To search this blog

Tuesday, August 11, 2026

Sri Andal Thiruvadipura uthsavam 6 – மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்

Sri Andal Thiruvadipura uthsavam 6 –

மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்

 

 


உங்களுக்கு மிகவும் பிடித்த மலர் எது ?   மலர்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு  வருவன : தாமரை; ரோஜா,மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, அல்லி, போன்ற சில.  சங்க இலக்கியங்களில் பல இடங்களில் மலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள் கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். அந்தப் பாடல் சிவனின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில் உ. வே. சாமிநாதையர் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்படும் மலர்கள் சில இங்கே :  குறிஞ்சி – குறிஞ்சி நிலத்தின் முதன்மை மலர்;  வேங்கை – மலைச் சாரலில் மலரும் மரம்; காந்தள் – மலைச் சூழலில் மலரும் மலர்;  நீலம் – சுனைகளில் மலரும் நீல மலர்; வாகை – மலைச் சாரல் மலர்; குருந்தம் – மலைக் காட்டு மலர்; கொன்றை – மலைச் சாரல் மலர்; முல்லை – முல்லை நிலத்தின் முதன்மை மலர்; குருந்தம் – காட்டு மலர்;  காயா – காட்டு மலர்; திலகம் – காட்டு மலர்; பாதிரி – காட்டு மலர்; செருந்தி – காட்டு மலர் - என பல உள்ளன.




சங்க இலக்கியங்களில் மலர்களுக்குப் பின்வரும் குணங்கள் கூறப்படுகின்றன: மணம் – இனிய வாசனை; மென்மை – மென்மையான தன்மை; வண்ணம் – அழகான நிறம்; தூய்மை – தூய்மையான தன்மை; சுவை – இனிமை; ஒளி – ஒளியுடன் கூடியது; எழில் – அழகு; கவர்ச்சி – ஈர்க்கும் தன்மை; மங்கலத்தன்மை – நல்ல காரியங்களுக்கு உகந்தது.

               மாலதி  என்ற பெயர்ச்சொல்லுக்கு, : இளம்பெண்; குடமல்லிகை, மல்லிகை; காட்டுமல்லிகை; சிறுசெண்பகம்; நிலவொளி, சந்திரிகை; விளக்குத்தண்டு இன்னமும் பல அர்த்தங்கள் உள்ளன.   மல்லிகை மணமிக்க  பாரம்பரியமான மலர்.  மல்லிகை மலரில் எசென்ஸ் எடுக்கின்றனர்.  சில ஊர்களில் மல்லி டீ பருகுகின்றனர்.  மல்லிகை மொட்டுக்களால் மட்டும் கட்டப்படும் ‘மண மாலை’ மிகவும் சிறப்பானது. தலையில் சூடுவதற்காகப் பூக்கள் சரம் சரமாக தொடுக்கப்பட்டு விற்பனையாகிறது. மலர்களிலே பல நிறமும், மணமும் இருந்த போதிலும் வெண்மை நிற மல்லிகை தூய்மை, அமைதி, ஆர்வம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக இருக்கின்றது. தனது தனித்துவமான மணத்தினால் மல்லிகைக்கு ஈடு இணையான மலரேதுமில்லை எனலாம்.  "மாலதி" என்ற பெயர் "மலர் போன்ற மென்மையானவள்" என்ற கருத்தைத் தருவதால், பெண்களுக்கு இடப்படும் அழகான பெயராகவும் பயன்படுகிறது.

For Srivaishnavaites, life is blissful – today 10th  August 2026  is day 6  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal .. .. there was siriya mada veethi purappadu of Andal at Thiruvallikkeni with rendering of Thiruvasiriyam and Periya thiruvanthathi.  

சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலர் மல்லிகை. இந்தியாவில் மல்லிகை என்றாலே மதுரை.   மல்லிகை ஆலிவ் குடும்பமான ‘ஒலிசியே’ எனும் புதர் மற்றும் கொடிகள் சார்ந்த பேரினம். ‘ஜாஸ்மினும் சம்பக்’ (Jasminum Sambac) எனும் தாவரவியல் பெயரால் அழைக்கப்படும். 

The capita of Syria, Damascus was built in a strategic site on a plateau 680 m (2,230 ft) above sea level and about 80 km (50 mi) inland from the Mediterranean, sheltered by the Anti-Lebanon mountains, supplied with water by the Barada River, and at a crossroads between trade routes. Damascus is surrounded by the Ghouta, irrigated farmland where many vegetables, cereals and fruits have been farmed since ancient times.  Damascus is  titled the "City of Jasmine".  The Barada River flows through Damascus. Damascus is one of the oldest continuously inhabited cities in the world.

கோதைப்பிராட்டி எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் திருமொழி தனியன் பாசுரத்தில் 'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம்.  வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின்  பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.  கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது.   கோதைப்பிராட்டி   மல்லிநாடாண்ட மடமயில்!. 

கோதைப்பிராட்டி அருளிச்செய்த நாச்சியார் திருமொழியின் தனியன், திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது,  கட்டளைத் கலித்துறையில் அமைந்த பாசுரம்.  இவர், ஸ்ரீமந் நாதமுனிகளின் சஹோதரியின் குமாரர், ஆனி மாத திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில், தரையைச் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை அனவரதமும் செய்து வந்தார். 

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி*

மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள்*

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்*

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு. 

மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், இடைக்குல வேந்தன் கண்ணனின் திருமேனிக்குப் பொருந்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள்.  

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 

 

Here are some photos of Kothai Nachiyar Thiruvadi purappadu day  6 at Thiruvallikkeni divyadesam

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.8.2026










No comments:

Post a Comment