To search this blog

Thursday, March 17, 2022

Pallava Uthsavam - Sri Ranganathar thiruther 2022

"வன்சொல் இனிது"  !?!? - எவ்வாறு இப்படி சொல்லலாகும் ??    கேட்பவர்க்கு வெறுப்பையும் துன்பத்தையும் விளைக்கின்ற கொடுஞ்சொற்களே  வன்சொல்.  பிறர் வருந்தும்படி ஈன வார்த்தைகளைப் பேசுகின்றவன் பாவியாய் இழிகின்றான். இனியன கூற எய்தியுள்ள புனித வாயால் கொடியன பேசி நெடிது மகிழ்தலாகுமோ !!   இனியவற்றையே பேசுதல் என்பது மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய ஓர் உயர்ந்த அறநெறி. கடுஞ்சொற்கள் கூறி அடுத்தவர் மனத்தை நோகச் செய்யும்  அதிகாரம் யாருக்கும் இல்லை. இன்சொல் பேசும் பண்புநலத்தின் சிறப்பை விளக்கவென்றே `இனியவை கூறல்’ என்றொரு தனி அதிகாரத்தைப்  படைத்திருக்கிறார் வள்ளுவர்.     



                At Boologa Vaikundam ~ Thiruvarangam is the beautiful Temple where Lord Ranganathar in reclining posture provides all good things to HIS devotees.   அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம்பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’.   

Thiruvarangam divyadesam is sung by all Azhwars [excepting Madhurakavigal, who did not sing of any divyadesam]; our Greatest Acharyar Sri Bhagawath Ramanujar lived here, did yeoman service at this divyadesam and codified the religious rituals.  In this great place lived Great Acharyars including Periya Nambigal, Battar, Nampillai, Pillai Logachariyar and more…. It was at this Temple that Manavala Mamunigal rendered discourse on Thiruvaimozhi and Namperumal Himself concluded it with His Thaniyan.  There is also the most intricate hall of 1000 pillars [called Aayirankaal mandapam] which actually has 953 dating back to Vijayanagara era.   

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது நடத்தை தொடர்பில் சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது.  நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும்.   

நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளை கூறும் நூல் நன்னெறி - நன்மை+நெறி=நன்னெறி என வழங்கப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்கள் உள்ளன.  இந்நூலில் முதல் இரண்டடியில் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தும், அடுத்த இரண்டடிகளில் அதனை விளக்க வந்த உவமையும் கூறப்பட்டுள்ளன.  இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.  அவர் தம் பாடலில் ஒன்று :    வெளிப்படுகின்ற சொல்லைவிட, சொல்கின்றவரின் நோக்கம்தான் -எப்பொழுதும் முதன்மையானது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல்தான், பலர் தங்களுக்குக் கிடைத்த நல்லுறவுகளைக் கைவிட்டு விடுகின்றனர்.  

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி(து) ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கரும்பு

வில்லோன் மலரோ விருப்பு.  

உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும். மாணவனைப் பார்த்து ஆசிரியர் சொல்லுகின்ற கொடுஞ்சொல்லும், மகனைக் கண்டிக்கும் தந்தையின் கொடுஞ்சொல்லும் உண்மையில் கொடுமையானவை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கூறுபவை. எனவே, அந்தக் கொடுஞ்சொற்களும் இன்சொற்களாகவே கருதப்படும் என்பதே இதன் உட்கருத்து.





எப்போதும் நல்வினை நற்பயனையும், தீவினை தீய பயனையும் அளித்தே தீரும். "ஆயிரம் பசுக்களிலும் கன்று தன் தாயைத் தேடி அடைவது போல், முன் பிறப்பில் செய்த செயல் செய்தவனைப் பின்பற்றுகிறது'' என்று மகாபாரதம் கூறுகிறது.இன்று குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி பாசுரம்:

தீதில் நன்னெறி நிற்க  அல்லாது செய்

நீதி யாரொடும் கூடுவதில்லை யான்

ஆதி ஆயன் அரங்கன்  அந் தாமரைப்

பேதை மாமணவாளன்றன் பித்தனே.

வாழ்க்கையில் பல்வேறு வாய்ப்புகள் நேரலாம் ... நல்வழியில் அல்லது தீவழியில் செல்லலாம்.  மேம்போக்காக - தீவழி எளிதாகவும் நிறைய பொருள் அளிப்பதாகவும் தெரியலாம் !  குலசேகரர் சிறந்தவர் -  குற்றமற்ற நல்வழி இருக்க -  அவ்வழியே ஏகாமல் - அல்லாது செய்வார்  அதாவது, நல்வழிக்கு எதிர்த்தட்டானவற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு, யான் சேர்வதில்லை, சேரவும் மனம் இழைவதில்லை.   உலகங்கட்கு  முதல்வனாய்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாக  அவதரித்து ஸர்வஸஞ்லபனாய் அழகிய தாமரைப் பூவில் அவதரித்த  பிராட்டியின் வல்லபவனான ஸ்ரீரங்கநாதன் திறத்தில் ஆசைப்பட்டு பித்தனாக இருக்கிறேன். அது எமக்கு உகந்தது என்கிறார் ஆழ்வார் தமது பாசுரத்தில்.  

As the Temple at Thiruvarangam  is a massive structure enclosed by seven prakarams [mathils / concentric walls], the Ther Thiruvizha [Car festival] occurs at different prakaram on different time.   In the tamil  month of ‘Thai’ – the Ther festival is held in Uthara veethi; the Chithirai Thiruther occurs in ‘chithirai veethi’.   

Back home at Thiruvallikkeni divyadesam, in the ongoing Pallava uthsavam today,  it was Thiruther for Sri Ranganathar  – here are some photos of the purappadu of Mannathar to siriya Thiruther and ther purappadu.

 

..adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.03.2022.








No comments:

Post a Comment