Andal
Thiruvadipura Sarrumurai purappadu 2025 :
விருந்தாவனத்தே கண்டோமே !
For Srivaishnavaites, the
month of Aadi has special significance for on this month was born
the female saintess Azhwar Andal. Godadevi was born at
Srivilliputhur in the Tamil month Adi, with the birth-star Pooram,
which is celebrated as ‘Thiruvadippuram’. A great day today (28th July 2025) ~ the
concluding day of Andal Uthsavam – Thiruvadipuram. In the evening at
7 pm @ Thiruvallikkeni divaydesam, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam.
இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் ! ஸ்ரீ ஆண்டாள்
அவதரித்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்,நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது.
மல்லி நாட்டை ஆளும்,
மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், ஸ்ரீவில்லிபுத்தூர்
வேதியர் பெரியாழ்வாரின் பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள். ஆண்டாள்
அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். 'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை
உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம். வட
பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்'
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'மல்லி நாடாண்ட மடமயில்'
'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை விளக்குகின்றன.
கோதைப்பிராட்டி ஆண்டாள்
நாச்சியார் எம்பெருமான் மீது மையல் கொண்டு, அவனையே வரித்து காத்திருந்தாள்.
அவரது நாச்சியார் திருமொழியில் எம்பெருமானோடு சேர்வதற்க்காகவே தன்னுடைய
மூச்சினை தாங்கி இருப்பேன் ~ ஆவி காத்திருப்பேனே என்கிறார். அரங்கனுக்குத்
தொடுத்த மாலைகளை, தான் சூடி, அகமகிழ்ந்து, புன்னகை தவழ, அங்குள்ள கிணற்றில்
அழகுப் பார்த்தவள். பின்னர் எம்பெருமானுக்கு பல பாமாலைகளை உள்ளன்போடு,
அருளியவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி புகழப்பெறும் ஆண்டாள் நாச்சியார்.
நம் பொய்யிலா மணவாளமாமுனிவன்,
தமது 'உபதேசரத்தின மாலையில்' திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமி
பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு
திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை, அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு
தினத்துக்கு கிடையவே கிடையாது என பாடி மகிழ்கிறார்.
ஆண்டாள்
பாடின எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எத்தகையவன் ? ~ பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும்
, விண் உலகமும் அங்கு ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான்
- செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார் - அவனை நினைத்துறுகிய
ஆண்டாள் தம் பக்தி நம்மை மேலும் பக்தி நிலையை அடைய இட்டுச்செல்கிறது.
Sri Andal in her Nachiyar
Thirumozhi describes the Lord as having the white conch, wearing
beautiful yellow silken robes, having tresses on shoulders hovering like bees
over His lotus face, the Lord of immense compassion been worshipped at
Vrindavan [Brindavan nearer Mathura, where Krishna grew up ]
வெளிய சங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை*
அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே?
*
களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள்
தடந்தோள்மேல்*
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே
கண்டோமே !
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.7.2025
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment