To search this blog

Sunday, March 20, 2022

Sri Azhagiya Singar - divine Flautist - Punnaikilai vahanam 2022

 இந்த அற்புத பாரத தேசத்தின்  வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் - முக்கியமானவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.  சிறந்த இதிகாச புராணமான  மஹாபாரதம் - கண்ணனின், பிறப்பு, வளர்ந்தது, தூது சென்றது, நீதியை நிலை நாட்டியது என விவரிக்கும் உன்னத காவியம்.    

மனித மனதை ஆற்றுப்படுத்தும் கலைகளில் முக்கியமானது, இசை. இயன்ற போதெல்லாம் வரம்பின்றி கேட்டு ரசிக்கலாம். இசைக்கு இன்றியமையாதவை கருவிகள். மயங்க வைக்கும் காற்றிசைக் கருவிகளில் ஒன்று புல்லாங்குழல்.  காற்று இசைக்கருவி வகையைச் சேர்ந்தது புல்லாங்குழல். துளை வழியே காற்றை ஊதி இசையை உருவாக்குவதால், துளைக்கருவி எனவும் அழைப்பர். எம்பெருமான் கண்ணனாக பிறந்து கோகுலத்தில் வளர்ந்த அற்புத நாட்களில், அவரது பால்ய பருவத்திலேயே எல்லா சிறப்புகளையும் உணர்த்தினார்.  வேணுகோபாலன் கண்ணனது  குழல் ஓசை . 




இன்று திருவல்லிக்கேணி சிறப்பு ப்ரஹ்மோத்சவத்தில் முதல் நாள் - இரவு புன்னைக்கிளை வாஹனம்.  ஸ்ரீதெள்ளியசிங்கர் - கண்ணபிரானாக, வேணுகோபாலனாக வேய்ங்குழலுடன் சேவை சாதித்தார்.  கிருஷ்ணபிரானை   "யோகேச்வரன்' என்று மஹாபாரதம் போற்றுகின்றது. அணிமாதி சித்திகள் எல்லாம் கிருஷ்ணனின் கை விரல் நுனியில் கிடக்கின்றன. கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் இச்சையுள்ளவன். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன்... அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, "திவ்விய பிரபந்தம்' அழகாகப் பாடுகின்றது.  புல்லாங்குழலில் "ஸ்வரங்கள்' பிறக்க அதை இசைப்பவனின் பிராண சக்தியும், குழலில் உள்ள துளைகளும், இசைப்பவனின்,  "சிறு விரல்கள் தடவிப் பரிமாறுதல்' என்னும் நயமும் தேவைப்படுகின்றன.  

கண்ணபிரான்  ஊதின குழலினோசை செவியில் விழப்பெற்ற கந்தருவர்கள்  - பரமபோக்யமான இக்குழலோசையாகிற வலையிலே  கட்டுப்பட்டு, “இனிப் பாட்டுத் தொழிலாகிற பெருஞ்சுமையில் நமக்கு யாதொரு அந்வயமுமில்லை” என்று நிச்சயித்தொழிந்ததுமன்றி, கீழுள்ள காலமெல்லாம் தாம் பாடித் திரிந்தபடியை நினைத்து இவ்வளவு நாட்காளாக இதை கேட்காமல் இருந்தோமே என வருந்தினராம் என்கிறார் நம் பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழி பாசுரத்தில்"  

கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும். கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பை நிறைத்து விடும். தெய்வீகமான அப்புல்லாங்குழலிருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.  





புல்லாங் குழல் கொண்டு வருவான் – அமுது பொங்கித் ததும்புநல் கீதம் படிப்பான்

கள்ளால் மயங்கியது போலே – அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.  

என்று கண்ணனின் புல்லாங்குழல் இசைபற்றிப் பாடுகிறார் பாரதி.   அலைபாயுதே கண்ணா எனும் தமிழ் பாடலை, நாம் பலதடவை கேட்டு இருப்போம்.  இப்பாடலை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்.  திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.  

அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே !

உன் ஆனந்த மோகன வேணுகானமதில் ||

நிலை பெயராது சிலை போலவே நின்று*

நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளிதர

என் மனமிக அலைபாயுதே கண்ணா ||  

எத்தனை கோணம் எதனை பார்வை என்ற (படம் வெளிவந்ததாக தெரியவில்லை) - இசைஞானி இளையராஜாவின் இசையில் கே ஜேசுதாஸும் ஜானகியும் பாடிய ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் கீர்த்தனை இங்கே :  

 


At Thiruvallikkeni divyadesam – the evening of day 1 of the Brahmothsavam is ‘Punnaikilai vahanam’ – with Sri Parthasarathi / Sri Azhagiya Singar as Lord Krishna, the Divine flautise.  The first photo is of 2016 – rest are  photos of  Sri Azhagiya Singar as the   Divine Flautist, taken during the Punnaikilai vahana purappadu this evening. 

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20th Mar 2022.
 

1 comment: