To search this blog

Sunday, July 27, 2025

Swami Ramanujar places !! ~ Udayavar Anushtana kulam !!!

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு

ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி  !!!

Swami Emperumanar and a post on this person !!



We go to Temples daily and worship Emperuman – frequently we visit other Divyadesams and other important places where there are glorious ancient temples of our Emperuman and some newly built Temples too ..  life for a Srivaishnavaite is simple – surrender unto Emperuman through Acaryas, live in divyadesams, visit Temple daily, do kainkaryam of every sort in Temples and places associated with Ithihasa Puranas and Acaryas.

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியை அடைந்து  உள்ளம் தேறி*

The aim of life is to reach Him by serving Him and those who do kainkaryam to Him. Srivaishnavaite way of life is singing paeans, chanting divyaprabandham, doing service and having darshan at His various abodes 

சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நாகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று  ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம்.  ஆழ்வார்கள் மங்களாசாசனம் பண்ணின திருத்தலங்கள், ஆழ்வார்கள் ஆசார்யர்கள், வாழ்ந்த, அவர்களோடு சம்பந்தம் உள்ள புண்ணிய பூமிகளுக்கு சென்று சேவித்தல், கைங்கர்யம் செய்தல் சிறப்பு.  நம் யதிகட் இறைவன் ஸ்வாமி இராமானுஜருடன் சம்பந்தம் கொண்ட ஒரு புண்ணிய பூமியை பற்றிய சிறப்பு பதிவு இது !

Of the three great exponents of Vedanta philosophy, Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place.  Sri Ramanujar has the pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, ThiruppavaiJeeyar, NumKovilannan, amongst other names.  Worshipping Sri Ramanujar at his Avathara sthalam (birthplace) Sriperumpudur  and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain.  

The list of places associated with Emperumanaar, is long .. .. as he travelled long and wide during his 120 years.  Some of them would include :  Thiruvallikkeni, Sriperumpudur, Thirukachi, Thirumala Thirupathi,  Thiruputkuzhi, Thiruvellarai, Thiruvarangam, Maduranthagam, Thirukoshtiyur,  Thondanur, Thirunarayanapuram, Kachmeeram, Pushkar,  Thiruvananthapuram, Srikurmam, Thiru Puri Jagannatham (not in this order !!)

You may have brushed aside the news that Highways Department is preparing the estimate for the construction of a bridge across the Palar River at Sevilimedu on the Kancheepuram-Vandavasi SH 116 that  provides connectivity to areas including Walajahbad, Oragadam, Padappai and Vandalur. The 900-metre-long bridge is to come up adjacent to an existing one which is two lanes wide. “The proposed one too will be two lanes wide so that one bridge can be used for outbound traffic and the other, in the opposite direction,” explained an official.

Palar (பாலாறு pālāu  literally "milk river") rises in the Nandi Hills in Chikkaballapura district of Karnataka state, flows 93 kilometres (58 mi) in Karnataka, 33 kilometres (21 mi) in Andhra Pradesh and 222 kilometres (138 mi) in Tamil Nadu before reaching its confluence into the Bay of Bengal at Vayalur about 75 kilometres (47 mi) south of Chennai. It flows as an underground river for a long distance only to emerge near Bethamangala town, from where, gathering water and speed, it flows eastward down the Deccan Plateau. The Towns of Bethamangala, Santhipuram, Kuppam, Mottur, Ramanaickenpet, Vaniyambadi, Ambur, Melpatti, Gudiyatham, Pallikonda, Anpoondi, Melmonavoor, Vellore, Katpadi, Melvisharam, Arcot, Ranipet, Walajapet, Kanchipuram, Walajabad, Chengalpattu, Kalpakkam, and Lattur are located on the banks of the Palar River. Of the seven tributaries, the chief tributary is the Cheyyar River.  – of particular reference to a place situate on its bank is Sevilimedu !! – does not strike any bell ?

செவிலிமேடு (Sevilimedu), தமிழ்நாடு மாநிலத்தில் - காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஒரு பகுதி.  செவிலிமேடு பாலாற்றின் கரையில் உள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே 4.1 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

யதிகட்கெல்லாம் இறைவன் என புகழ்ப்பெற்ற ஸ்வாமி இராமானுஜர் -   சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் [25 April 1017] அவதரித்தார். தன்னுடைய பதினாறு வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை மணந்தார். திருமணமான சில மாதங்களில் தந்தையை இழந்தார். பின், கல்வி கற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார். காஞ்சிபுரத்திற்கு பக்கத்திலுள்ள திருப்புட்குழி என்ற ஊரில் யாதவப்பிரகாசர் என்ற அத்வைத பண்டிதரிடம் கற்றார். ஆசிரியர் வேத வார்த்தைகளுக்கு பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதினால், பகவத் இராமானுஜர் அவரிடமிருந்து விலகினார். அதன் பின் தனக்கு வரும் சந்தேகங்களை, காஞ்சி ஸ்ரீவரதனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்யும் வேளாள குலத்தவரான திருக்கச்சிநம்பி என்ற கஜேந்திரதாசரிடம் தீர்த்துக்கொண்டார்.  திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனைப்படி, தினமும் காஞ்சி ஸ்ரீவரதனுக்கு சாலைக் கிணற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்து சமர்ப்பித்து வந்தார். சாலைக் கிணறு காஞ்சிபுரத்துக்கு அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் வழியில் இருக்கிறது. ராமானுஜர் இங்கிருந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தினசரி நடந்து சென்று கைங்கர்யம் செய்து வந்தார்.  நிற்க !  இதற்கிடையே அவர்தம் வாழ்வில் ஒரு மிகப்பெரிய நிகழ்வு நடந்தேறி இருந்தது !!!

அக்காலத்தில் கல்வி ஞானம் பெறுவது கடினமானது !  சரியான குருவும், அவருக்கு சரியான சிஷ்யரும் அமைவது சிரமங்கள் மிக்கதே !!  திருப்புட்குழியில் வாழ்ந்து வந்த யாதவ பிரகாசர்  மிகவும் சிறந்த படிப்பாளி. இராமனுசனுடன்,  அவர் சித்தி மகனான கோவிந்தனும் அங்கேயே பயில வந்தார். யாதவர் அத்வைத சித்தாந்தத்தை போதித்து வந்தார்.  அவர் கூறும் கருத்துகள் விபரீதமாக இருந்தன. பொருந்தாதப் பொருளைக் கூறும் போதெல்லாம் இராமானுஜர் அதைத் திருத்திக் கூறுவார். ஒரு முறை ‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ ’ என்ற வேதத்துக்குப் பொருள்- பிரம்மத்துக்குக் கண்கள் கப்யாஸம் குரங்கின் பின்புறம் போல் இருக்கிறது என்று கூற, உடையவர் வேதனையுடன் - ‘அந்தப் பிரம்மத்துக்குச் சூரியனால் அலர்த்தப்படுகிற தாமரை போன்ற கண்கள்’  என்று உண்மைப் பொருள் இருக்கப் பிரம்மத்தை இப்படி இழிவுபடுத்தலாமா என வினவினார்.

இது போன்று அபிப்ராய பேதங்கள் மிக, இராமானுஜர் மேல் கோபம் கொண்ட யாதவப்ரகாசர்  ஒரு சூழ்ச்சி செய்தார். காசிக்கு அவர் சீடர்களுடன் யாத்திரைக் கிளம்பினார். காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமானுஜரை தண்ணியில் மூழ்கடித்து விடுவதே அவர் திட்டம். அது தெரியாமல் இராமானுஜரும் கோவிந்தரும் மற்ற பிள்ளைகளுடன் கிளம்பினர். விந்திய மலையை சமீபிக்கும் பொழுது கோவிந்தருக்கு இந்த சூழ்ச்சித் தெரிய வந்து. உடனே தன் தமையனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி தப்பித்துப் போகும்படிக் கூறிவிட்டு அவர் அந்தக் குழுவில் போய் கலந்து விட்டார்.  திக்குத் தெரியாத காட்டில் கண் போன போக்கில் இராமானுஜர் நடந்து, களைத்து, மாலை இருட்டத் துவங்கிய நேரத்தில் மிகவும் கவலைக் கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு வேடனும் வேடுவத்தியும் அவர் முன் தோன்றி ஏதாவது உதவி தேவையா என்று கேட்டனர். அவர்கள் காஞ்சிக்குப் போவதாகச் சொல்லவும் நிம்மதி அடைந்த இராமானுஜர் அவர்களுடன் நடக்கத் தொடங்கினார். இரவு முழுதும் பயணித்தனர். நடுவில் ஒரு முறை வேடனின் மனைவி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். அனால் வேடனோ உடனே நீர் தேடிப் போகாமல் காலையில் இனிய நீர் கிடைக்கும் பொறுத்துக் கொள் என்றார். விடிகாலையில் கிணறு ஒன்றைக் கண்டனர். அங்கிருந்து நீர் இறைத்து வேடுவன் மனைவிக்குக் கொடுத்தார் இராமானுஜர். நீர் அருந்திய பின் நொடி நேரத்தில் வந்த இருவரும் மறைந்து விட்டனர்.

 

உடையவருக்கு உதவ பெருமாளும் தாயாரும் - வேடுவன் வேடுவச்சியாக வந்து, அவரை அதி பத்திரமாக திருக்கச்சிக்கே கொண்டு சேர்த்து அருள் பாலித்தனர்.  அவர்களை  கரையேறி  தேடி பார்த்த இளையாழ்வாரும்   “இது என்ன இடம்? எந்த தேசம் ? எந்த ஸ்தலம் ?” என்று வினவி - அங்கிருந்தே தெரிந்த திருக்கோவிலின் விமானத்தை கண்டு அதிசயித்து, பிரமித்தார்.   பின்னர் அனுதினமும்  சாலைக் கிணற்றில் இருந்து  பெருமாள் திருவாராதனத்துக்குத் திருமஞ்சன நீர் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். அத்தகைய அதி சிறப்பு வாய்ந்த  அந்தக் கிணறு இன்றும் செவிலிமேடு கிராமத்தில்  இருக்கிறது.  இது வந்தவாசி செல்லும் பாதையில், பாலாறு பாலம் மிக அருகேயே உள்ளது. செவிலிமேடு   கிராமத்தில் சில நூறு குடும்பங்கள் உழவு தொழிலோடு சம்பந்தப்பட்டு வாழ்ந்து வருகின்றது.

நிற்க !!!  நிற்க !!!  இது எம்பெருமானாரின் வரலாற்று பதிவல்ல !!  - அண்டை மாநிலமான கர்நாடகத்தில், உடையவர் 12 ஆண்டுகள் வாழ்ந்த மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் - அவருக்கு அனுதினமும் உத்சவங்கம் அற்புதமாக நடக்கின்றன.  உடையவரோடு நேரடி தொடர்புடைய - 'சாலைக்கிணறு' இன்று எந்த நிலைமையில் உள்ளது தெரியுமா ??

இன்றும் அச்சாலையோர கிணற்றிலிருந்து பெருமாளுக்கு தினமும் தீர்த்தம் சமர்ப்பிக்க படுகிறது என அறிகிறேன்.   வைகுண்ட ஏகாதசி முடிந்து, 12ஆம் நாள் அனுஷ்டான குள உற்சவம் என்று நடக்கிறது.  வருடந்தோறும் அத்யயன உற்சவத்தில் இயற்பா சாற்றுமறைக்கு மறுதினம் காஞ்சி பேரருளாளன், எம்பெருமானார் உடையவருடன்  சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி அனுஷ்டான குள உத்ஸவம் கண்டருளுகிறான். திருக்கச்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவிலிலிருந்து பெருமாள், உபயநாச்சியார் ஸ்ரீபாஷ்யகாரருடன் மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு அனுஷ்டான குளம் எழுந்தருளுகிறார். செவிலிமேட்டில் உள்ள இம்மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் ஸ்ரீ பாஷ்யகாரர் சாலைக்கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்.  சாலைக்கிணற்றின் தீர்த்தத்தால், பெருமாளுக்கு  திருமஞ்ஜனம்  நடைபெறுகிறது.  பின்னர் பெருமாள் சார்ங்க தந்வாவாக (வில்லை சாற்றிக் கொண்டு வேடுவகோலத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரருடன் விளக்கொளி எழுந்தருளுகிறார். விந்த்ய மலையிலிருந்து ஸ்ரீபாஷ்யகாரருடன் நடந்து வந்தான் வரதன்.  விந்த்ய மலைக் காடுகளிலிருந்து எவ்விதம் எழுந்தருளினானோ அதேபோன்று சிறிது காட்டு வழிப்பயணம்.   



உத்சவம் என்னமோ சிறப்புதான் !  ஆனால்  'சாலை கிணறு' - சரியாக இல்லை !!.  சில ஆண்டுகள் முன்னர் மிக மோசமாக இருந்ததாம்.  இப்போது - அந்த கிணறு ஒரு சிறிய கேட் பூட்டுடன்.  எம்பெருமானரோடு சம்பத்தப்பட்ட, அவரும் கூரத்தாழ்வானும், நித்யநியமனம் செய்த அனுஷ்டான குளம் - சரியாக பராமரிக்கப்படாமல்.  குளத்தில் நீரும், நிறைய தாமரை மலர்களும் இருந்தன !!  அருகே உள்ள உடையவர் கோவில் பளிச்சென்று இருந்தது - அதற்கு காரணம் வெல்டர் சுந்தரமூர்த்தி என்ற ஒரு சிறந்த மனிதர்.

