To search this blog

Monday, July 11, 2011

பெரியாழ்வார் சாற்றுமுறை. Periyaazhwaar Satrumurai at Thiruvallikkeni 2011

நேற்று - ஞாயிற்று கிழமை 10-07-2011 -   'நல்லானியில் சோதி நாள்" - பெரியாழ்வார் சாற்றுமுறை.    பெரியாழ்வார் வெள்ளி யானை வாகனத்திலும் ஸ்ரீ அழகியசிங்கர் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருளினர்.  
பெரியாழ்வாரது   இயற்பெயர் விஷ்ணுசித்தர்.  தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும்- பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.  வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சார்த்தி கைங்கர்யம் செய்து வந்தார்.

பாண்டிய மன்னன்  வித்வான்களைத் திரட்டி  பரம்பொருள் யாது என்று நிரூபணம் செய்ய ஒரு போட்டி ஏற்பாடு  செய்து அதற்குப் பரிசாக ஒரு பொற்கிழியைக் கட்டி வித்வான்களை அழைத்து சபை கூட்டினான்விஷ்ணு சித்தர்  ஸ்ரீமன் நாராயணின்  கடாட்சத்தால்  ஸ்ரீமந் நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என  பர தத்துவத்தை  நிர்ணயம் செய்ய கிழி தானாக இவர் முன்னால் தாழ்ந்ததாம் இதைக் கண்ட அரசனும் வித்வான்களும் ஆழ்வாரை வணங்கி, அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டு களிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டு பரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை

பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்".  வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் என திருப்பல்லாண்டைப் பற்றி மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்.   ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப் பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461  பாசுரங்கள்*

ஆழ்வார்  பெருமாளைக் கண்ணுற்றதும் அவருக்கு ஒரு குறைவும் வரக்கூடாது என்று அவரது திருமேனி  அழகும் அவரது செல்வங்களும் என்றென்றும் பல்லாண்டு  வாழ வேண்டும் என மங்களாசாசனம் செய்ததே திருப்பல்லாண்டு!  விஷ்ணு சித்தர்  'பெரியாழ்வார்' ஆனதை நம் ஆச்சார்யர் மணவாள மாமுனிகள்  தமது உபதேச ரத்தின மாலையில் ’  இவ்வாறு அழகுற நவில்கிறார் .
மங்களா  சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு  தானன்றி   பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டாபிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பெரியாழ்வார் பாடிய படியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனை நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவது  நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும்.

 திருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

Gopura vasalil Periyaazhwaar


Gopura vaasalil Azhagiya singar Garuda sevaiyil

 Azhagiya singar kudaiyudan

Gangaikondan mandapathil Perumal



Gangaikondan mandapathil Aazhwaar.


10th July 2011 was a very significant day – The Sunday saw the festivity of celebrations of ‘birth celebrations of Periyazhwaar’.

In Triplicane, there was the veedhi purappadu [procession] of Periyaazhwaar in yaanai vahanam and  Lord  Azhagiya Singar atop the Garuda vahanam. 

Periyaazhwaar was born as ‘vishnu chithar’ at Sri Villiputhur.  He was doing floral service to the Lord Vada Bhathrasayee.  With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan.  He was honoured by the King and was taken around atop bridled elephant.  To honour him Lord Sriman Narayanan alongwith Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours as would do any normal human being, started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner.  Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the big among all others. 

His renditions are “Thirupallandu” and “Periyazhwaar Thirumozhi”.  Though they were not the ones made first, in Sri Vaishnavism, they are considered to be the initial ones in ‘Naalayira Divyaprabandham’ compiled by Sriman Naathamunigal and everytime ‘Naalayira Divyaprabandham’ is rendered, it begins with ‘Thirupallandu’ only. 

Posted above are some photos taken during the purappadu yesterday at Thiruvallikkeni

Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]

No comments:

Post a Comment