To search this blog

Sunday, December 25, 2022

Patnam Koil Sri Narthana Krishnar sarruppadi 2022- ஆடாது அசங்காது வா, கண்ணா !!

For  Srivaishnavaites – Adhyayana uthsavam is extremely significant as it offers golden opportunity of worshipping Emperuman, offering arulicheyal and more .   Pagal pathu is now on at all Divyadesangal and other temples  - on its culmination comes Vaikunda Ekadasi on 2.1.2023 followed by Irapathu uthsavam and Iyarpa Sarrumurai.  



Today  is day 3 of Pagal pathu uthsavam –  Andal Nachiyar’s Thiruppavai & Nachiyar Thiruvaimozhi goshti rendition.  At  Thiruvallikkeni it was Kalinga Narthana thirukkolam and it was ‘Narthana Krishnar’  - at    Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil.  This temple prominently is placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road,  Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself. 

கூடல் இழைத்துப் பார்த்தல் என்பது குறி பார்ப்பதில் ஒரு வகை - எம்பெருமான் கிருஷ்ணனின் மீது கொண்ட அளவிலா காதலில் ஆண்டாள் நாச்சியார் தான் எம்பெருமானிடத்தே சேருவதை நினைத்து கூடல் இழைக்கும் பாசுரங்கள் நாச்சியார் திருமொழியில் நான்காம் பத்து.  

கண்ணன் வளர்ந்து வந்த  சிறுவயதில்,  ஒரு நாள் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சாரியாக வழியே போகத்தொடங்க, மற்ற இடைப்பிள்ளைகள்  ‘க்ருஷ்ணா! அவ்வழி நோக்கவேண்டா’ அவ்வழியிற் சென்றால் யமுநா நதியில் ஒர் மடுவில் இருந்து கொண்டு அம்மடுமுழுவதையும் தன்  விஷத்தை கக்கி பயமுறுத்தும்  காளியனென்னும் கொடிய ஐந்தலைநாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்து கொண்டுள்ளது என எச்சரித்தனர்.   

கண்ணபிரான் அந்த கொடிய நாகத்தை  தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங் கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி மடுவில் குதித்து, அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறி  நடனமாடி,  வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்பது ஒரு மாஹாத்மியம்.  இந்த பிரபாவத்தையே  கோதை பிராட்டி  தம் நாச்சியார் திருமொழியில் :

ஆய்ச்சி மார்களு மாயரும்  அஞ்சிட;  பூத்த நீள்கடம்பேறிப் புகப் பாய்ந்து

வாய்த்த காளியன் மேல்  நடமாடிய; கூத்தனார் வரில் கூடிடு கூடலே

 - என இயம்புகிறார்.  



ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்.  திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.   இவரது அற்புத கீர்த்தனைகளில் ஒன்று - 'ஆடாது அசங்காது  வா கண்ணா !' - ராகம் - மத்யமாவதி; தாளம் - ஆதி 

ஆடாது அசங்காது வா, கண்ணா உன்

ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)

 

அனுபல்லவி:

ஆடலைக் காண  தில்லை - அம்பலத்திறைவனும் தன்

ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்

ஆதலினால் சிறு யாதவனே - ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)

 

சரணம்:

சின்னம் சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை

செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே

பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்

பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே

பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று - தன்

பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே - குழல்

பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்

கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது).

 

இன்று 25.12.2022  சென்னபட்டணம் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பகல் பத்து  உத்சவத்தில் மூன்றாம் நாள் - நர்த்தன கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



Here are some photos of Sri  Narthana Kannan sarruppadi at Chenna Pattnam Sri Kesava Perumal thirukovil.  .. ..  also a photo of Kalinga narthanam sarruppadi of yesterday.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.12.2022.







No comments:

Post a Comment