மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:
அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!
பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்? அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!
Dinamalar : 17th July 2011 : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611
To search this blog
Sunday, July 17, 2011
Thursday, July 14, 2011
Lord Koodal Azhagar Thirukovil at Madurai and Ashtanga Vimanam
Recently went to Madurai and had the fortune of worshipping ‘Koodal Azhagar”. Madurai is known as Koodal Nagar and this temple, one amongst the 108 Sri Vaishnava Divyadesam is located very close to the Bus stand / Railway Station. Lord is known as Koodal Azhagar and consort is Maduravalli thayar.
The vimana here is renowned as ‘Ashtanga vimana’ – 125 ft high with kalasam of 10 ft. It has 3 stages. The vimanam which can be seen from many parts of Madurai can be seen in proximity as there are steps leading to this inside the temple and devotees are allowed to go up and see the vimanam as also have darshan of Lord Suryanarayanar and Lord in reclining posture. Here are some photos.
சமீபத்தில் மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றேன். பாண்டி நாட்டு தலை நகரமாக விளங்கிய கூடல் மாநகரில் பஸ் ஸ்டாண்டு / இரயில் நிலையம் அருகிலேயே " கோழியும் கூடலும் கோவில் கொண்ட " என மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசம் அமைந்துள்ளது. இத் திருத்தலத்தில்தான் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அருளிச் செய்தாராம்.
காலை 06/30 மணியளவில் கோவில் சென்றதால் அதிக மனிதர்கள் இல்லாமல் மூலவரை நன்கு சேவிக்க முடிந்தது. மூலவர் பிரம்மாண்டமாய் வீற்று இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உத்சவர் அழகுற அவரருகே எழுந்து அருளி உள்ளார். சன்னதி நல்ல வெளிச்சத்துடன் மூலவரை நன்கு சேவிக்க ஏதுவாய் அமைந்துள்ளது. சன்னதி சற்றே மேடான பகுதியில் அமைந்து உள்ளது. சுற்றி அழகான பிரகாரம் உள்ளது. திருச்சுற்றில் திவ்ய தேச எம்பெருமான் படங்கள் அழகுற மிளிர்கின்றன. அடுத்த பிரகாரத்தில், சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. அவரை தரிசித்து மேலும் இடப்புறம் சென்றால் தாயார் தனிக்கோவில் நாச்சியார் ஆக எழுந்து அருளி உள்ளார். மதுரவல்லி தாயார் என திருநாமம். வெளிப்பிரகாரத்தின் மறுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் நந்தவனமும் உள்ளன.
இத் திருத்தலத்தில் அஷ்டாங்க விமானம் வெகு பிரசித்தி. இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என வழங்கப்படுகிறது. மதுரையின் பல இடங்களில் இருந்தும் இந்த உயர்ந்த விமானம் சேவை ஆகிறது.
கோவிலுக்குள் படிகள் வாயிலாக மேல் தளத்துக்கு சென்று இந்த விமானத்தை சேவிக்க வழி உள்ளது. விமானத்தின் முதல் தட்டில் நின்ற திருக்கோலத்தில் சூர்யநாராயணரும், அடுத்த தளத்தில் சயனித்த திருகோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளும் எழுந்து அருளி உள்ளனர். இவை வர்ணம் பூசப்பெற்ற திருமேனிகள்.
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Monday, July 11, 2011
பெரியாழ்வார் சாற்றுமுறை. Periyaazhwaar Satrumurai at Thiruvallikkeni 2011
நேற்று - ஞாயிற்று கிழமை 10-07-2011 - 'நல்லானியில் சோதி நாள்" - பெரியாழ்வார் சாற்றுமுறை. பெரியாழ்வார் வெள்ளி யானை வாகனத்திலும் ஸ்ரீ அழகியசிங்கர் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருளினர்.
பெரியாழ்வாரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும்- பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர். வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சார்த்தி கைங்கர்யம் செய்து வந்தார்.
