For Srivaishnavaites, the month of Aadi
has special significance for on this month was born the female saintess
Azhwar Andal. Godadevi was born at
Srivilliputhur in the Tamil month Adi, with the birth-star Pooram,
which is celebrated as ‘Thiruvadippuram’. A great day today ~ the concluding day of Andal
Uthsavam – Thiruvadipuram. In the evening around 7 pm @
Thiruvallikkeni divaydesam, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam.
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
!!
மல்லி நாடு ! - தெரியுமா ?? - ஆவூர் மூலங்கிழார் என்ற சங்ககாலப்
புலவரை பற்றி கேள்வியுற்றது உண்டா ?
ஒல்லுவது ஒல்லும் என்றலும்,
யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும்,
இரண்டும்,
.. .. .. இந்த பாடல் உங்களுக்கு புரிகிறதா !!
A great day today (28th July 2025) ~ the
concluding day (Sarrumurai) of Andal Uthsavam – Thiruvadipuram. இன்று
'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள்!
ஸ்ரீஆண்டாள் அவதரித்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,
துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த பிரபந்தங்கள் 'திருப்பாவை; நாச்சியார் திருமொழி".
~ the asterism of the day marks fragrance as our
Acharyan Sri Manavala Mamunigal says :
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்
ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை,
ஒரு நாளைக்கு
உண்டோ? மனமே உணர்ந்து
பார், ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும்
உண்டு.
கோதைப்பிராட்டி அருளிச்செய்த நாச்சியார் திருமொழியின் தனியன், திருக்கண்ணமங்கையாண்டான்
அருளிச்செய்தது, கட்டளைத் கலித்துறையில் அமைந்த பாசுரம்.
அல்லி நாள் தாமரை மேல்
ஆரணங்கின் இன் துணைவி*
மல்லி நாடாண்ட மடமயில்
- மெல்லியலாள்*
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்*
தென் புதுவை வேயர் பயந்த
விளக்கு.
மல்லி நாட்டை ஆளும், மட மயில் போன்ற மென்மைத் தன்மை உடைய இவள், இடைக்குல
வேந்தன் கண்ணனின் திருமேனிக்குப் பொருந்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர் பெரியாழ்வாரின்
பெண்ணாய் திருவிளக்குப் போல் விளங்கினாள். ஆண்டாள் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இப்பாசுரத்தில்
'மல்லி நாடு' எனப்படுவது அக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை உள்ளடக்கிய ஒரு பெரிய ஊராக
திகழ்ந்து, காலப்போக்கில் மாறி இருக்கலாம். வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில்
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'மல்லி
நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்கள் மல்லி என்ற பிரதேசத்தினை
விளக்குகின்றன.
கோதைப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் மீது மையல் கொண்டு,
அவனையே வரித்து காத்திருந்தாள். அவரது நாச்சியார் திருமொழியில்
எம்பெருமானோடு சேர்வதற்க்காகவே தன்னுடைய மூச்சினை தாங்கி இருப்பேன் ~ ஆவி காத்திருப்பேனே
என்கிறார். அரங்கனுக்குத் தொடுத்த மாலைகளை, தான் சூடி, அகமகிழ்ந்து,
புன்னகை தவழ, அங்குள்ள கிணற்றில் அழகுப் பார்த்தவள். பின்னர் எம்பெருமானுக்கு
பல பாமாலைகளை உள்ளன்போடு, அருளியவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி புகழப்பெறும் ஆண்டாள்
நாச்சியார்.
காரியாதி சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் மல்லி கிழான்
காரியாதி என ஊர்ப்பெயர் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான். மற்றும் பெரும்பெயர் ஆதி
எனவும் இவனது ஊர் மல்லி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது தந்தை பெயர் காரி.
இந்தக் காரி கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரியாகவும் இருக்கலாம். மன்னன்
ஆதி சிறந்த வாட்போர் வீரன். இவனுடைய நாட்டில் திங்களும் நுழைய முடியாத எந்திரப்பொறிகளைக்
கொண்ட சிற்றூர்கள் (குறும்பு)கள் பல இருந்தனவாம்.
ஆவூர் மூலங்கிழார் எனும் சங்க கால புலவர் இவனைப் பாடியுள்ளார். சங்கத்தொகை
நூல்களில் இவரது பாடல்கள் 11 இடம்பெற்றுள்ளன.
மூலவோரையிற் பிறந்ததனாலே மூலங்கிழார்' எனப் பெயர் பெற்றவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளி வளவனது சிறப்புக்களை இவர் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர். சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப்
பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் இலவந்திகைப்
பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடிப் பரிசில் பெற்றவர் இவர் அவற்றில் இவர் ஆவூர்
மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்பவரும் சங்ககாலப் புலவர். அகநானூற்றிலும்,
புறநானூற்றிலும் இவரது ஒன்பது பாடல்கள் உள்ளன.
இந்த மல்லியும் வில்லிபுத்தூர் மல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை.
மல்லிநாடு, விட்டு சித்தன் விரித்த தமிழ் பெயரால் வழங்கப்பெறுவதாக வில்லிப்புத்துார்த்
தல புராணம் விரித்துரைக்கின்றது. வில்லிப்புத்தூர்ப் பகுதி ஒரு காலத்தில் செண்பகக்
காடாக மண்டிக் கிடந்தது. இப்பகுதியை மல்லி என்ற வேடப்பெண்ணரசி ஒருத்தி ஆண்டுவந்தாள்.
எனவே, வராக க்ஷேத்திரம் மல்லி நாடு என்ற மற்றொரு பெயராலும் வழங்கி வந்தது. இரண்டு
முனிவர்கள் அவளுக்கு இரண்டு புதல்வர்கள் - மூத்தவன் பெயர் வில்லி, இளையவன் பெயர்
கண்டன். ஒரு நாள் இளையவன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புவியால் கொல்லப் படுகின்றான்.
மனம் உடைந்து வாழ்ந்த வில்லியின் கனவில் பாற்கடல் பரந்தாமன் தோன்றி க.அன்பனே, நீ இந்தக்
காட்டை அழித்து இதனை ஒரு நகர மாகச் செய்வாயாக; பாண்டி, சோழ நாடுகளிலுள்ள அந்தணர்களைக்
குடியேற்றுக’ என்று சொல்லுகின்றான். அதன்படி வில்லி காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்ட"
நகரமே வில்லிப்புத்துார். வில்லியால் நிறுவப் பெற்றதால் ஊர் வில்லிப்புத்துர் என்ற
பெயர்.
ஆண்டாள் பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர் பெருமை பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர்
மண்ணை மிதித்தாலே நமது அனைத்து பாவங்களும் விலகும். ஆண்டாள் பிறந்த இந்நன்னாளில்
திருப்பாவை முதலான திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான்
நாராயணின் அருள் பெறுவோமாக !!
நடுவில் கூறப்பட்ட பாடல் வரிகள் இங்கே :
ஒல்லுவது ஒல்லும் என்றலும்,
யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும்,
இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப்
பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும்,
ஒல்லுவது
இல் என மறுத்தலும், இரண்டும்,
வல்லே
தம்மாற் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக்கொடுத்தலும், யாவர்க்கும் தம்மாற் கொடுக்க இயலாத பொருளை இல்லையென்றுசொல்லி மறுத்தலுமாகிய இரண்டும் தாளாண்மைப்பக்கத்து உளவாகிய நட்பின்கூற்றினுள்ளன; தனக்கு இயலாததனை இயலுமென்றலும் இயலும்பொருளை இல்லையென்று மறுத்தலுமாகிய இரண்டும் விரைய இரப்போரை மெலிவித்தலன்றியும் ஈவோர்புகழ் குறைபடும் வழியாம்.
. குறுமகள் உள்ளிச் செல்வல் - பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன்:
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச்
சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில்
இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும்
வீரத்திலும் சிறந்தவன்.
Here are some photos of Sri Andal day 9 purappadu. It was siriya thiruther – Andal had kulakkarai
purappadu and ascended thiruther.
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே
சரணம்
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.7.2025
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment