To search this blog

Monday, March 28, 2022

Sri Azhagiya Singar Ananda vimanam 2022 - 'Bantu reethi koluv'

இன்று  28.3.2022  ஸ்ரீஅழகியசிங்கர் பங்குனி  ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு 9ம் உத்சவம் இரவு கண்ணாடி பல்லக்கு; தெள்ளியசிங்கனுக்கு அற்புதமான ஆனந்த விமானம்.  ஸ்ரீஅழகியசிங்கர் பேயாழ்வார் கோவில் தெரு வழியாக எழுந்து அருளி, திருமொழி செவி மடுத்து, விமானத்தில் எழுந்து அருளி, குளக்கரை, பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.  



We go to Temples, worship Emperuman, forget our worries and are blissfully happy…  .. in the midst of festivity in any Temple, there is something unmistakably heard .. .. .. that makes you happy !  - the sound of music – not only that of Temple bells – more of Mangala Isai – Nadaswaram & Thavil. 


திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுக்காக நாதஸ்வர வித்துவான்கள், தவில் வசிப்பவர்கள் - பக்தி  பரவசத்துடன், தங்களை அர்ப்பணித்து சேவை புரிகின்றனர்.  நித்தியகால பூஜையில் வாசிக்கப்படும் மங்கல இசை மக்களுக்காக அல்ல !  இறைவனுக்காக !!  மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, சுபம் போன்ற பொருள்களில் கையாளப்படுகிறது.   மேளக் குழுவின் முதன்மைக் கருவியாக நாகசுரம் விளங்குகிறது. இது ஒரு குழல் கருவியாகும். இதனைப் பெரு வங்கியம் என்றும், நாகசுரம் என்றும், நாயனம் என்றும் அழைப்பர்.  ப்ரஹ்மோத்சவம் போன்ற திருவிழா காலங்களில் சிறப்பு வாத்திய இசை ஏற்பாடு பண்ணுகிறார்கள். ஒன்பது நாளுமே உத்சவத்தில், பத்தி உலாத்தல் மற்றும் பெரிய மாடவீதி புறப்பாடு சமயங்களில் சிறப்பான இசையை கேட்கலாம்.  இன்று திருமயிலை ராஜேஷ் குழுவினர் அற்புதமாக இசைத்தனர்.

For sure, you have heard many famous singers singing this Thiyagaraja keerthana ‘Bantu reethi koluv’ - In this beautiful keerthana, Sri Thyagaraja  pleads with Lord Rama to give him the post of a sentinel  of Sree Rama. The symbolic meaning is that he wants to be in His presence always (just as Sri Kulasekara Azhwar pleaded Lord Venkateswara to be in holy Thirumala and infront of Lord Thiruvengadamudaiyan)

బంటు రీతి కొలువీయ వయ్య రామ

తుంట వింటి వాని మొదలైన  !  మదాదుల బట్టి నేల కూలజేయు నిజ

రోమాంచమనే, ఘన కంచుకము ! రామ భక్తుడనే, ముద్రబిళ్ళయు

రామ నామమనే, వర ఖఢ్గమి ! విరాజిల్లునయ్య, త్యాగరాజునికే

 

baNTu rIti koluv(i)yya(v)ayya rAma

tuNTa viNTi vAni modalaina mad(A)dula ! goTTi nEla gUla jEyu nija (baNTu)

rOmAncam(a)nu ghana kancukamu ! rAma bhaktuD(a)nu mudra biLLayu

rAma nAmam(a)nu vara khaDgamivi ! rAjillun(a)yya tyAgarAjunikE (baNTu)

 

O Lord Rama, as an orderly sentry,  Into your service, may I gain entry, O Lord rAma! Bestow on me (Thigayya) the privilege (“kolu”) of being in Your service as a servitor (“Bantu rIti”). In the Anupallavi, Sri Thyagaraja Swamy says that, the guard’s post should be such that he is empowered to destroy all the demons which are Arishadvargas (Arishad Vargas are the six passions of the mind: Kama - lust, craze, desire; Krodha - anger, hatred; Lobha - greed, miserliness, narrow minded; Moha - delusory emotional attachment; Mada or Ahankara - pride, stubborn mindedness; and Matsarya - envy, jealousy, show or vanity, and pride) and since the guard is empowered to do so, he needs such a guard's post.

For those interested in Carnatic music here are some photos of Nadaswaram and  a rendition by Nadaswara  Thirumylai Rajesh kuzhu of the keerthana : 


More photos of the Anandha vimana purappadu and Sri Azhagiya Singar would be posted later.

adiyen Srinivasa dasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.3.2022 

பின் குறிப்பு :  பாட்டறியேன் - ராகம் அறியேன் ! கர்நாடக சங்கீதம் நான் அறியேன் (இதில் ஒன்றும் பெருமை இல்லை என்பது மட்டும் அறிவேன்).. .. ..     ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள்  என் போன்ற ஞான சூனியங்களுக்கு - இராகங்களின் பெயர்களே புரிபடாது -  இணையத்தில் தேடினால் : அம்ருதவாகினி,  அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி  தன்யாசி, தர்பார்,  தேவகாந்தாரி, என - .. வாசிப்பை கேட்டு அது எந்த ராகம் என்பது .. .. .. !!!   - எனினும் சங்கீதம் கேட்க கேட்க ஆனந்தத்தை தருகிறது.  அதுவும் திருக்கோவில்களில் வாசிக்கப்படும் நாதஸ்வரம் மனதை மயக்குகிறது.









2 comments: