To search this blog

Sunday, March 12, 2023

Triplicane TAMBRAS samashti Upanayanam 2023

Thiruvallikkeni is ever abuzz with activities – this morning Triplicane Fund saw many people gathering.  It was samashti upanayanam conducted by TAMBRAS (Regd) – Triplicane Branch for 10 vadus. 

Upanayanam is the Samaskara, the ceremonial rite in which the young Brahmin boy is invested with the sacred thread and initiated into the Gayathri - the Holiest of all mantras in the legacy of the Rishis.  

அந்தணர்களுக்கு அதி முக்கியமானது - நித்யானுஷ்டான கர்மாக்களை அனுசரித்தல்.   மாசி மாதத்தில் நிறைய உபநயனங்களைக் காணமுடியும். மாசி மாதத்தில் உபநயனத்தைச் செய்வது மிகச்சிறப்பு. முடியவில்லை என்றால் உத்திராயண காலத்திற்குள் செய்துவிட வேண்டும் என்கிறது வேதம்.  

குழந்தைகளை, முக்கியமாக ஆண் குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கம் -  பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு.  அகங்காரம் நீக்கினாலேயே  அடக்கம் வரும். சகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக  குருகுலவாசம் என்று ஒரு ஆசாரியனிடத்திலேயே வாழும் படியாக இருந்தது நம் பண்டைய அமைப்பு. ஆசார்யரே சிஷ்யனுக்கு  தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கற்றுத்தர  வல்லவர்.  வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தைத் தருபவர் ஆச்சாரியர்தான்.   

'உபநயனம்' என்றால் 'சமீபத்தில் அழைத்துப் போகிறது'.  குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவனை பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வாழ்க்கை நிலைக்கு மாற்றுவது இந்த கர்மா.  த இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரம்மத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள்.  காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும்.  

உபநயனம் என்றால் வெறும் முப்புரி நூல் (பூணூல்) அணிவது மட்டுமே அல்ல.    பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது.  உபநயனத்தின் முக்கிய அம்சம்   குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரி மந்திரத்தை கேட்டு அனுசந்திப்பது.  அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்திரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், பிரமோபதேசம் என்று சொல்லுகிறோம்.  

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை.  உபநயனம் செய்யவேண்டிய காலம்  பிறந்து ஏழு வயசு இரண்டு மாசம் ஆனவுடன் என கூறப்படுகிறது.   பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படுகிறது.   

இன்று பூணூல் தரித்த வடுக்களும், நாம் அனைவரும், அனுதினமும் சந்தியாவந்தனம் - காயத்ரி ஜபம் தவறாமல் செய்ய வேண்டும்.  

This morning – Triplicane Unit of  Tamilnadu Brahmins Association [TAMBRAS] organized Samashti upanayanam for 10 kids  at Triplicane Fund Kalyana Mantap.  The enthusiasm, hard work and strategic planning of volunteers and Office-bears of Triplicane Unit was commendable.  State Executives including Mr Pammal Ramakrishnan attended the function.  Some photos taken by me this morning. 

-         S. Sampathkumar
12th Mar 2023. 














2 comments:

  1. Super narration..

    ReplyDelete
  2. We would like to put a samashti poonal for our younger son age 19

    ReplyDelete