To search this blog

Tuesday, August 13, 2019

Swami Aalavanthar & Veeranam lake ~ ஸ்வாமி ஆளவந்தாரும் வீராணம் ஏரியும் !


இன்று (13.8.2019) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**  .. ..   
Sri Alavandhar @ Periamet [pic courtesy Kannan swami]
At Chennai, it has rained little – residents are still  worried about water shortage.  Every street we see water tankers and people running after them with colour colour plastic pots.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, there is another important water source that supplements daily water supply to the city and that is more than two hundreds of kilo meters away……

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். 

“I take you all on time-machine (in a boat) to a period aeons ago … started a great novel written in 1950” … the wonder Ponniyin Selvan of Kalki – much happens here  – the story  starts with the description ‘bounded by Chozha kingdom and Thondainaadu, nearer ThillaiChirrambalam is a vast ocean-like lake ……….-and on that 18th day of Aadi – a young horse rider  ‘VanthiyaThevan’ was …… ’ here are few lines from that great novel : 

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.  ஆஹா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?

Wonder what the description is all about ~ it is the immortal writing of Kalki ‘Ponniyin Selvan’ novel.  The lake spoken about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th  century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River.

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.  1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.

அமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார்.  அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார்.   இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை.    அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !!

In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed) .. in recent decades much water has flown in concrete pipes becoming hotly debated corruption topic.  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  From  Veeranam lake in Cuddalore from which water is brought in by 230 km long pipeline.   The Veeranam project, to supply water to Chennai, was conceived in 1967; later got mired in rampant corruption; once there were so many pipes lying unutilized in the city that were synonymous with the corruption in the project .  The project's completion in 2004 was a major political victory for the AIADMK government of the time due to the project's long history of corruption and politicking. At some point of time, water started flowing from the lake to Chennai.  


Sri Veeranarayana Perumal Kovil - Alavanthar Avathara sthalam – Kattumannar Kovil.
Sri Alavanthar at Avatharasthalam 

Sri Alavanthar @ Thiruvallikkeni

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.  ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர்.  நாதமுனிகளின் பேரன்.

நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :

நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய*  இராமானுசனென்னைக் காத்தனனே.

-  மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று,  இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக் காத்து அருள்வார்.

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி  உள்ள இடத்தில்  உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.

வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.  ஆளவந்தார்  அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம்,  மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.

Now getting back to the lake, Sri Vaishnavaites have more to remember and like  of this. The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  It is here that our Acharyars Nathamunigal and later Sri Alavanthar were born. Yamunaaryar [Alavandar] born in Aadi Uthirada nakshathiram, was a genius – a child prodigy known for his prowess  of eka-santha–graha (remembering forever by learning only once). He was known for his sparkling intelligence, didactic logic and exceptional devotion to Sriman Narayanan.  His defeating a much learned Akkiyalvan is very famous.  After the debate, the Queen hailed Yamunar as 'Alavandar'-' one who came to rule /  save me'.

                      He gave our Sampradhayam, priceless treasure-trove of 8 works of which most important are the : Chatusloki on Pirattiyar; Sthothra Rathinam extolling Emperuman; Sri Geethartha Sangraham, which formed the basis for Udayavar’s Gita Bashyam. He identified and gave us the Greatest of Acharyas – ‘Sri Ramanujar’ as he spontaneously called Udayavar ‘He is the First of all -   'ஆ முதல்வனிவன்'  [aa muthalvan ivan]’. 

~ adiyen Srinivasa dhasan.
13th Aug 2019.

Monday, August 12, 2019

Thiruvallikkeni Aadi Ekadasi - Sri Parthasarathi purappadu 2019


திருவல்லிக்கேணி திவ்யதலத்திலே இன்று  ஆடி மாதத்து ஏகாதசி ~ ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட  வீதி புறப்பாடு.   நம் பார்த்தசாரதி திவ்யமங்கள ஸ்வரூபனாய் ஜாஜ்வல்யமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இன்று ஆளவந்தார் உத்சவத்தில் எட்டாம் நாள் - திருவாய்மொழி எட்டாம் பத்து  சேவிக்கப்பெற்று, வீதிதனில் மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி.  இதோ ஸ்ரீபேயாழ்வாரின் அற்புதவரிகள் :


கலந்து மணியிமைக்கும் கண்ணா * நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும்*  - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.

எம்பெருமான் அழகுக்கு அழகு சேர்ப்பவன்.  ஆபரணங்களும் புஷ்பங்களும் வஸ்த்ரங்களும் அவனுக்கு சாற்றப்பெறுவதன் மூலம் அழகு பெறுகின்றன. 

ஸ்ரீகௌஸ்துப மணி  கலந்து விளங்காநின்ற கண்ணபிரானே!; மரதக ரத்னமானது  ஒளிப்பரப்பையுடைத்தாய்க் கொண்டு  உனது திருமேனியை ஒத்திராநின்றது,  அழகாக விளங்குகின்ற கொத்துகளிலே வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற திருத்துழாய் மாலையணிந்த  ஸர்வேச்வரனாகிய உன்னை ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.  அத்தகைய அருமைபெற்ற எம்பெருமான் நமக்கு தரிசனமளித்தது என்னே நம் பாக்கியம்.  [கச்சி ஸ்வாமிகள் உரை - திராவிட வேதா - நன்றி!]

Today 11.8.2019 is Aadi Ekadasi.  In the evening after Alavanthar goshti, Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu at Thiruvallikkeni.  Here are some photos taken during the purappadu.

~ adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]











Sunday, August 11, 2019

Thiruvellarai thirumanjanam 2019


                                  திருவெள்ளறை  ஒரு சிறப்பான  திவ்யதேசம்.   திருப்புண்டரீகாக்ஷ  பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண்பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதிவெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான மதில்கள் உடைய கோட்டை போன்ற பெரிய கோவில்.  பிரகாரம் சுத்தமாகவும் மணம் கமழும் பூக்களை உடைய நந்தவனத்துடன் மிளிர்கிறது.  கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது.  கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல மற்றொரு கோபுரம், திருக்குளம், பலிபீடம் த்வஜஸ்தம்பம் ஆகியன உள்ளன.  இந்த பலி பீடத்திற்கு கூட விசேஷ திருமஞ்சனம் நடைபெறுமாம்.

இந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் "சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிதுவாகும்  அழகனே! காப்பிட வாராய்" என  பத்து பாடல்கள்  மங்களாசாசனம்  செய்துள்ளார்.   திருமங்கை ஆழ்வார்  இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார்.

திருவல்லிக்கேணி திருமஞ்சன குடம் - ஸ்ரீ கோபி சுவாமி



திருமஞ்சனக்குடத்துடன் வீதி உலா - திவ்யதேசங்களிலும் ஏனைய வைணவ திருத்தலங்களிலும் வாசம் செய்வோர்க்கு இது ஒரு தினசரி நிகழ்வு.  முன்பெல்லாம் திருவல்லிக்கேணியில் அதிகாலை திருமஞ்சனகுடம் செல்லும்.  கைரவிணி திருக்குளத்தில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் எம்பெருமானின் திருமஞ்சனத்திற்க்காக எடுத்துச் செல்லப்படும்.  எனது சிறிய வயதில், இக்கூட்டம் ஆழ்வான் யானை மீது எடுத்துச் செல்லப்படுவதை கண்ணுற்று இருக்கிறேன்.  முக்கிய நாட்களில் வேத பராயணத்துடன், திருக்கோவில் மரியாதைகளுடன், திருமஞ்சன குடம் திருவீதி வலம் வரும். 

திருமஞ்சனம் ஸ்ரீவைணவ திருத்தலங்களிலே  எம்பெருமானது திருமேனிக்கு திருநீராட்டு சிறப்பாக நடைபெறும் வைபவம். நம் பெரியாழ்வார் தம் பெரியாழ்வார் திருமொழியிலே -  திருவாய்ப்படியில் வளர்ந்த கண்ணபிரான் தனது பால்யத்தில், செய்யுட் லீலைகள் எல்லாவற்றையும்  புகழ்ந்து, திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற, உத்தமபுருஷனே! - வந்து திருமஞ்சனம் கண்டு அருள வேணும் என விழைகிறார்.
திருக்கச்சி தேவாதிராஜர் திருமஞ்சன வைபவம்

இதோ முகநூலில் நண்பர் புகல் மச்சேந்திரனின் பதிவில் இருந்து சில விஷயமும், படங்களும்.  : திருவெள்ளரை புண்டரிகாட்ச பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வடதிருக் காவேரியிலிருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் கொண்டு செல்லபட்டது. இந்த ஆண்டு திருவெள்ளரை கோவில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைப்பெற்றது..இதில் விசேஷம் -  திருமஞ்சனத்திற்கான நீர் ஸ்ரீரங்கம் வடதிருகாவிரியிலிருந்து எடுத்து செல்லப்பட்டதே !  ~  ஸ்ரீரங்கத்திலிருந்து திருவெள்ளரை கிட்டதட்ட 22 கி.மீ தூரம்.   ஸ்ரீரங்கம் கோவிலிருந்து 16 வெள்ளி குடம் 3 பெரிய தாமிர குடம் என மொத்தம் 26 நபர்கள் கால்நடையாக காவிரி நீரை சுமந்து கொண்டு திருவெள்ளரையை சென்றடைந்தனர். குடம் நாம் நினைப்பது போல பிளாஸ்டிக் குடம் மாதிரி லேசான குடமும் அல்ல..நல்ல அழுத்தமான குடம் அதில் நீருடன் - எடுத்துச்செல்வது மிக கடினமான செயல்.  

புத்தம் புதிய தார் ரோட்டில் 22 கி.மீ சாலை வழியாக காலில் செருப்பில்லாமல் காலை 7 மணியளவில் கொள்ளிடத்தில் புறப்பட்டு 9.20 க்கு திருவெள்ளறையை அடைந்தனர். கைங்கர்யபரர்கள்  எங்கும் ஓய்வு எடுக்காமல் ஒரே நடையாக கோவிலை சென்றடைந்தனர்..




ஆண்டாண்டு காலமாக தொடரந்து நடந்து வரும் மிக பெரிய கைங்கர்யம்  இது.  சலிப்பில்லாமல் உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் மனதில் அரங்கனை சுமந்து கொண்டு தோளில் திருக்குடங்களுடன் இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கைங்கர்யபரர்களுக்கு எங்களின் பணிவான  நமஸ்காரங்கள்.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
செய்தி/ படங்கள்:  நன்றி புகல்  மச்சேந்திரன்.
11.8.2019

Saturday, August 10, 2019

நம் அசார்யர் ஸ்வாமி ஆளவந்தாரும் ~ தூதுவளை கீரையும் !!


இன்று பூவிருந்தவல்லி திருக்கச்சிநம்பிகள் திருக்கோவிலில் பெருமாளை செவிக்கும் வாய்ப்பு கிட்டியது.  திரு சௌரி பட்டர் அன்புடன்வரவேற்றார்.  புஷ்பவல்லி தாயார் சந்நிதியில் செவிக்கும் பொழுது ஒரு அம்மையார், ஆசார்யனுக்கு  "_____  கீரை" சமர்பித்துள்ளேன் என்றார்.  மடப்பள்ளி அல்லால் சந்நிதியில் கீரைக்கு என்ன வேலை என்று நினைத்தால் மேலே படிக்கவும் .. .. .. ஸ்ரீவைணவர்கள் பலமுறை கேட்ட சம்பவம்தான் ~ எனினும் பொருள் அல்லாத என்போன்றோரும் மறுபடியும் எழுதத்  தூண்டும் ஒரு முக்கிய நிகழ்வு அது.

Every heard of  Solanum trilobatum !  it is a leafy green plant is full of thorns, including the leaves.  Perhaps what is seen behind Acaryar is not ‘thiruthuzhai’ but the magic herb of which some of you might be surprised to know that it had a role in Srivaishnavism.  

For a  Srivaishnavaite, Acharyar leads and guides one to ultimate  Sriman Narayana.  Our glorious Guru parampara emanated from the Holy feet of Sri Periya Perumal, .. .. and after Swami Nammalwar, it was  Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal, Aalavanthar, Periya Nambi, Emperumaanar, .. …. .. The annual avathara uthsavam of Swami Alavandhar is now on – 13.8.2019 is his sarrumurai day – Uthiradam in the month of Aadi.

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை நடுவில் நாயகமாய் திகழ்வோர் ஸ்ரீமன் நாதமுனிகள், பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.


தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது.  இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும்.  இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று.   உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.  தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.

நம் ஆசார்யன் சுவாமி ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன்.  ஆளவந்தார் தமது சிறு வயதில், அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வான் என்கிற செறுக்குடைய  பெரிய பண்டிதரை வாதப்போரில் தோற்கடித்தார். இந்த போட்டி நடக்கும் சமயம்   அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார்,  அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள்.   இவ்வாறாக ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், அரசாங்க விஷயங்களிலும் மற்ற விஷயங்களிலுமே மனதையும் நேரத்தையும் செலவிட, இவரை திருத்திப்பணி கொள்ள   மணக்கால் நம்பி அரண்மனைக்கு தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். பல மாதங்கள் பின், திடீர் என்று  கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “சில நாட்களாக  ஏன் தூதுவளை கீரை இல்லை?” என  வினவ ஆளவந்தாரை சந்தித்த நம்பி  உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.  ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட.  ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.

ஆளவந்தார்  அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ரரத்னம்,சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.

Solanum trilobatum, (தூதுவளை), is  the herb referred at first – it is a green  herb that can be consumed by mildly frying it in oil or ghee and then grinding it. It is this glorious thoothuvalai that played a major role in the life of Alavanthar and eventually in the life of all Srivaishnavaites. 

Here are photos of Aalavanthar at Poonamallee – Thirukachi Nambigal Sri Varadharaja Perumal thirukovil. 

Greens would refer to “கீரை” - leaf vegetables such as collard greens, mustard greens, spring greens, winter greens, spinach,  and more .. ..    The herb can be stored in powdered form by drying the leaves under shade and making a powder out of it. It is used to treat fever and common cold.  The plant is full of thorns, including the leaves. It is important to remove these thorns before cooking as the thorns are considered to be mildly toxic.

~adiyen Srinivasa dhasan
10th Aug 2019.