To search this blog

Saturday, June 11, 2022

Thirumala Tirupathi ~ temple elephants

Thirumala Tirupathi ~ temple elephants 

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.   

மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்,  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.   

விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு ! திருப்பதி திருமலை திருக்கோவில் முன்பு யானைகள்.


Here is a video of Temple elephants seen before ‘Bangaru vagili’ the  main gate of Thirumala temple.: https://www.youtube.com/shorts/KS7_9MvexTY 


No comments:

Post a Comment