To search this blog

Monday, March 13, 2023

Sri Azhagiya Singar 'Murali Kannan' thirukolam - 2023 : கருங்கண் தோகை மயிற்பீலி

 கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து  ..; ..அருங்கலவுருவின் ஆயர் பெருமான்….

 


Peacockknown  for its rich plumage and fierce jewel tones, the bird is undeniably visually  enrapturing.  The barbules in the peacock feather contain an amazing degree of optimum design, The thickness of the keratin layers is optimal for producing the brightest thin-film colour.   Though peafowl (an umbrella term for all genders and ages of the bird) are native to Asia and Africa, their iridescent feathers and general coolness have inspired humans to tote them all over the world, where they can now be found in zoos, conservatories, backyards, and even wandering around neighborhoods. 

இன்று திருவல்லிக்கேணி தவன  உத்சவத்தில் மூன்றாம் (கடைசி) நாள் மாலை ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள்   "முரளிக்கண்ணன்" திருக்கோலத்தில் புறப்பாடு கண்டருளினார்.  மாயக்கண்ணன்  குழலூதி வந்தால், லோகமனைத்தும் மயங்கும்.  இன்று  தெள்ளியசிங்கனை  தரிசனம் செய்தோர்கள்  அவன்  வடிவழகில் மயங்கி, பக்தி பரவசத்தால் கண்ணீர் மல்க அவனையே நினைத்து, அவனையே வேண்டி ஆனந்தம் அடைந்தார்கள்.

அழகான பறவை மயில் இந்தியாவின் தேசிய பறவை,  மட்டுமல்ல; பூட்டானின் தேசிய பறவையும் மயில்தான். ஆண் மயிலுக்கே பெரிய தோகை உண்டு. நன்கு வளர்ந்து முதிர்ந்த மயிலுக்கு தோகை சுமார் 200 செ.மீ. நீளம் வரை இருக்கும். அழகு மயிலின் ஓசை தன்னை  அகவல் என்று கூறுவர்!  மயிற்பீலி, என்பது : மயிலிறகு.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

~ என்பது நாம் பள்ளிநாட்களில் படித்து மனதில் பதிந்த திருக்குறள்.

One of the most beautiful living things – Peacocks, are large, colorful pheasants (typically blue and green) known for their iridescent tails. These tail feathers, or coverts, spread out in a distinctive train that is more than 60 percent of the bird’s total body length and boast colorful "eye" markings of blue, gold, red, and other hues. The large train is used in mating rituals and courtship displays. It can be arched into a magnificent fan that reaches across the bird's back and touches the ground on either side.  Though the  term "peacock" is commonly used to refer to birds of both sexes, only males are peacocks. Females are peahens, and together, they are called peafowl.

The peacock tail feathers have no flight or thermal function but have the sole purpose of providing an attractive display. The peacock tail produces colours by thin-film interference. There is a very high level of optimum design in the peacock feathers including optimum layer thickness, multi layers, precision coordination and dark background colour.  Aesthetic beauty in appearance is produced by attributes such as patterns, brightness, variety, curves, blending or any combination of such attributes.  The colours in the peacock tail are not pigment colours but structural colours, produced by an optical effect called thin-film interference.  Away from the eye region, the barbules are uniformly green.

முதலில் பார்த்த திருக்குறளின் விளக்கமாக நாம் படித்தது :(the breaking point !)    'மிகவும் இலேசான மயில் தோகையைக்  கூட அதிகமாக ஏற்றினால்  வண்டியின்  அச்சு முறிந்துவிடும்', 'அதாவது எதுவுமே அளவுக்கு மிகையானால் கேடு விளைக்கும் !!



Here are two  photos of Sri Azhagiya Singar adorning ‘peacock feather’,  taken during Thavanothsavam day 3   at Thiruvallikkeni   this evening.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.3.2023

No comments:

Post a Comment