To search this blog

Monday, March 18, 2024

Thavana Uthsavam 2 - 2024 : *பரிசு நறு மலரால்* பாற்கடலான் பாதம்,*

மனித சமுதாயத்தில் அதி முக்கியமானது - இறை வழிபாடு.  கல் தோன்றி மண் தோன்றா காலம் முதலே,  இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கம் தோன்றி விட்டது. சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர்.  எம்பெருமானுக்கு எப்போதும் மணம் கமழும் மலர்களை அளிக்க வேண்டும் என்பதற்காகவே,   ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.There are flowers – some common, some unknown to us ! – heard of Rapeseed flower ?? - Rapeseed (Brassica napus subsp. napus),  is a bright-yellow flowering member of the family Brassicaceae (mustard or cabbage family), cultivated mainly for its oil-rich seed, which naturally contains appreciable amounts of erucic acid. The term "canola" denotes a group of rapeseed cultivars that were bred to have very low levels of erucic acid and which are especially prized for use as human and animal food. Rapeseed is the third-largest source of vegetable oil and the second-largest source of protein meal in the world. Read elsewhere that  the  historical Hakka village of Xiahu in Ganzhou, east China's Jiangxi Province, which boasts numerous ancient buildings and ancestral halls, has proven popular among tourists, especially since the splendid blooming of rapeseed flowers in the area this spring. The rapeseed flowers in the village have appeared in colors of gold, pink, red, orange, and more, complementing the backdrop of the village's ancient buildings. It is truly a remarkable sight. 

Back home in neighbouring state, a video of MP Kesineni Nani refusing to give a flower boquet to    TDP Chief Chandrababu Naidu on his visit  to Delhi,   went viral. While MP Galla Jayadev attempted to hand over the bouquet to Nani, suggesting he present it to Chandrababu, Nani was seen discarding it.  That time there were opinions that Nani acted out of resentment towards Chandrababu.  Seasoned  Kesineni Nani however denied it.  Now comes the news that after his decade-long stint with Telugu Desam Party, Kesineni Nani quit the party and moved to YSR Congress. 

Thiruvallikkeni divyadesam is replete with uthsavams ~ after Theppothsavam, it is time for Thavanothsavam now.      


இன்று 18.3.2024 தவன உத்சவத்தில் இரண்டாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மல்லிகை, முல்லை, கதம்பம், தவனம் என பற்பல வாசனை மலர்கள் அணிந்து, சிகரமாக மயிற்பீலி கொண்டு - அருங்கல உருவின் ஆயர் பெருமானாய் நமக்கு அற்புத சேவை சாதித்தார்.  

During this Thavanothsavam, Perumal comes to Thavana Uthsava bungalow  in the morning, has Thirumanjanam and takes rest under the roof made of thavanam – an aromatic herb.   Dhavanam (Tamil: தவனம்) [Artemisia pallens], is an aromatic herb, in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness.   During the Uthsavam, a kooralam [roof] made of  Dhavanam  is set up over the resting place of the Lord. In the evening, occurs purappadu inside the bungalow, thence – periya mada veethi purappadu back  to the temple.

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.  

நல்ல மணம் கமழும் மலர்கள் எம்பெருமானுக்கு சமர்பிக்கப்படுகின்றன.  பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு எம்பெருமானை தொழுபவர்கள் அற்புத பலன்களை, பரமபதத்தில் துயில் கொள்ளும் க்ஷீராப்த்தி நாதனையே அடையப்பெறுவர்கள் என்பது நம் பூதத்தாழ்வார் வாக்கு.  இதோ அவரது இரண்டாம் திருவந்தாதி பாசுரம் :

பரிசு நறு மலரால்*  பாற்கடலான் பாதம்,*

புரிவார் புகப்பெறுவர் போலாம்,*  - புரிவார்கள்-

தொல் அமரர் கேள்வித்*  துலங்கு ஒளி சேர் தோற்றத்து*

நல் அமரர் கோமான் நகர்.  

க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு விரும்பித் தொழுமவர்கள், இந்திரன் முதலிய தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய நற்பலன்கள் பெறுவார்கள் என்கிறார் நம் பூதத்தாழ்வார்.   இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களேயொழிய கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை; அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார்  ஆழ்வார். 

கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து வண்ண நன்மலர்களையும் அணிந்து ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் தவன உத்சவ பங்களாவில் உள்புறப்பாடு கண்டு அருளியபோது எடுத்த சில படங்கள் இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
~adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar) 
18.3.2024.
 

  

No comments:

Post a Comment