திருவல்லிக்கேணி
திவ்யதலத்திலே இன்று ஆடி மாதத்து ஏகாதசி ~
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி
புறப்பாடு. நம் பார்த்தசாரதி திவ்யமங்கள ஸ்வரூபனாய்
ஜாஜ்வல்யமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இன்று ஆளவந்தார் உத்சவத்தில்
எட்டாம் நாள் - திருவாய்மொழி எட்டாம் பத்து
சேவிக்கப்பெற்று, வீதிதனில் மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி. இதோ ஸ்ரீபேயாழ்வாரின் அற்புதவரிகள்
:
கலந்து மணியிமைக்கும் கண்ணா * நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும்* - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்
கோமானை,
அந்திவான் காட்டும் அது.
எம்பெருமான் அழகுக்கு
அழகு சேர்ப்பவன். ஆபரணங்களும் புஷ்பங்களும்
வஸ்த்ரங்களும் அவனுக்கு சாற்றப்பெறுவதன் மூலம் அழகு பெறுகின்றன.
ஸ்ரீகௌஸ்துப மணி கலந்து விளங்காநின்ற கண்ணபிரானே!; மரதக ரத்னமானது ஒளிப்பரப்பையுடைத்தாய்க் கொண்டு உனது திருமேனியை ஒத்திராநின்றது, அழகாக விளங்குகின்ற கொத்துகளிலே வண்டுகள் ரீங்காரம்
செய்யப்பெற்ற திருத்துழாய் மாலையணிந்த ஸர்வேச்வரனாகிய
உன்னை ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.
அத்தகைய அருமைபெற்ற எம்பெருமான் நமக்கு தரிசனமளித்தது என்னே நம் பாக்கியம். [கச்சி ஸ்வாமிகள் உரை - திராவிட வேதா - நன்றி!]
Today
11.8.2019 is Aadi Ekadasi. In the
evening after Alavanthar goshti, Sri Parthasarathi Perumal had periya mada
veethi purappadu at Thiruvallikkeni.
Here are some photos taken during the purappadu.
~
adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
No comments:
Post a Comment