பாண்டிய மன்னன் வித்வான்களைத் திரட்டி பரம்பொருள் யாது என்று நிரூபணம் செய்ய ஒரு போட்டி ஏற்பாடு செய்து அதற்குப் பரிசாக ஒரு பொற்கிழியைக் கட்டி வித்வான்களை அழைத்து சபை கூட்டினான். விஷ்ணு சித்தர் ஸ்ரீமன் நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந் நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பர தத்துவத்தை நிர்ணயம் செய்ய கிழி தானாக இவர் முன்னால் தாழ்ந்ததாம். இதைக் கண்ட அரசனும் வித்வான்களும் ஆழ்வாரை வணங்கி, அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டு களிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டு பரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.
பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்". வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் என திருப்பல்லாண்டைப் பற்றி மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப் பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*
ஆழ்வார் பெருமாளைக் கண்ணுற்றதும் அவருக்கு ஒரு குறைவும் வரக்கூடாது என்று அவரது திருமேனி அழகும் அவரது செல்வங்களும் என்றென்றும் பல்லாண்டு வாழ வேண்டும் என மங்களாசாசனம் செய்ததே திருப்பல்லாண்டு! விஷ்ணு சித்தர் 'பெரியாழ்வார்' ஆனதை நம் ஆச்சார்யர் மணவாள மாமுனிகள் தமது ‘உபதேச ரத்தின மாலையில் ’ இவ்வாறு அழகுற நவில்கிறார் .
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டாபிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டாபிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பெரியாழ்வார் பாடிய படியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனை நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவது நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும்.
திருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Gopura vasalil Periyaazhwaar
Gopura vaasalil Azhagiya singar Garuda sevaiyil
Azhagiya singar kudaiyudan
Gangaikondan mandapathil Perumal
Gangaikondan mandapathil Aazhwaar.
10th July 2011 was a very significant day – The Sunday saw the festivity of celebrations of ‘birth celebrations of Periyazhwaar’.
In Triplicane, there was the veedhi purappadu [procession] of Periyaazhwaar in yaanai vahanam and Lord Azhagiya Singar atop the Garuda vahanam.
Periyaazhwaar was born as ‘vishnu chithar’ at Sri Villiputhur. He was doing floral service to the Lord Vada Bhathrasayee. With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan. He was honoured by the King and was taken around atop bridled elephant. To honour him Lord Sriman Narayanan alongwith Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours as would do any normal human being, started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner. Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the big among all others.
His renditions are “Thirupallandu” and “Periyazhwaar Thirumozhi”. Though they were not the ones made first, in Sri Vaishnavism, they are considered to be the initial ones in ‘Naalayira Divyaprabandham’ compiled by Sriman Naathamunigal and everytime ‘Naalayira Divyaprabandham’ is rendered, it begins with ‘Thirupallandu’ only.
Posted above are some photos taken during the purappadu yesterday at Thiruvallikkeni
Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
Wednesday, July 6, 2011
Sadhabishegam Celebrations of Dr TS Ramaswamy Iyengar
Dr T. S. Ramaswamy is a well known person in Thiruvallikkeni. He is a Senior Lawyer respected for his legal acumen and his friendly attitude towards one and all. Over the years he has endeared himself to all. He has promoted and has been part of many Socio religious groups including Probus Club, Thirumal Adiyar Kuzham and more.
He has done yeoman service to Srivaishnavaites and has been a champion of Thennacharya Sampradhayam. He has successfully handled many sampradhaya related cases in Court. In his early age, he has organized coaching camps and has been instrumental in training some good cricketers. He has patronized many scholars and is always keen on doing something for the Society, especially in the field of education. Age was not a deterrent to his learning and in his 70s he completed a degree course in Vaishnavism in University of Madras .
