Mahalaya Amavasai @
Thiruvallikkeni 2022 : Sri Parthasarathi
Swami purappadu #
Today 25th Sept 2022 (8th day of Purattasi) is Mahalaya Amavasai. Navarathri uthsavam starts from tomorrow 26.9.2022
முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து !! –தொழவேணுமென்று
நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் தொலையுமா / அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்
??
இன்று 'மஹாளய அமாவாசை'! .. .. சென்ற வருஷம் நிலைமை வேறு ! - காலை
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வாசலில் அதிகமாக காவலர்கள்
!! - கோவில் திறந்து இருந்தது - பக்தர்கள் சேவிக்க அனுமதி உண்டு ஆனால் திருக்குளம்
அருகே சடங்குகள் செய்ய விரும்பிய ஹிந்து பக்தர்கள் துரத்தப்பட்டனர். ஏன் இப்படி இந்துக்கள் சம்பிரதாயங்கள் அனைத்துக்கும்
அரசாங்க எதிர்ப்பு !! ஏன் திருக்கோவிலுக்கு
வரும் பக்தர்களுக்கு எந்த வசதியையும் செய்து தராமல் இடர்பாடுகள் மட்டுமே அதிகாரிகள்
செய்கிறார்கள் !! அய்யகோ சென்ற வருஷம் - கடற்கரை
பகுதிகள், நீா்நிலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு வழிபாடு
செய்ய பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனக்கூறி பல்வேறு விதமான தொந்தரவுகள் பக்தர்களுக்கு
!!
மஹாளய அமாவாசை : - ஐதீகங்கள் ! நம்பிக்கைகள்
!! சடங்குகள் ! மத நம்பிக்கைகள் !! - சிலருக்கு புரியவில்லை என்பதால் மட்டுமே இவை எவையுமே
அர்த்தமற்றவை ஆகிவிடாது !! மாளய அமாவாஸ்யை வழிபாடு இந்துக்களின் அடிப்படை ஆணிவேர்
நம்பிக்கை. வேர்கள் இல்லாது விருட்சங்கள் இல்லை; விதைகள் இல்லாது கனிகள்
இல்லை. முன்னோர்களின் சாயல் இல்லாமல் நம் தலைமுறைகளே இல்லை என்கிறது கருட புராணம்.
வாழையடி வாழையென நம்மை வாழ்விக்கும் முன்னோர்களை மகாளய அமாவாசை தினத்தில்
முடிந்த அளவுக்கு வழிபட்டு நலமும் வளமும் பெறுதல் ஹிந்து தர்மம்.
மகாளய தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள். 'மறந்து போனவர்களை மாகாளயத்தில் சேர்' என்பது பழமொழி. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது ஹிந்து தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல், பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும் கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு. மூதாதையர்களுக்கு மக்கள் நன்றி காட்டும் நாளே மகாளய அமாவாசை.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள்.
அதுநன்று இது தீது என்று ஐயப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.
இந்த பூவுலகில் - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டு ஐயுற வேண்டா ! நம் பேயாழ்வார் அருளுரை இதோ : எவ்வித மனக்கிலேசமும் இல்லமால், தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனின் அழகிய, விரும்பத்தக்க திருவடிகளை பற்றி தொழுதால் ஒன்றே போதுமே ! நமது முழு பாவங்களும் முடிந்து, கஷ்டங்கள் எல்லாம் நம்மை நீங்கும். நலம் தரும் சொல் 'நாராயணா என்ற நாமமே *'.
In astronomy, the new moon [Amavasyai] is the first lunar phase, when the Moon and Sun have the same ecliptic longitude. At this phase, the lunar disk is not visible to the unaided eye, but its presence may be detected because it occults stars behind it.
Last year, the moon went through a remarkable celestial event, the only one of its kind in a 28-year window. The moon passed in front of three planets and one of the sky’s brightest stars. The last time it obscured three planets in so short a period was in 2008, and the next will be in 2036. Astronomers refer to the moment when one celestial body blocks out another in Earth’s sky as an “occultation.” It happens fairly regularly as the moon orbits our world, but it’s unusual for so many bodies to be involved in this way.
Ever heard of a moon by name ‘Europa’ ? Europa also Jupiter II, is the smallest of the four Galilean moons orbiting Jupiter, and the sixth-closest to the planet of all the 80 known moons of Jupiter. It is also the sixth-largest moon in the Solar System. Europa was discovered in 1610 by Galileo Galilei and was named after Europa, the Phoenician mother of King Minos of Crete and lover of Zeus (the Greek equivalent of the Roman god Jupiter). Slightly smaller than Earth's Moon, Europa is primarily made of silicate rock and has a water-ice crus and probably an iron–nickel core. It has a very thin atmosphere, composed primarily of oxygen. In addition to Earth-bound telescope observations, Europa has been examined by a succession of space-probe flybys, the first occurring in the early 1970s.
On Thursday, Sept. 29, at 2:36 a.m. PDT (5:36 a.m. EDT), NASA’s Juno spacecraft will come within 222 miles (358 kilometers) of the surface of Jupiter’s ice-covered moon, Europa. The solar-powered spacecraft is expected to obtain some of the highest-resolution images ever taken of portions of Europa’s surface, as well as collect valuable data on the moon’s interior, surface composition, and ionosphere, along with its interaction with Jupiter’s magnetosphere. Such information could benefit future missions, including the agency’s Europa Clipper, which is set to launch in 2024 to study the icy moon.
Back home, on the important Mahalaya Amavasai day, Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu. In this earthly World, most worries are in determining – what is good and what is not – why doubt all these, when you have the simplest way out ? Sri Peyalwar offers his golden advice – he says : the simplest thing in life that we can do, is worship the Golden feet of Sriman Narayana with a Tulsi garland on this chest, who is easily accessible to every one of His bakthas. The sins and karma would vanish without a trace before we age.
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
25.9.2022.
🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete