To search this blog

Saturday, September 10, 2022

Thiruvallikkeni Thirup Pavithrothsavam day 6 2022

Today 10.9.2022 is day 6 of  Thirupavithrothsavam  at Thiruvallikkeni divaydesam – there is thiruveethi purappadu on all these days and then Thiruvaimozhi goshti inside the temple in the yagasalai.



இன்று  10..09.2022  திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவத்தில் ஆறாம் நாள்.  திருவல்லிக்கேணியில் நடைபெறும் பல்வேறு உத்சவங்களில் சிறப்பானது -  ஆவணி மாதம் ஏழு நாட்கள் விமர்சையாக நடக்கும்  திருப்பவித்ரோத்சவம்.  இவ்வுத்ஸவம் ஆண்டாள் சன்னதி முன்பு யாகசாலை அமைத்து நடக்கிறது.  நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத சேவை அளிக்கிறார்.  படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  

In Iyarpa comes Swami Nammalwar’s Periya thiruvanthathi,  which is enriched with encomiums and directions to devotees for attaining the lotus feet of Emperuman.  .. .. what is the purpose of life .. why did God give us the members of body in proper manner ?



‘நம்மை எம்பெருமானான ஈச்வரன் படைத்தது எதற்கு ? நமக்குக் கைகால், வாய், மூக்கு, நாக்கு போன்ற அங்க அவயங்களை நல்லபடி தந்தது எதற்கு ??   ~  எந்த  ஆராய்ச்சியும்  தேவையில்லை.  பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாடி எம்பெருமானை துதிப்பதே நம் வாழ்க்கை வழிமுறை என்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது 'பெரிய திருவந்தாதியில்".   

வகைசேர்ந்த நல் நெஞ்சும் நாவுடைய வாயும்*

மிகவாய்ந்து வீழா எனிலும்* -மிகவாய்ந்து

மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே?

மேலைத்தாம் செய்யும் வினை*  

                         ஞானத்தினால் எம்பெருமானை அடைந்து உய்வதற்கு  மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும், எம்பெருமானை  நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,  இப்புவியில்  சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள், நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் போற்றிப்  பேசுவதற்கு இயல்பான  நாவோடு கூடிய வாக்கும் கிடைக்கப்பெற்றும், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை  வாழ்த்தாமல் வெறுமனே இருப்பவர்கள், இனி எஞ்சி இருக்கக்கூடிய  காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது - என அங்கலாய்க்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது பெரிய திருவந்தாதி பாசுரத்திலே !   

Here are some photos of Sri Parthasarathi Perumal taken  this evening.  

நம்மாழ்வாரின் வார்த்தைகளுடன் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருவடி தொழுது, நம் தேசத்தையும் நம் மக்களையும் காப்பாற்ற வேணுமாய் அவனிடத்தில் பிரார்த்திப்போமாக! 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்   திருவடிகளே சரணம் !!

 

~adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
10th Sept 2022.
PS : divyaprabandha explanation excerpted from pokkisham www.dravidaveda.org – of Kachi swami (Sri U Ve PB Annangarachar swami)












No comments:

Post a Comment