To search this blog

Saturday, September 24, 2022

Purattasi Masam Sani varam 1 - 2022 : வண்டார் தண்ணந்துழாயான் மாதவன்

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  This year, Navarathri festival starts from Monday 26.9.2022.   On every Saturday in this  month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Emperuman  Azhagiya Singar.   Today is  Sani varam 1. 




அழகான மணமுள்ள பூக்களில் வண்டுகள் மொய்க்கும்.  இதனால் வந்திருக்கும் பயனுண்டு ! தாவரங்களுக்கும் !!  .. .. வண்டு என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் பூச்சியினம். இவற்றிற்கு, முன் இறக்கைகள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள்தான் பறக்கப் பயன்படும். 








ஸம்ருத்தி என்ற சொல்லுக்கு - செழிப்பு என பொருள் கொள்ளலாம்.  இந்த அற்புத புரட்டாசி மாதத்தில்  எம்பெருமானை நினைத்து,   விரதம் இருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும்.  புரட்டாசி மாதத்தில் - திருமலை வேங்கடவனை நினைத்து - 'கோவிந்தா, கோவிந்தா !!' என அழைக்கும் பக்தர்களின் குரல்கள் நிறைவாக கேட்கும்.  பக்தர்களுடன் சேர்ந்து,  பாகவதர்களுக்கு நலன்கள் செய்தல் மிக நன்று !  

ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானிடத்திலே பரிபூர்ண ஈடுபாடு கொண்டவர். அவருக்கு இத்தகைய ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியே செழிப்பாக தோன்றுகிறது.  ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை அனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.  இதோ இங்கே ஒரு திருவாய்மொழி பாசுரம் (ஐந்தாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி): 

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்,

தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது  நின்றார்த்தும்,

வண்டார் தண்ணந்துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,

பண்  தான்  பாடி  நின்றாடிப் பரந்து திரிகின்றனவே.

 

வண்டுகள் பூக்களில் தேனையும் மது ரசத்தையும் பருகி ஆனந்தமுறும்.  அத்தைகைய,   வண்டுகள்  ரீங்காரமிடும்,  குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான  ஸ்ரீமன் நாரணனது  பக்தர்கள், இந்த  நிலத்திலே,  இராகங்களை  பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு  எங்கும் பரவி உலாவுகின்றனர்; இவ்வாறாக   கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை கண்டோம் கண்டோம் கண்டோம் !!    பாகவதர்களான ஸகலர்களும் வாருங்கள்;  அவ்வெம்பெருமானை தொழுது தொழுது  நன்றாக வணங்கி ஆரவாரிப்போம். என திருமாலடியார்களை அழைக்கின்றார் ஆழ்வார். 

Here are some photos of the most Thelliya Singar taken during pathi ula on day 1 of Aani brahmothsavam on 7.7.2022. 

adiyen Srinivasa dhasan
Dusi Mamandur  Veeravalli Srinivasan Sampathkumar  
24.9.2022

பாசுர விளக்கம் :  கச்சி ஸ்வாமிகள் - இணையற்ற சம்பிரதாய பொக்கிஷம் : திராவிட வேதா இணையம். 











1 comment: