மண்டகப்படி
என்ற வார்த்தையை கேள்வியுற்று இருக்கிறீர்களா ? .. .. .. for sure,
thousands of devotees come from
various places in the city to have darshan of Sri Parthasarathi Emperuman. .. .. and on a special day, Sri Parthasarathi soujourns long
winding trip to give feasty divine darshan to his bakths.
Moving away, How
often do you venture out in the midnight or early hours ! not by car, not on
any vehicle but or by walk and what
would be your reaction, when a group of fiery street mongrels start
barking and worser still, if they chase you ! .. .. Contrary to the
notion that Cows and many other animals sleep standing – cattle
typically lie down to sleep or simply to rest, usually leaning forward on their
chest and forelimbs or lying completely on their sides. Cows need their sleep
to stay healthy; just as other animals do – so at 1.30 am (yes half past One O clock in the
morning) when cows doze at
Thiruvallikkeni streets, the Temple area becomes busy with purappadu at midnight (early morning to be
precise!)
நான் ரொம்ப 'பிசி'
என்று சொல்லிக்கொள்ளும் பலரும் ஒரு நாளில் என்னவெல்லாம் உருப்படியாக செய்கிறோம் ?
- ஒரு நாள் திடீரென 'எவ்வளவு பயனற்ற வாழ்வு ' கழித்துள்ளோம் என்பது புரியும். பக்த
சிரேஷ்டரான பொய்கையாழ்வார் அருளிச்செய்கிறார். :
பழுதே பலபகலும்* போயினவென்று * அஞ்சி-
அழுதேன்* அரவணைமேல் கண்டு தொழுதேன்*
பழுது : பயனின்மை ~ so may precious days in life have goneby wasted – I lament and
cry for that .. .. .. to my fortune I saw the ocean-hued red-eyed Lord
reclining on the serpent bed, -his feet caressed by lapping waves -and offered
worship to him; and I realize that is the meaning of life.
திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு
உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல்
திருவூறல் உத்சவம்". அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள
ஈக்காடு தொழிற்பேட்டைக்கு ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும்
ஒரு நாள் எழுந்து அருள்கிறார். திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு
உத்சவம் "ஈக்காடுத்தாங்கல் உத்சவம்". கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது.
இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும்
ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார். தை / மாசி மாதம் மற்ற சிறப்பு உத்சவங்கள்
ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்வுத்சவம் நடைபெறுகிறது. இவ்வருடம்
இவ்வுத்சவம் 15.2.2026 அன்று சிறப்புற நடைபெற்றது.
ஈக்காட்டுத் தாங்கல்
உத்சவத்திலே, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில்
இளைப்பாறுகிறார். திருக்கோவில்கள், சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள் சில இந்த
வரிசையில் உண்டு. பல வருடங்களாக இவ்விடங்களில் பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு.
பெருமாள் இவ்விடங்களில் எழுந்து அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு
அருள் பாலிப்பார். அதிகாலை 1.30 மணியளவில் திருக்கோவிலில் இருந்து துவங்கிய புறப்பாடு
முதலில் தவன உத்சவ பங்களா, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு ஸ்ரீபார்த்தசாரதி சபா,
அருகில் விஜய் அவென்யு, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் திருபராசரன் இல்லம், திருமயிலை
மாதவப்பெருமாள் திருக்கோவில், திருகேசவப்பெருமாள் திருக்கோவில் என திருமயிலை, ஆள்வார்ப்பேட்டை,
தியாகராயநகர், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக,
பல இடங்களில் மண்டகப்படிகள் கண்டருளி ஈக்காட்டுத்தாங்கலில் தனது நிலத்திற்கு எழுந்தருள்கிறார்.
இவ்விடத்தில் இப்போது அருமையான மண்டபம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் அடையாறு
ஆற்றங்கரையில் சோலை நடுவில் குளுமையான சூழலில் இந்த உத்சவம் நடந்து இருக்கும்.
இப்போது இவ்விடம் ஒரு தொழிற்பேட்டை.
Chennaites will never
forget Dec 2015 when torrential rains swamped the city and water flowed over
the bridge across Saidapet, inundating many places with transportation coming
to a standstill. The river Adyaru emanates from
Malaipattu tank at Manimangalam Village and traverses 42.5 km,
flowing into Bay of Bengal. On that fateful day when it flowed over
bridges, it was reported that it was carrying more than one lakh cusecs
of water on December 2 and 3, much more than the official account.
On the banks of ‘Adayaru’
lies Ekkattuthangal, now an industrial belt and at Ekkadu there is a piece of
land owned by Perumal. Sri Parthasarathi Emperuman visits this
place once an year and has thirumanjanam – this sojourn starts @ 1.30 am,
Sri Parthasarathi perumal has purappadu
in palanquin – traversing through the city, halting at many a places ;
reaches His land at around 12 noon has
thirumanjanam at around 12.30 noon, again starts around 3 pm, purappadu at
Saidapet, reaches back Thiruvallikkeni in the night.
இன்று ஈக்காடு தாங்கல் உத்சவம் (15.2.2026) அதிகாலை 1.30 மணியளவில் திருவல்லிக்கேணி
திருக்கோவிலில் இருந்து கிளம்பி - தவன உத்சவ பங்களா, வெங்கடரங்கம் தெரு
விஜய் அவென்யு, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, தி. நகர், கோடம்பாக்கம்,
நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
எழுந்தருளி, சுமார் 12.00 மணியளவில் ஈக்காடு மண்டபம் வந்தருளி திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
At such designated
places, devotees wait – the places are bedecked beautifully with kolams, floral
settings as they stand with flowers and
fruit offerings for Emperuman. So many would be lucky to have darshan of fleeting Sri
Parthasarathi perumal having this special purappadu. The 25 km odd
soujourn is a tough and demanding one for the kainkaryabarars of
Thiruvallikkeni – the sripadhamthangigal, Battar, Adhyapakas, various others
engaged in doing service to Emperuman – a long journey crisscrossing the
city. One needs to witness the difficulties posed – yet how those
sripadhamthangigal and other kainkaryabarargal remain cheerful throughout
the journey is to be seen to be belived – they literally run carrying the
pallakku unmindful of the road conditions – and that is revelation of
exemplary commitment and the spirit of kainkaryam of the youngsters of
Thiruvallikkeni.
Here is an extract
schedule (timings are subject to change) :
Perumal purappadu from Temple @ 1.30 am of 15.2.2026 – Thavana Uthsava
Bungalow; Sri Parthasarathi Swami Sabha/
Vijay Avenue at Venkatrangam St (around 2.20 am); Dr Radhakrishnan Salai
(Sri Parasaran) 3.00; Thirumylai Sri Madhavaperuma thirukkovil 3.45;
Chithiraikulam Sri Adhi Kesavaperumal – Peyalwar mangalasasanam 4.15; purappadu
from Thirumylai around 5 am; Venkateswara Agraharam, Abhiramapuram, Eldams
Road, Teynampet, GRT Grand 6 am; Thirumalai Pillai Road – Padma Seshadri school
6.40; Mahalingapuram; North Usman Road,
Barathi Nagar, Raghavaiah road, Vyasar
salai, North Boag Road, GRT 8.30;
Nallis, KUmaran Silks, Kumaran Stores,
Duraisamy subway, Thambaiah reddy road, Vivekanandapuram, Arya Gowda road Sri Prasanna Venkatesa
Perumal kovil 10.55; LIC colony, Ashok Nagar,
Kasi theatre bridge, Leo Industries, Ekkadu mandapam at 12 noon and
mandapa thirumanjanam at 12.30. Starting
from the mandapam at 3.30 noon.
Here are some photos of
yesteryears and a video of 2020 taken near Eldams road junction. If you are living around these areas, you can
plan to have darshan of Emperuman in His purappadu.
adiyen
Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.


.jpg)
.jpg)
No comments:
Post a Comment