"கோட்டை
மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும்.
குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது.
நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து
ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது.
சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக்
கொண்டு போனார்கள்" .. .. .. ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் : "சிவகாமியின்
சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம்.
பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான். மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள், பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்கியின் புதினம் சிவகாமியின் சபதம்.
தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம் சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் என்ற சோழ அரசன் இந்நாட்டின் சங்ககால அரசன். தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது. பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர்; ஆங்காங்கு இருந்த காடுகளை அழித்துக் ‘காடு வெட்டிகள்’ என்று பெயர் பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.
The
Pallava Empire was the largest and most powerful South Asian state in its time,
ranking as one of the glorious empires of world history. The Pallavas gained
prominence after the eclipse of the Satavahana dynasty. The history
of Pallavas depicts continued war of ascendance with Chalukya empire.
Pallava Kings were patrons of Srivaishnavism and built many temples for
Sriman Narayana. Pallavas for a major part of their tenure ruled from
Kanchi. From ancient times, our lives are intrinsically
mingled with temples which are the torch bearers of our glorious heritage – the
hindu way of life. Obeisance to God, Acharyas and those involved in temple work
is our primordial duty.
பல்லவ
உத்சவம்: திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால்,
இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு
உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை
மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட
ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை
முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு
ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலத்தின்
தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.
பிற்காலப்
பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட
இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும்
மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. தந்திவர்மன் (கி.பி
775-825) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவர் . இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின்
மகன். இவரது கால கல்வெட்டு திருவல்லிக்கேணி திருக்கோவிலில் உள்ளது. தமிழ் கோப்பில் பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது :
· பல்லவம்
- இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்
· ஐம்பத்தாறின்
ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
· பல்லவராயன்
- மூடன் : இளிச்சவாயன்.
· பஞ்சி
ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க, செஞ்செவியகஞ்சம்
· நிகர்,
சீறடியள் ஆகி, - கம்பராமாயணம்.
· சூர்ப்பணகை
ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது. ‘விளக்கம் மிக்க
செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.
Pallavam is a period – it is the period when tender shoots
spring up. During Pallava Uthsavam, ‘Brindaranya Sthala mahimai’ is read
before Sri Ranganathar at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi
Swami Temple. After this there is periya maada veethi purappadu
everyday. On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar
astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar
Thirukkalyanam.
பங்குனி
உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம்
என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர் திருவாய்மொழி
மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள்
புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு
அருள்வார். தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி
உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லித்தாயார்
திருக்கல்யாணமும் சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில்
அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.
One odd
reference to Pallavam is found in Thirumangai Azhwar in Thirumozhi ~: “பல்லவம்
திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து
அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes
the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur
(Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings –
says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on
the hood of Kalinga ... .. .. .. .
திருமங்கை
மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில்
- தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின்
படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த
தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார்.
There was no thiruveethi purappadu for Sri Ranganathar
on day 1 of Pallava uthsavam as it coincided with Sri Parthasarathi thavana
uthsavam and today day 2 there was periya mada veethi purappadu with
both muthal thiruvanthathi and irandam
thiruvanthathi in the goshti - here are
some photos taken during the purappadu.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.03.2022.
No comments:
Post a Comment