His Sadhabhishegam [81st Birthday] was celebrated at Triplicane on 3rd July & 4th July – 2011. This was attended by a large group of people which included many advocates, Sri vaishnava scholars, cricketers and locals.
Whilst 4th (Monday) was intended to be the Muhurtham and more of a family function, there was grand celebration on Sunday 3rd of July.
The evening started with Divya Prabhandam music by Mambalam Kothai Kuzhu. At 04.25 pm was the Mangalasasanam – a conglomeration of Saints, Scholars and others. The programme was compered by Dr Mathi Srinivasan. The programme started with prayer sung by Mrs Lakshmi Ramaswamy, wife of Dr TS Ramaswamy.
His Holiness Sri Kaliyan Vaanamalai Ramanuja Jeeyar Swami of Sriperumpudur blessed and rendered great speech highlighting the tamil in Divyaprabandham. Thirukovilur Jeeyar Swami was also present.
His Holiness Thavathiru Kunrakudi Ponnambala Adigalar gave special address. He mentioned about the ‘short stories collection’ written by TSR with special reference to the first story in which the advocate encounters difficulty in playing the role of a Judge for a night.
Dr MA Venkatakrishnan, Head of the Department of Vaishnavism, University of Madras and Secretary of the Adhyapaka Sabai of Sri Parthasarathi Swami temple spoke at length recalling the enthusiasm exhibited by TSR in learning vaishnavism in regular curriculum and spoke of TRS’s contributions to the sampradhayam citing his literary work which earned him the Doctorate.
Hon’ble Thiru Justice V Ramasubramanian, reverred Judge of High Court of Madras spoke in his inimitable style quoting with ease Kamba Ramayanam.
Many scholars including Dr VV Ramanujam, Chemistry Professor and legendary scholar in Sanskrit, U Ve Pillailokam Thalasayanathuraiyavar and many others were honoured. They were aged more than 80 [some were more than 85 and couple of them had crossed 90 even] – they were all active and their knowledge was the common binder there. TSR chose to honour them on stage.
Dr Chockalingam, leading Cardiologist spoke praising TSR. Many local associations [including SYMA] and individuals also expressed their reverence and praise for TSR.
It was a grand occasion for the youngsters to pay obeisance and learn lot from this noble elder. The occasion also benefitted all by the immense knowledge abounded in the speeches of the great persons who had adorned the podium.
Earlier, from 9th May 2011 to 4th June 2011 – 27 days of discourse by eminent Vaishnavaite scholars had been arranged to mark this occasion. The discourses were rendered at Sri Nampillai Sannadhi at Peyalwar Kovil Street which stands renovated by the concerted efforts of Dr MAV. The discourses started with one on Thirupallandu by U. Ve. Velukkudi Krishnan Swami, followed by the likes of Sri Rajahamsam Swami, Kapisthalam Srinivasachariyar,, Dr VV Ramanujam, AV Rangachari, Thirukottiyur Mathavan Swami and culminated with the one on “Thiruvoimozhi Nootranthathi” rendered by Dr MA Venkatakrishnan. The 27 days was to have commentary on all constituents of “Naalayira Divyaprabandham including Ramanuja Nootranthathi, Upadesa Rathinamalai and Thiruvoimozhi Nootranthathi”. All 27 discourses were captured on audio and made into a single DVD for the benefit of posterity. This DVD was released on stage by the HH Sri Kaliyan Vaanamalai Ramanuja Jeeyar Swami and first copies were received by Thavathiru Ponnambala Adigalar and Hon’ble Thiru Justice V Ramasubramanian.
It was indeed an grand occasion. Here are some photos :
A section of those on the podium
Dr TS Ramaswamy – one can see the TV image of
Mrs Lakshmi Ramaswamy rendering prayer
Dr MAV speaking – Dr VV Ramanujam is seen behind
Thavathiru Ponnambala Adigalar
Hon’ble Thiru Justice V Ramasubramanian.
Subscribe to:
Posts (Atom)









