To search this blog

Wednesday, March 13, 2024

Chamara Kainkaryam - Thiruvallikkeni kids 2024

திருவல்லிக்கேணியில் எம்பெருமானின் திருவீதி  புறப்பாடுகள் மிக சிறப்புற நடைபெறுகின்றன.   எம்பெருமானின் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.   

 


You would understand this better – if you are middle aged and lived in joint-family.  There were siblings, tenants and people of all kinds around you – no priorities, none gave you freedom or liberty – often there would be fights for lil things which modern day children get in abundance – yet we grew without any complaints, and still are happy !! 

Disagreements between students are one of the most frequent causes of fighting in the classroom. A range of things, such as envy, rivalry, bullying, or just a difference of opinion, and even external variables such as online bullying can be the root of classroom brawls. A study reveals that in unprovoked aggressive situations younger aggressive children, compared with the younger nonaggressive children, attributed more happiness to transgressors, more anger to victims, and less sadness to transgressors and victims. 

It is not only in schools, at homes too – be it among siblings or cousins growing together.  Disagreements among children are very common – they’re part of learning how to get along. Fighting happens when a disagreement becomes aggressive – for example, when it involves shouting or hitting. Children need to learn  to control their emotions, but pampered ones would not budge. Children’s fights often start when children see a situation as unfair, are trying to assert what they think are their rights, feel that others don’t see their perspective, or view the same situation in different ways.  The closer siblings are in age, the more they tend to fight. 

Problems are to be solved - yelling, crying, or hitting are definite problem-solving no-nos. Ask them to come up with ideas, and then let them try it out. You might be surprised at their solutions, and they may know what works best. 

Perhaps I moved away much  - at Thiruvallikkeni divyadesam, there are ample opportunities to do kainkaryam – to serve the Lord with dedication.   One’s amazement would never cease at the age of the people and their commitment.  There are Octogenarians, and there are kids aged 5,6,7 or .. .. and they are different  - respects to their parents !

 


Parents involve kids and inculcate them the right frame of mind to come to Temple and do kainkaryam – often the kainkaryam starts with ‘Chamaram’ – that of making Emperuman cool with our acts.  Little kids vie, compete with each other and cry too, wanting to have their time, their opportunity to do this – the adorable part is, they do it for sometime while providing every other kid equal opportunity.  Here are couple of kids offering samaram kainkaryam (this is not illustrative, I have not captured them all) – Triplicane is a true Punniya boomi and it amazes bakths no ends.  

 

சாமரம் அல்லது சவுரி என்பது  தெய்வங்கள் மற்றும் அரசர்களுக்கு  மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது இதமான சூழலை ஏற்படுத்த வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.  கோயில் வழிபாட்டில் "சோடசோபசாரம்' என்ற 16 வகையான வழிபாடுகளை ஆகமங்கள் கூறுகின்றன. அதில்,  சாமரமும் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. சைவ சமய அடியார்களின் வரலாற்றான பெரியபுராணத்தை தொகுத்து எழுதிய சேக்கிழாரை இரண்டாம் குலோத்துங்க சோழனான அநபாய சோழன் தனது பட்டத்து யானை மீது ஏற்றித் தானும் அவர்பின் அமர்ந்து கவரி வீசினார். அந்நிகழ்ச்சி வேதாரண்யம் கோயிலில் ஓவியமாகத் திகழ்கிறது.  

 



குழந்தைகள் ஆரம்பிக்கும் முதல் கைங்கர்யங்களில் சாமரம் வீசுதல் முதன்மையாக இருக்கும். திருவல்லிக்கேணியில்  குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு சாமரம் கைங்கர்யம் செய்கின்றனர்.  இங்கே இரண்டொரு குழந்தைகளின் கைங்கர்யம் - இன்னமும் பலர் உள்ளனர் 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்                                                         
12.3.2024  

No comments:

Post a Comment