இன்று
பூவிருந்தவல்லி திருக்கச்சிநம்பிகள் திருக்கோவிலில் பெருமாளை செவிக்கும் வாய்ப்பு கிட்டியது. திரு சௌரி பட்டர் அன்புடன்வரவேற்றார். புஷ்பவல்லி தாயார் சந்நிதியில் செவிக்கும் பொழுது
ஒரு அம்மையார், ஆசார்யனுக்கு
"_____ கீரை" சமர்பித்துள்ளேன்
என்றார். மடப்பள்ளி அல்லால் சந்நிதியில் கீரைக்கு
என்ன வேலை என்று நினைத்தால் மேலே படிக்கவும் .. .. .. ஸ்ரீவைணவர்கள் பலமுறை கேட்ட சம்பவம்தான்
~ எனினும் பொருள் அல்லாத என்போன்றோரும் மறுபடியும் எழுதத் தூண்டும் ஒரு முக்கிய நிகழ்வு அது.
Every
heard of Solanum trilobatum ! it is a leafy green plant is full of thorns,
including the leaves. Perhaps what is
seen behind Acaryar is not ‘thiruthuzhai’ but the magic herb of which some of
you might be surprised to know that it had a role in Srivaishnavism.
For
a Srivaishnavaite, Acharyar leads and
guides one to ultimate Sriman Narayana. Our glorious Guru parampara emanated from the
Holy feet of Sri Periya Perumal, .. .. and after Swami Nammalwar, it was Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal,
Aalavanthar, Periya Nambi, Emperumaanar, .. …. .. The annual avathara uthsavam
of Swami Alavandhar is now on – 13.8.2019 is his sarrumurai day – Uthiradam in
the month of Aadi.
ஸ்ரீ
வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம்
பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை நடுவில் நாயகமாய்
திகழ்வோர் ஸ்ரீமன் நாதமுனிகள், பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர்
என்கிற ஆளவந்தார்.
தூதுவளை
(Solanum trilobatum) என்பது
மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும்
சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும்.
இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும்.
இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக்
கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய
தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும்
திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.
நம்
ஆசார்யன் சுவாமி ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில்
வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ஆளவந்தார் தமது சிறு வயதில், அரச சபையில் பல பண்டிதர்கள்
முன்னிலையில் ஆக்கியாழ்வான் என்கிற செறுக்குடைய
பெரிய பண்டிதரை வாதப்போரில் தோற்கடித்தார். இந்த போட்டி நடக்கும் சமயம் அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள்.
மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அவர்
ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர்
வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்”
என்றாள். இவ்வாறாக ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட
ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், அரசாங்க விஷயங்களிலும் மற்ற விஷயங்களிலுமே
மனதையும் நேரத்தையும் செலவிட, இவரை திருத்திப்பணி கொள்ள மணக்கால் நம்பி அரண்மனைக்கு தினமும் தூதுவளைக்
கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். பல மாதங்கள் பின், திடீர் என்று கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார்.
ஆளவந்தார் ஏன் “சில நாட்களாக ஏன் தூதுவளை கீரை
இல்லை?” என வினவ ஆளவந்தாரை சந்தித்த நம்பி உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம்
இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க
வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
தினமும்
நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன்,
படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின்
உட்பொருளில் திளைத்த ஆளவந்தாருக்கு ’பரமனே
உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச்
சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே”
என்றார். ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும்
கூட. ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே
இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து
பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான்
திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.
ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் " எட்டு" - இவற்றுள்
ஸ்தோத்ரரத்னம்,சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம்,
மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.
Solanum
trilobatum, (தூதுவளை), is the herb referred at
first – it is a green herb that can be
consumed by mildly frying it in oil or ghee and then grinding it. It is this
glorious thoothuvalai that played a major role in the life of Alavanthar and
eventually in the life of all Srivaishnavaites.
Here
are photos of Aalavanthar at Poonamallee – Thirukachi Nambigal Sri Varadharaja
Perumal thirukovil.
Greens
would refer to “கீரை” - leaf vegetables
such as collard greens, mustard greens, spring greens, winter greens, spinach, and more .. .. The herb can be stored in powdered form by drying the leaves
under shade and making a powder out of it. It is used to treat fever and common
cold. The plant is full of thorns,
including the leaves. It is important to remove these thorns before cooking as
the thorns are considered to be mildly toxic.
~adiyen
Srinivasa dhasan
10th
Aug 2019.
No comments:
Post a Comment