To search this blog

Saturday, September 25, 2021

kainkaryam to Emperuman - வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி

ஸ்ரீவைஷ்ணவம் ஒரு எளிய மார்க்கம்.  எம்பெருமானை நினைத்து, அவனுக்கே கைங்கர்யங்கள் செய்து, அவனடி திருத்தாளினை வணங்கி அவனடி சேர்வது வாழ்க்கையின் இலட்சியம்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை நாம் கை கூப்பி வணங்கி கைங்கர்யங்கள் செய்தல் க்ஷண நேரமும் இடைவிடாமல் இருக்க வேண்டும் என்கிறார் மாறன் சடகோபன் தம் திருவாய்மொழி பாசுரத்தில்.


 

கொரோனா இன்று கட்டுப்பாட்டில் உள்ளதா !  - எங்கெங்கு நோக்கினும் மக்கள் கூட்டம்,  எல்லா இடங்களும் திறந்து விடப்பட்டுள்ளன.  இன்று 25.9.2021  புரட்டாசி சனிக்கிழமை.  - திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகியசிங்கர் புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்திருப்பர் .. .. அய்யகோ, ஆனால்  இன்றோ  அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் புறப்பாடும் கிடையாது; நாம் திருக்கோவிலுக்கு சென்று  சேவிக்கவும் இயலாது !!  - இந்நிலை என்று மாறும் ??  

கொரோனா முன்னரும், பின்னரும், மனிதகுலம் தங்கள் நோய்க்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு குணம் அடைய முயற்சிக்கிறது.   மருந்து  என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.  நோய்வாய்ப்பட வேண்டுமென்று யாருமே விரும்புவதில்லை. அதனால்தான் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற என்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் முடிந்தவரை அதனை விரைவில் மாத்திரைகள் மூலமே  குணப்படுத்த  முயல்கிறோம்.   



அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.  ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.    இது மருந்து மாத்திரை பற்றிய பதிவு அல்ல !  .. .. கொஞ்சம் தமிழ் இலக்கணம்; முக்கியமாக - சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம். 

தமிழ் இலக்கணத்தில் - உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துக்களின் அளவு :  ஒரு மாத்திரை;  நெடில் எழுத்துகள் அளவு -இரண்டு மாத்திரை  !!!  தமிழ் இலக்கணத்தில்  மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும்.  மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.  நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.  எனினும், இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு. இசை பாடும்போதும், ஒருவரை விளிக்கும்போதும், பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு. 

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம் : 

கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,

வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,

பைகொள் பாம்பேறி உறைபரனே, உன்னை

மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.  

படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே! -  எனது கண்களானவை எம்பெருமானாகிய உம்மை   கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து, ஒரு மாத்திரை அவகாசம் கூட இல்லாமல்  க்ஷணகாலமும் இடைவிடாமல் நாள்தோறும் உன்னை மெய்யாகவே காண்பதற்கு  விரும்புகின்றன.  அப்படி இவ்வாறாக எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து பக்தி செலுத்துகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.  திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி  ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம்.  



Uthsavams are great festivities providing opportunities for kainkaryam to Emperuman and Brahmothsavam is grandiose.  Reminiscing the good olden days, here are some photos of  Yanai vahana   purappadu of Sri Parthasarathi Perumal during special brahmothsavam at  Thiruvallikkeni divyadesam on 8.2.2021.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th   Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.       













Friday, September 24, 2021

Purattasi Sani - Sri Azhagiya Singar 2021 - கால சக்கரத்தோடு வெண்சங்கம் கையேந்தினாய்,

Today 25.9.2021 is second Saturday in the month of Purattasi.  For every Purattasi Sani, there would be grand periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikkeni, but sadly, due to Corona restrictions placed by the Govt, there would be no purappadu and we cannot go inside Temple and have His darshan too.  Sri Thelliya Singar in His purappadu coming out of Western Gopuram – and having darshan of His Sangu Chakram would rid us of all sins, diseases and difficulties – we can now pray to Him to provide that opportunity sooner !! 

