To search this blog

Wednesday, July 23, 2025

Andal Thiruvadipura Uthsavam 3 ~ 2025 : Ekadasi purappadu

 

Thiruvadipura Uthsavam 3 ~ 2025: Ekadasi purappadu 

 

**  பெய்யுமாமுகில் போல்  வண்ணா!  உன்றன் பேச்சும்செய்கையும்

எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான்  கொலோ ! **


 

For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] –  is the  most blessed day for all Srivaishnavaites –  marking  the birth of Kothai Piratti [Andal] 

தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில்  இன்று [21.3.2025]மூன்றாம்  நாள்.  இன்று ரோஹிணி  நக்ஷத்திரம் கூடிய ஏகாதசி .. எனவே திருவல்லிக்கேணியில் ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதியுடன் பெரிய மாடவீதி புறப்பாடு   கண்டருளினார்.  

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.  ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை.  "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான  நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.

 


இன்று திருவல்லிக்கேணியில் அற்புத சேவை.  கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும் மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது. ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் அழகான ராஜமுடி கிரீடம் அணிந்து சேவை சாதித்தார்.  எம்பெருமானின் வடிவழகையும், ஆண்டாள் நாச்சியாரின் அழகையும் வெளிப்படுத்தும் சில படங்கள் இங்கே : 

This year Thiruvadipuram falls on Monday 28th July 2025.    During Thiruvadipuram, on all  10 days there is chinna mada veethi purappadu of Sri Andal in the evenings.   Today being Ekadasi day, it was Periya mada veethi.

 
~ adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.7.2o25











No comments:

Post a Comment