To search this blog

Saturday, March 9, 2024

Trilicane Sri Paladai Angala Parameshwari thirukkovil - Masi Uthsavam 2024

 

ஸ்ரீபாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் , திருவல்லிக்கேணி 

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம் பேட்டை பகுதியில் (ஐஸ் ஹவுஸ்  காவல் நிலையம் அருகில்)  Dr நடேசன் தெருவில் அமைந்துள்ளது - சின்ன மலையனூர் ஸ்ரீபாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்.  இங்கு மாசித் திருவிழா வெகு விசேஷம். இக்கோயிலின் கும்பாபிஷேகம் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோது, காஞ்சி மகாபெரியவரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.   

ஓங்கார உருவினளே,  ஓம் சக்தி ஆனவளே

ஓமென்ற பிரவணத்தின் உள்ளே ஒளிர்பவளே

பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே

அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே !!..  ..  

வருடா வருடம் மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்தசியன்று மஹா சிவராத்திரி திருவிழா.   சிவபெருமான் மாசி மாதம் அம்மாவாசைக்கு முதல் நாள் மயானம் வந்து தங்கியதால் அன்றைய தினமே சிவன்ராத்திரி என்று வழக்கத்தில் சொல்வார்கள். அன்றைய தினத்தில் வீதியில் பவனியாக ஊர்வலம், மேளம், தாரை, தப்பட்டை, வானவெடி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் அம்பாள் ஊர்வலங்கள், பால் குடங்கள் எடுத்து செல்லுதல், காவடி, அலகு. பூச்சொரிதல் என சிறப்புற நடைபெறுகின்றன.  

வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும்தவம் செய்து சிவ தரிசனம் பெற்றான் பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எந்த ஆயுதத்தாலும், தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். அதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று ஆணவத்தில் தேவர்களை துன்ப படுத்தினான். அழியாவரம் பெற்ற வல்லாள கண்டன் 108 பெண்களை மணந்தான்.   அவன் மேலும் தறி கெட்டு திரிந்தான். வல்லாள கண்டன் கொடுமைக்கு முடிவு கட்ட சிவபெருமான், பார்வதி தேவியை,  மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறுபிறவிகள்  எடுக்குமாறு பணித்தார்.  அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள் பாலித்தார், காளியாக உருவெடுத்தபோது சிவனையும் விஞ்சிய சக்தியாக எண்ணி அவரை நடன போட்டிக்கு அழைத்தாள், அந்த போட்டியில் தோல்வி அடைந்து,   தன்னையே எரித்துக் கொண்டாள், அவளது அங்கம் நெருப்பில் வெந்தது, அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன், அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து பிறந்தததனால் அங்காளம்மன் எனப்பட்டார், காளி தேவியை அங்காளம்மனாக பிறந்தாள், அங்காளம் என்று சொல்லுக்கு இணைத்தல் என்று பொருளாகும்.  பிரம்மனின் தலை கொய்ததனால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து சிவபெருமான் விடுபட, அவரிடம் இருந்து கபாலத்தை நீக்க பார்வதி அங்காளம்மன் அவதாரம் கொண்டதாகவும் கூறுவர்.  

அங்காளம்மன்  ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம்  எனக்கொண்டு பல இடங்களில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.  

Angalamman is a manifestation of Goddess Parvati. This manifestation of Mother Goddess  a fierce form of Goddess Shakti and she is the  guardian deity in many villages.  Goddess Parvati took the form of Angala Amman to help Shiva rid of the Kapala that was following Him after He cut off the fifth head of Brahma   

Here are some photos of the festival at Triplicane Sri Paladai Angalamman thirukkovil taken today
 
With regards – S. Sampathkumar
9.3.2024


















No comments:

Post a Comment