வாழ்க்கையில் எத்தகைய இடர் படினும் நமக்கு அருமருந்து நம் கோவிந்தனே !!  பூவுலகில் எப்பொழுது தர்மம் தலை சாய்ந்து அதர்மம் பரவுகிறதோ, அப்போதெல்லாம்  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் தர்மத்தை நிலைநாட்ட  திருவவதாரம் செய்கிறார்.   துவாபர யுகத்தின் முடிவில் பூவுலகில் அதர்மங்களும், அக்கிரமங்களும் கோரத் தாண்டவம் புரியத் தொடங்கின. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் அறம் மறந்து, புண்ணியமிழந்து, பாவக்குழியில் வீழ்ந்து உழன்றனர். இதனால் பண்பும், பக்தியும், அன்பும், அறமும் மங்கத் தொடங்கின.  உலகத்தோரைக் காக்க ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக வளர்ந்த கண்ணன் புராணம் மஹாபாரதம் எனும் இதிகாசம்.    பிறக்கும்போதே சங்கு-சக்கர தாரியாக நான்கு திருக்கரங்களுடன் பிறந்தவன் கண்ணன். கருமை நிறத்துடன் பிறந்த கண்ணனே, மூவுலகிற்கும் ஞான ஒளி காட்டும் தீபப்பிரகாசம்! 



இன்று புரட்டாசி சனி இரண்டாம் வாரம்.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகியசிங்கர் புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்திருப்பர் .. .. அய்யகோ, அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் புறப்பாடும் கிடையாது; நாம் திருக்கோவிலுக்கு சென்று  சேவிக்கவும் இயலாது !!  - இந்நிலை என்று மாறும் !!

எம்பெருமானை பல்வேறு திவ்யநாமங்களால் கூவி மகிழ்கிறோம் .. .. 'சங்கு சக்ரதாரி' !  - திருவாழி திருச்சங்குகளைக் கையிலேந்தினவனே! என்றும், பிரளயாபத்திலே உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து ரகூஷித்துப் பிறகு வெளிப்படுத்தினவனே! என்றும், நாராயணனே! என்றும் இப்படிப் பலவற்றையுஞ் சொல்லி அழைக்க ஓடோடி வந்து பக்தர்களை காப்பவன் அவன். 






இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் ஒன்று : 

கால சக்கரத்தோடு வெண்சங்கம்  கையேந்தினாய்,

ஞாலமுற்றும்  உண்டுமிழ்ந்த நாராயணனே என்றென்று,

ஓலமிட்டு நானழைத்தால்  ஒன்றும் வாரா யாகிலும்,

கோலமாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 

பக்தர் தம்மை காக்க, பகைவரையழிப்பதில்  யமன் போன்ற-  அழகிய திருக்கரங்களிலே  திருவாழியோடுகூட  வெளுத்த சங்கத்தை   தரித்திருப்பவனே!; உலகமுழுவதையும்  ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின ஸ்ரீமன் நாராயணனே  என்று  பலவாராகவும்  சொல்லி,  கூப்பிட்டு நான் அழைத்தால்  நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்,  உன்னுடைய தாமரை மலர்போன்ற ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாகநின்றது, என எம்பெருமானின் பெருமைகளை பாடி ஆனந்திக்கின்றார் நம் சடகோபன்.

Reminiscing the good olden days, here are some photos of Purattasi sanikkizhamai  purappadu of Sri Azhagiya Singar at  Thiruvallikkeni divyadesam on 3.10.2015.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th   Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.      










Wednesday, September 22, 2021

Purattasi Revathi 2021 - பச்சைமா மலைபோல்மேனி

Today 22.9.2021 is REvathi nakshathiram in the month of Purattasi – in normal times, there would have been siriya mada veethi purappadu of Sri Ranganathar. The great saint by name Vipra Narayanar, born at Thirumandangudi was known  as Bhaktanghri renu later came to be hailed as  ‘Thondaradippodi Alvar’ due to his devotion to the devotees of Lord. Thondaradipodi alwar  rendered 55 verses in praise of Lord Ranganatha - 10 verses of Thirupalli Yezhuchi and 45 verses of Thiru Maalai.  Thirupalliyezhuchi is recited in every temple to wake up the Lord and rendered during kalasanthi in the morning.  



Before reading further – what is your present wishlist ! – and what would you give up in exchange for retaining the present happiness ?? or for achieving your sought after goals ??  - obviously Thondaradipodigal has a clearer vision, something totally different that what we can ever think of !! 

In this material World, life is all about chasing dreams.  Many people feel as if they're adrift in the world. They work hard, but they don't seem to get anywhere worthwhile.  According to Western theories, the key reason that they feel this way is that they haven't spent enough time thinking about what they want from life, and haven't set themselves smart  goals. After all, would you set out on a major journey with no real idea of your destination? Probably not!  Of all the things people indicated they want more of,  not necessarily in the same order :  Happiness; Money; Freedom; Peace; Joy; Balance; Fulfillment; Confidence, Education, Achievements; Cars, Travel, Fame .. .. and Health !! 

Life is driven by desire !!  -  Desires are states of mind that are expressed by terms like "wanting", "wishing", "longing" or "craving". A great variety of features is commonly associated with desires. They are seen as propositional attitudes towards conceivable states of affairs. They aim to change the world by representing how the world should be, unlike beliefs, which aim to represent how the world actually is. Desires are closely related to agency: they motivate the agent to realize them.  Their fulfillment is normally experienced as pleasurable in contrast to the negative experience of failing to do so. Conscious desires are usually accompanied by some form of emotional response.  

But – in life, desires, goals, satisfaction measures and more could change with phases in life and can be determined by so many variants.  Covid 19 has changed the lives of many and the thinking of almost every one.  The impact of the turning tides of the pandemic can be clearly seen in the way the Aspiration Index has moved. Highest number of people (31.7%) picked Health as their most important aspiration. However, as people deal with losses from the pandemic, emotional helplessness is at the forefront and more importance has been given to Relationship goals. The top two goals are Relationship goals: To save & invest money for children’s education (91.8) and to have long-lasting friendship (89.7). While Wealth is a less important aspiration, housing (88.2) remains the third more important goal.

Aspirations refer to people’s life goals, and research on aspirations has focused on the relative strength of intrinsic aspirations (viz., meaningful relationships, personal growth, and community contributions) versus extrinsic aspirations (viz., wealth, fame, and image).  The Aspiration Index was developed to assess people’s aspirations. There are 7 categories of aspirations with five specific items within each category. The seven categories include: the extrinsic aspirations of wealth, fame, and image; the intrinsic aspirations of meaningful relationships, personal growth, and community contributions; and the aspiration of good health which turned out not to be clearly either extrinsic or intrinsic.   Various approaches to data analyses can be found in research articles such as Kasser and Ryan (1996). 

சிறுவயதில் திருமால் பெருமை என்ற படத்தில் பாடலாக கேட்ட பாசுரம் "பச்சை மாமலை போல் மேனி" எனும் திருவரங்கநாதனின் பெருமை பேசும் தொண்டரடிப்பொடிகளின் பாசுரம்.  

பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சைமாமலையை என  உவமை கூறினார் நம் ஆழ்வார். . ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது என்பது நம் கச்சி ஸ்வாமியின் அற்புத உரை.  இப்பாசுரத்திலே ஆழ்வார் - எம்பெருமானை, 'அச்யுதா" என விளிக்கிறார் .  ‘அச்யுதன்’ என்னும் திருநாமம்-தான் என்றும் நழுவாதவன் என்றும், தன் அடிபணிந்தோரை என்றென்றும் ) நழுவவிடாமல்  காப்பாற்றுபவன்  என்றும் பொருள்படும். 



In  his famed “Thirumaalai”, Thondaradipodi  Azhwar  hails  the Lord of Thiruvarangam  - இதோ இங்கே திருமாலை திவ்யப்ரபந்தத்தில் தொண்டரடிப்பொடிகள் தம் பாசுரம்:

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.  

ஆழ்வாரின் மனதுக்கு இனியான் நம்பெருமாளை  : - அரங்கமா நகருளானே! ;  பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்  பவளம் போன்ற சிவந்த திருவாயையும்  செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய அச்சுதனே!  நித்யஸுரிகளுக்குத் தலைவனே!  இடையர் குலத்தில் தோன்றிய இளங்குமாரனே  என்றெல்லாம் எனது  வாயினாற் சொல்லுவதனால், அடியேனுக்கு  உண்டாகின்ற இந்த அநுபவ ருசியை  விட்டுவிடும்படி, யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று அங்கே இந்திரலோகத்தை  ஆளுகின்ற உயர்பதிவியாம், அந்த அநுபவருசியை அடைவதாயிருந்தாலும், அதனையும்  விரும்பமாட்டேன்.  அரங்கநாதனின்  திருவடி தாள் பணிந்து அவரது  திருநாமங்களை பாடி, கைங்கர்யம் செய்யும் பலன் தான் வேண்டும் என்று வேண்டுகிறார்.

Thirumal Perumai (lit. Pride of Sriman Narayana (Maha Vishnu)) was released in 1968, directed by AP Nagarajan, starring Sivaji Ganesan and Padmini.  The music was by KV Mahadevan.   The movie was in 3 spell bounding parts of different people experiencing the divine grace of Lord Sriman Narayana. Here is the beautiful song of the verse ‘pachaimaamalai pol meni’ by TM Soundararajan :  https://www.youtube.com/watch?v=MFQvEfKgaLk

Reminiscing the good olden days, here are some photos of Sri Ranganathar Revathi purappadu of 25.5.2014 at Thiruvallikkeni divyadesam.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22nd  Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.     







Tuesday, September 21, 2021

Thiruallikkeni Pavithrothsava Sarrumurai 2021 - மறப்பின்மை யான் வேண்டும் மாடு.

 

Today 21.9.2021 is the concluding day (Sarrumurai) of Thirup Pavithrothsavam being conducted at Thiruvallikkeni divaydesam.  There would be purnahuthi of the homams conducted – daily there is rendering of Vedas and Thiruvaimozhi.



சண்டை சச்சரவுகள், பிணக்கங்கள் இல்லாத வீடில்லை.  புலவி நுணுக்கம் என்று ஒரு அத்தியாயம் திருக்குறளில் - இதில் ஊடல் (செல்ல பிணக்கு)  உண்டாவதற்குக்   நுட்பமான காரணங்கள் உரைத்துள்ளார்  திருவள்ளுவர். 

உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.   

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.   

முன்கண்ட திருக்குறளின் உரை :     கணவன் தனது அன்பு மனைவியிடம், நின்னையே நினைத்தேன் என்றான்.  அதற்க்கு இன்புறாமல் - ஏன் மறந்தீர்!  மறந்தால் அல்லவோ நினைப்பு என பிணக்கம் கொண்டாளாம் காதலி.  மனம், நினைவுகள், மறத்தல்  - போன்றன பல மனித இயல்பு !  உள்மனம், நனவிலி மனம் அல்லது நனவில் மனம் (Unconscious / subconscious  minds) மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல். இவை  பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதன.   கசப்பான அனுபவங்களும், துன்பங்களும் விரைவில் மறக்கும்படி மனதின் அமைப்பு உள்ளது. அவைகள் மறக்காமல் இருந்தால் அவை மனிதனை செயலற்றவனவாக்கிவிடும்.  




ஆழ்வார்கள் எம்பெருமானிடத்தில் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டவர்கள்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் உடைய பரமபோக்யமான திருக்குணங்களிலே முழுமையாக  ஆழ்ந்த ஸ்வாமி   நம்மாழ்வார்  - எம்பெருமானிடம் 'மறப்பின்மை' அருளவேணுமென வேண்டியது - எம்பெருமானது  திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனை' !!!  

With age, one’s memory starts failing ! ‘brain-fade’ !  .. .. I still remember so vividly that Deodhar Trophy finals at Chepauk on 14.9.1980 – Krish Srikkanth, the darling of the crowd opened with V. Sivaramakrishnan, the tall left-hander.  Thirumalai Echambadi Srinivasan walked in at 0/1 and played a scintillating innings of 129, perhaps much better than IPL innings we see these days ! – no Cricket post this – often these days, I forget lot of things – mobile charger, laptop charger, keys and more !  .. ..

Memory refers to the processes that are used to acquire, store, retain, and later retrieve information. There are three major processes involved in memory: encoding, storage, and retrieval. Human memory involves the ability to both preserve and recover information we have learned or experienced. As we all know and have experienced too,  this is not a flawless process. Sometimes we forget or misremember things.  Memory problems can range from minor annoyances like forgetting where you left your  vehicle  keys to major diseases  that affect the quality of life and the ability to function. Memory slips are aggravating, frustrating, and sometimes worrisome.   

Forgetfulness is a persistent failure to remember. It results from changes in the brain and can be a normal part of aging or a symptom of another condition or disease. When you experience forgetfulness, you may find it harder to recall information or events, learn new things, or form new memories.  .. .. what would you pray to God – on forgetfulness !! – Swami Nammalwar certainly has better thoughts !  

இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் :  

மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது

பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்,-மேலால்

பிறப்பின்மை பெற்று   அடிக்கீழ்க்  குற்றேவலன்று,

மறப்பின்மை யான் வேண்டும் மாடு.  

மறப்பின்மை யான் வேண்டும் மாடு :  எம்பெருமானே !  திருமாலே! உன்னுடைய பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;  இனிமேல் வீடு பேறு  எனும் பிறப்பு இன்மை பெற்று உந்தன்  திருவடிவாரத்திலே  கைங்கரியம் பண்ணுவது  அடியேன் தங்களிடம் யாசிக்கும் செல்வமன்று !!உந்தன்  திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்ஸை  அடியேன் எந்த க்ஷணமும் மறக்காமல் நிற்கும் நித்யானுபவ   விஷயமாக்க வேணும் ;  உன்னை மறவாதிருத்தல்  என்பதே தான் எப்போதும்  ஆசைப்படும் செல்வம் என உரைக்கின்றார் சுவாமி நம்மாழ்வார். .

Reminiscing the good olden days, here are some photos of Sri Parthasarathi Perumal Pavithrothsava purappadu   Thiruvallikkeni divyadesam on  21.8.2010.   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21st  Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.