To search this blog

Sunday, July 27, 2025

Andal Thiruvadipura Uthsavam 8 - 2025

                       For Srivaishnavaites, life is blissful – today 26th July 2025  is day 8  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal 





இன்று ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில் 8ம் நாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,துளசிமலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்திபெருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.  

பக்தி ஸ்ரத்தைக்கு உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி.  அதிகாலையில் என்ன நிகழும் ?  எங்கே என்பதும் முக்கியம் !! ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங்கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம்.  இதையே ஆண்டாள், மிக அழகாக – கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாக காலை எழுந்திருந்து இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என சிலாகிக்கிறார்.

எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டவையாக இருக்குமாதலால்,  சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக பறந்து வந்து,  இருந்து எம்பெருமானுடைய வரவை தங்கள் குரலில் இனிமையாக உரைப்பதாக  ஆண்டாள் நாச்சியார் உணர்கிறார்.   இப்பறவையினங்கள் - சோலைமலை எனும் திருமாலிருன்ச்சோலை வாழ் துவராபதி எனும் துவாரகையை ஆண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட எம்பெருமான் கண்ணன் உடைய வார்த்தைகளையே உரைப்பதாக ஆண்டாள் அனுபவிக்கிறார்.  அவ்வெம்பெருமானிடமே தான் சென்று சேர பிரார்திக்கின்றார்.

Celebrating Sri Andal Thiruvadipuram here are some photos from siriya mada veethi purappadu of Andal at Thiruvallikkeni divyadesam – it was Periya thirumadal in the goshti.

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar








No comments:

Post a Comment