To search this blog

Thursday, December 22, 2022

Thondaradipodigal Sarrumurai 2022 - மன்னிய சீர் மார்கழி கேட்டை

 இன்று 22.12..2022 மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில்  பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம் 


To Srivaishnavaites, today 7th day of  Margazhi, 22nd day of Dec 2022  is significant for it is ‘Kettai thirunakshathiram’ in the month of Margazhi marking the sarrumurai celebrations of Thondaradipodi Azhwar.  This year there is no purappadu as Pagal pathu  begins tomorrow  at Thiruvallikkeni – and this is Anadhyayanam period.  





 எம்பெருமான் குறித்து பக்தி செய்யவே நமக்கு இப்பிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமி மிகப் பெரியது. இதில் மலைகள், கடல்கள், நதிகள், அருவிகள், பாலைவனங்கள்,  நிலங்கள் என்று பல இருப்பினும் மனிதன் வாழ்ந்து தெளிய உகந்த இடமாய் இருப்பது பாரதமும் அதன் க்ஷேத்திரங்களும்தான்!  உலகத்தில் எவ்வளவோ நிலப்பரப்புகள் இருந்தாலும்,  நம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிக மிக புனிதமானது புனித காவேரி பாயும் தீவான திருவரங்கம். 

இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம்.   சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில்  பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம்,   ஆழ்வார் சாற்றுமுறை இன்று :   முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய  தலங்கள் ~ : திருவரங்கமும்  நாம் பார்க்க முடியாத பரமபதமும்.  

தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார்.  இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்.  திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது.  அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம். 

The great saint by name Vipra Narayanar, born at Thirumandankudi also known as Bhaktanghri renu later came to be hailed as  ‘Thondaradippodi Alvar’ due to his devotion to the devotees of Lord. Thondaradipodi rendered 55 verses in praise of Lord Ranganatha - 10 verses of Thirupalli Yezhuchi and 45 verses of Thiru Maalai. Thirupalliyezhuchi is recited in every temple to wake up the Lord and rendered during kalasanthi in the morning.   

~ the introductory lines to his prabandham “Thirumaalai” by  Thiruvaranga Perumal Araiyar.  ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:  

மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னியசீர்

தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு

திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி

உணர்த்தும் பிரான் உதித்த ஊர். 

தமிழ் ஒரு இனிய மொழி.  நம் ழ்வார்களோ  அந்த அமிழ்தில் திளைத்தவர்கள்.  இங்கே வண்டு  திணர்த்த வயல் என்றதும் வண்டுகள் நிறைந்து இருக்கும் கழனிகள் என கொள்ளலாகாது;  திணர்த்தல் என்றால் -  நெருக்கமாதல் ; கனமாகப் படிந்திருத்தல்.  இதன்படியே - வண்டல் மண் கனமாகப் படிந்து அதிலே  வளமான பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அரங்கநாதப் பெருமானை துயிலெழுப்பப் பாடல்கள் அருளவே (ஒரு சூரியன் போல) ஒளியோடு தோன்றிய, நிலைபெற்ற பெருமை வாய்ந்த, தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த பழமையான தலம் திருமண்டங்குடி என்று நான்மறையாளர்கள் பகர்வர்.  

             Thondaradippodi Aazhwar  immersed in bakthi sung everyday to wake up the Lord.  He sang about Thiruvarangam  and Paramapatham.  On  10.1.2021, there was  periya mada veethi purappadu of Azhwar with Sri Parthasarathi perumal at Thiruvallikkeni. 

Here  is a photo of Thirumylai Sri Madhava perumal and some photos of Azhwar at Thirumylai taken during thirumanjanam on 1.1.2022 – also a  video taken during thirumanjanam.   


திருமயிலை எனும் அற்புத க்ஷேத்திரத்திலே 22.12..2022 அன்று   - திரு மாதவப்பெருமாள் திருக்கோவிலிலே - மன்னியசீர் மார்கழி கேட்டையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை வைபவத்தில் - ஸ்தலதிபதியான ஸ்ரீ பேயாழ்வாரும், அன்றைய நாயகன் - விப்ர நாராயணனும் எழுந்து அருளி இருக்க - ஸ்ரீமாதவப்பெருமாள் அலங்காரமாக திருமஞ்சனம் கண்டு அருளினார். அந்த அவசரத்தில், ஸ்ரீ மாதவர் தம் திருமேனி அழகை தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டது.  திருமஞ்சன காணொளி ஒன்று  இங்கே. :  https://youtu.be/Nu4oR1inTHM

***தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்

தொண்டரடிப்பொடி  என்னும்   அடியனை 

அளியனென்றருளி உன்னடியார்க்கு ஆட்படுத்தாய் !  பள்ளி எழுந்தரு ளாயே!! 

 
~adiyen Srinivasa dhasan.
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar] 
22.12.2022








 

1 comment: