To search this blog

Tuesday, March 12, 2024

Thiruvallikkeni Kannan - Barathiyarin Paarvaiyile !

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் கண்ணனது திவ்யதரிசனம் காணீர்  !!

 


திருவல்லிக்கேணியில் திருக்கோயில் மிக அருகே வாழ்ந்தவர் மஹாகவி சுப்ரஹ்மண்ய பாரதியார். பாரதியாரின் கவிதைகளில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய ‘முப்பெரும் பாடல்கள் - உண்மையான கவித்துவம் மிளிரும் படைப்புகள்.   கண்ணன் பாட்டின் சொற்கள் எளிமையானவை கூடவே - ஆழமான பொருள் உடையவை. வழிபடுபொருளாக மட்டும் இல்லாமல் கண்ணனை பல்வேறு நிலைகளில் உணர்ந்து பாடினவன் முண்டாசு கவிஞன்.  

 

கண்ணன் என் அரசன்  பதிவுல சில வரிகள் : 

சக்கரத்தை எடுப்பதொரு கணம்;

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;

இக்கணத்தில் இடைக்கண் ஒன்றுண்டோ?

இதனுள்ளே  பகை மாய்த்திட வல்லவன்  காண்! 

பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் கண்ணன் ஸ்ரீபார்த்தசாரதியாக மாடுகள் மேய்த்தவனாக எழுந்தருளியுள்ளான்.  இன்று காலை புறப்பாட்டில் எடுக்கப்பட்ட 2 படங்கள்

 


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
12.3.2024 

No comments:

Post a Comment