கடந்த வருஷம் எங்கள் தூசி மாமண்டூர் கிராமம் செல்லும்போது - இங்கே சென்றபோது மூடி இருந்தது.  நேற்று (சனிக்கிழமை 26.7.2025) காலை சென்றபோது கோவில் திறந்து இருந்தது, சன்னதி மூடி இருந்தது.  சில சிறுவர்கள் மண்டபத்தில், தாமரை மலர்களை தொடுத்துக்கொண்டு இருந்தனர்.  அந்த மாலையை உடையவருக்கு சமர்பித்துவிட்டு, எங்கள் கிராமம் சென்று - ஸ்ரீ சுந்தரவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாளை சேவித்து திரும்பி வந்தேன்.




காவி வேஷ்டி கட்டி இருந்த - சுந்தரமூர்த்தி, கற்பூர ஹாரத்தி காண்பித்து, தீர்த்த, திருத்துழாய் பிரசாதங்களும் அளித்து, முதலியாண்டானும் சாதித்தார். மிக்க ஆர்வத்துடன், அங்கே சுரங்க பாதை உள்ளதாகவும், அது நேராக அத்தி வரதர் குளத்துக்கு செல்லும் எனவும் கூறினார்.  சன்னதி உள்ளே சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாம் - சிறிய ஓட்டை ஒன்றில் அத்தி வரதருக்கு அங்கிருந்தே பால் அமுது செய்துவித்தோம்.

இந்த சிறிய திருக்கோவில், ஸ்ரீவரதராஜஸ்வாமி தேவஸ்தானத்துக்கு உட்பட்டது என ஒரு போர்டு உள்ளது.  ஆனால் - கோவிலுக்கு எந்த விதமான சகாயமும் வருவதில்லையாம். வெல்டிங் தொழில் செய்யும்   திரு  சுந்தரமூர்த்தி, 2001ல் தீர்த்தக் கிணறு என்று ஒன்று உள்ளது என்று நண்பர் கூறியதை கேட்டு,அவ்வமயமே  இராமானுஜரை பற்றி கேள்விப்பட்டுள்ளார்.  அவர் தினமலர் பேப்பர் கட்டிங் ஒன்றை காட்டினார் !!  அதில் எழுதி இருந்தது :  அவர் வந்த சமயத்தில்  சிலர் சீட்டாடிக்கொண்டு இருந்தார்கள். நிறையச் சரக்கு பாட்டில்கள் என குற்ற கூடாரமாக இருந்தது. அவருக்கு மனது கஷ்டமாக இருக்க, அவர் தம் நண்பர்கள் சிலர் உதவியுடன்,   புதர் போல வளர்ந்து இருந்த செடிகொடிகளை நீக்கி,  சுத்தம் செய்து, இன்றுவரை பராமரித்து வருகிறார்.  திருவாதிரை திருநாளில், வருபவர்களுக்கு அன்னதானம் முதலியனவும் செய்து வருகிறார். 

ஒல்லியும் ஒடிசலான தேகத்துடன் தான் சைவ சமயத்தினர்  என கூறும் திரு சுந்தரமூர்த்தி, சில நண்பர்கள் உதவியுடன் இந்த சன்னதியை தினமும் பராமரித்து வருகிறார்.  காஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருந்தாலும், கைங்கர்யத்து வேறு எவரும் வருவதில்லை.  இவர் தற்சமயம் சில பள்ளி மாணவர்களையும், நண்பர்களையும் கொண்டு, உடையவருக்கு கைங்கர்யம் செய்து - மிக உயர்ந்தவராக உள்ளார்.   

திரும்பி சென்ற சமயம், காலை பூக்கட்டிக்கொண்டு இருந்த சிறுவன் எங்கே என வினவ, அவன் பள்ளி சென்று விட்டான், இன்று மாலை நீங்கள் சமர்ப்பித்தது மிக்க மகிழ்ச்சி என்கிறார்.  உடையவரை கொண்டாடும் நம் போன்ற ஸ்ரீவைணவர்கள் - இந்த சன்னதி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு - இயன்ற கைங்கர்யங்கள் செய்தல் நன்று !!  அவர் எனக்கு விசுவாவசு வருஷத்திய திருவாதிரை (உடையவர் திருநக்ஷத்திரம்) வரும் நாட்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு மஞ்சள் அட்டையும் வழங்கினார்.



 எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், நம் ஆசார்யனை அனுதினமும் கவனித்துக் கொள்ளும், சுந்தரமூர்த்திக்கு, இந்த சந்நிதிக்கு - ஏதாவது உதவி செய்ய மனம் உள்ளோர், அவரை கைபேசி 9944013217எண்ணில் தொடர்பு கொள்ளவும்.  அடுத்ததடவை திருக்கச்சி திவ்யதேசங்கள் சேவிக்க செல்லும்போது, நிச்சயமாக சாலைக்கிணறு சென்று உடையவராய் சேவித்து விட்டு, அன்பர் சுந்தரமூர்த்தியையும் பாராட்ட வைணவ அடியார்களாகிய நாம் கடமை பட்டுள்ளோம்.

கோவில் பழங்காலத்தில், ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் போன்று  பாறாங்கற்களால் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாக சுந்தரமூர்த்தி கூறினார்.  கோவில் மதிலில் உள்ள பன்றி உருவம் பதித்த விஜயநகர சின்னங்களையும் காட்டினார்.

கோவிலை விட்டு வெளியே வந்த போது, அந்த சிற்றூரில் - ஸ்ரீமத் இராமானுஜர் மளிகை ஸ்டோர் - என உடையவர் பெயரில் கடை நடத்தும் பாகவதர் மனதை வருடினார்.  

ஸ்வாமி எம்பெருமானர்  ஒரு க்ருபாகடாக்ஷசீலர்.   கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.  இதோ இங்கே ஒரு பாசுரம். :

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு

ஆறு ஒன்றும் இல்லை மற்று அச்சரண் அன்றி என்று இப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்

கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே !

நமக்கு  வாய்த்த அற்புதமான செல்வம் சுவாமி எம்பெருமானாரே ! உடையவரே! தேவரீர் திருவடிகளைத்தவிர வேறு குறிக்கோள் ஒன்றுமில்லை. அதைத் தருகைக்கு அத்திருவடிகளைத்தவிர வேறு உபாயம் (வழி) ஒன்றும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஆழ்ந்த ஞானத்தாலே நம்பியிருப்பவர்களுக்கும் அந்த நம்பிக்கை இல்லாத எனக்கும் வித்தியாசம் பார்க்காமல் எனக்கு தேவரீரைத் தந்தருளிய இந்த நேர்மையை உண்மையாகச் சொல்லப் பார்த்தால் வாக்கின் சக்திக்கு உட்பட்டதன்றே. 

                      Here are some photos of the kinaru (Well); Anushtana kulam &  Swami Ramanujar sannathi at Salai Kinaru (SEvilimedu);

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam. 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th  July 2025

அடியேன் சிறிய ஞானத்தன் .. .. .. சற்று மன வலியுடன் எழுதிய நீண்ட பதிவு ! - ஏதாவது தவறு இருப்பின் தயை செய்து பின்னூட்டமாகவோ அல்லது WA மெசேஜ் அல்லது கை பேசியிலோ - சுட்டிக்காட்டவும். 



















8 comments:

  1. Wow !!! What a post - studded with information. Will for sure try and go to Salai Kinaru and worship Ramanuja and of course that welder Sundaramurthi ... Great - Subha

    ReplyDelete
  2. followed the link from FB and read - great post - though I miss some link. Will re-read and then try to understand. Thanks : Meenakshi

    ReplyDelete
  3. why people quarrel at some places and leave some unattended .. strange !! - Aruna

    ReplyDelete
  4. Close to 40 years of age, am not exactly a great bakth - do go to temples - not with such devotion. To the status of affairs makes a painful reading - Suresh

    ReplyDelete
  5. Excellent Swami. Very much a touching write up with appreciations to the people there. Hats Off to them all.
    Venkat, Thiruvallikkenj.

    ReplyDelete
  6. Srivaishnavism is the greatest philosophy handed down by Ramanujacharya. Somewhere we lost the concept.but struck to practices thereby moving away from Acharya whom we rever- Mapini

    ReplyDelete
  7. Srivaishnavism is the greatest philosophy handed down by Ramanujacharya. Somewhere we lost the concept.but struck to practices thereby moving away from Acharya whom we rever- Malini

    ReplyDelete