Sunday 13th Mar 2022 is ‘Punarvasu
(punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara
thirunaal of Sri Kulasekhara Azhwaar. Kulasekarar was the amsam of
‘kausthubam’ – the jewel adorning Sriman Narayana. He was born in Thiruvanjikulam as son of King Thiruviradhan
and ruled the Chera Empire.
ஆழ்வாரின் பக்தி
அபரிமிதமானது. ஸ்ரீராமாயண உபன்யாசம் கேட்கும் போது, ஸ்ரீராமபிரான் போரிட செல்கிறான்
எனக்கேட்டவுடன், குலசேகரன் தன்னை முற்றிலும் மறந்து, ராமபிரானுக்கு உதவ தன் சேனையுடன்
ஆயத்தமானார் ! பின்பு சக்கரவர்த்தி திருமகன் தானாகவே கரன், தூஷணன் போன்ற அரக்கர்களை
அழித்ததையும், இராவணனை கொன்று பட்டாபிஷேகம் நடந்ததையும் கேட்டு ஆனந்தமுற்றார்.
திருவேங்கடமுடையான்
மீது கொண்ட பக்தியினால் இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும்
அற்புத பிரபந்தம் - (105) பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம். ராமகாதையை
பத்துப் பாசுரங்களில் இயற்றி, திருசித்ரகூடப் பெருமானுக்கு (சிதம்பரம்) அர்ப்பணித்தார்.
“நாராயணாய” எனும் சொல்லுக்குப் பொருளை “நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெருவாழ்வு” என்று சொல்லப்படுகிறது. நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும் அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம். திவ்யதேசத்தில் வாழும் பேறு பெற்ற நமக்கு எம்பெருமானின் தாளிணையில் சிறுசிறு கைங்கர்யங்கள் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறுகிறது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி - மஹா பாரதப்போரில் அர்ஜுனனுக்கு சாரத்யம் செய்து கீதோபதேசம் பண்ணியவன் - போரில் பீஷ்மர் ஏனையோரின் அம்புகளை தாங்கி பாண்டவர்களை ரக்ஷித்தவன். ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களில், திருவல்லிக்கேணியில் எம்பெருமானுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
பெருமாள் திருமொழியில்
எட்டாம் திருமொழி - சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீராமபிரானை கௌசலை தாலாட்டும் பாசுரம்.
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்!
செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென்
கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின்
பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் (இராவணனின்) மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே!
செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத அழகாக கட்டமைக்கப்பட்ட மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ! என இராமனை
கொஞ்சுகிறார் நம் ஆழ்வார்.
Being thavana uthsavam day 4 at Thiruvallikkeni – in the morning Azhwar accompanied Sri Parthasarathi
Perumal to thavana uthsava bungalow – there was thirumanjanam for Perumal and
Azhwar and after thirumanjanam was Thiruppavai sarrumurai – swapprabantham
(Perumal thirumozhi goshti) at bungalow. Here are some photos taken this
morning.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.3.2022
Very nice. 🙏🙏🙏🙏🙏
ReplyDelete