கப்பட்டது. புறப்பாடு
சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்.
ஸ்ரீ பார்த்தசாரதி
உபய
நாச்சிமார்
கேட்
மண்டகப்படியில் சாற்றப்பட்ட வஸ்த்ரத்துடன் பெருமாள்
Num Perumal arputha azhagu - photos arumai - Adiyen dhasan - malolan
ReplyDelete