Today 24.7.2025 is Amavasai in the month of
Aadi and it was a double bonanza ~ there
was grand periya veethi purappadu of Sri Andal with Sri Parthasarathi
perumal. Today, Perumal dazzled with many special jewels and fresh
garlands made of Jasmine (Malligai & Mullai) + the
brownish black Kuruvi ver – all adding to the beauty.
இன்று திருவாடிப்பூர உத்சவத்தின் ஆறாம் நாள். ஆடி அமாவாசை சிறப்பானதனால் ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதி சேர்ந்து புறப்பாடு. இன்று பெருமாள் துரா பதக்கம் போன்ற பல ஆபரணங்களையும் மிக அழகாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளையும் அணிந்து அற்புத சேவை சாதித்தார். மல்லிகை வனமாலை மௌவல் மாலை என எவ்வளவோ மணமுள்ள மாலைகள் அணியும் திருமால் இன்று, மல்லிகை முல்லை பூக்களுடன் குருவி வேரால் ஆன மாலையும் மயிற்பீலியும் அழகு சேர்க்க சர்வ சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்று புறப்பாடு கண்டருளினார்.
இன்று வீதிதனிலே திருவாசிரியம், பெரிய திருவந்தாதி சேவிக்க பெற்றது. திருமங்கைமன்னன் வாய்மொழிந்தது போல ** நென்னல்போய் வருமென்றென்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது, இம்மைக்கு என்று இருந்தேன் ** ~ ஆழ்வார் தமக்கு அருளினது திருவல்லிக்கேணியில் பல்வேறு கைங்கர்யங்கள் செய்யும் பட்டர்கள், அருளிச்செயல் வாய்மொழிவோர், ஸ்ரீபாதம்தாங்கிகள், பரம பாகவதர்கள் என எல்லாருக்கும் பொருந்துமாக ! .. லோக காரியங்களிலே - நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி – எம்பெருமான் அவனிடத்திலே ஈடுபட்டு மற்றொன்றும் வேண்டாம் மனமே எனும்படியே கைங்கர்யம் பண்ணுபவர்களிடத்திலே (ஸ்திரப்ரதிஷ்டையாக) நெஞ்சிலே புகுந்து அருளி இருப்பன்.
24th July 2025
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment