Kairavini Karaiyinile !!
கைரவிணி புஷ்கரிணி மஹாத்மீயம் - திருவல்லிக்கேணி திருக்கோவிலின் புனிதகுளம்.
The ball was hit hard, travelled high and fell in to a shop in North
Tank Sq Street for a Six !! – a time,
when school students like me, watched with awe some stars of Triplicane play !
inside the Thirukulam – yes, you are reading it right “Cricket inside the kulam’ –
in mid 1970s – the temple pond in front of famed Sri Parthasarathi temple
turned dry totally – all the fishes were caught and in a few days, there was
hard soil on which residents played Cricket !!
Water crisis is not new or unheard
to residents of the Capital of Tamil Nadu.
Though situate close to the famed Bay of Bengal Marina beach, India’s
sixth-largest city gets an average of about 1,400mm (55 inches) of rainfall a
year, more than twice the amount that falls on London and almost four times the
level of Los Angeles. Yet there have been tough times with people running after
water ! - in 2019 it hit the headlines
for being one cities almost running out of water —trucking in 10 million liters
a day to hydrate its population. Just like South Africa it was heading towards “Day Zero”: almost running out of water, in
other words. Of Chennai’s four main reservoirs, three had gone completely dry –
and the last, Poondi, had 26 million cubic feet of water, against its full
capacity of 3,231 million cubic feet. Globally too, water is turning scarce - Six
hundred million people across the country face high to extreme water stress.
According to a recent report by World Resources Institute, a U.S.-based think
tank, India is the 13th most water-stressed country in the world – but has triple
the population of the other 17 worst-affected countries combined.
Well, not any post on Cricket, water crisis, water
management or anything else – purely one on Thirukulam – ‘the famed Kairavini
pushkarini’.
In the divyadesam of Thiruvallikkeni, the tamil month of Masi has
special significance. On the Full moon [Pournami day and Magam Nakshathiram]
Sri Parthasarathi Swami visits the shores of Marina, famously known
as Masi Magam. On Masi New moon [Amavasyai] starts the float
festival at Thiruvallikkeni. The tank of Sri Parthasarathi Swami is
famous ~ it is ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself
derives its name (~ and my blog is
titled Kairavini Karaiyinile literally meaning on the banks of holy Kairavini, the
temple tank).
திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது திருக்கோவில் குளம்
- கைரவிணி புஷ்கரிணியில் இருந்து. நம் பகவத் ராமானுஜர் பிறக்க
சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது. இதன் மையத்தில் சிறிய அழகான 'நீராழி
மண்டபம்' உள்ளது. தண்ணீர் தளும்பும் நாட்களில் இதனுடைய கீழ் படிக்கட்டுகள்
தெரியாது. இந்த மண்டபத்தின் மேல்பாகத்தில் விமானம் உள்ளது. நீர்
நிலையில் நீரின் உயரம் அதிகமான பகுதியில் ('ஆழ்'எனப்படும்) மண்டபம் இருப்பதால் 'நீராழி
மண்டபம்' எனப்படுகிறதாம். இத் திருக்குளத்தில் மீன்களே கிடையாது என பண்டைய நூல்கள்
இயம்புகின்றன. இப்போது பெரிய பெரிய மீன்களை காணலாம். இவை சில
வருடங்கள் முன்பு சைமா அமைப்பினர் குளத்தினை
தூர்வாரி சுத்தம் செய்த சமயம், குளத்து தூய்மைக்காக சிறு மீன் குஞ்சுகளை வாங்கி விடப்பட்டன!
முன்னர் சில காலங்களில், திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு வீட்டிலும் கிணறுகள்
இருந்தபோது, கொசுக்களை கட்டுப்படுத்த, மாநகராட்சியினர் 'கப்பீஸ்' எனப்படும் மீன் வகையை
குளத்தில் வளர்த்து, சட்டியில் கொண்டு சென்று ஒவ்வொரு வீட்டு கிணற்றிலும் விடுவார்கள்..
The tank has
added significance attributed to the birth of “Yathi Rajar” – Swami Ramanujar
due to the penance undertaken by Kesava Somayaji and Kanthimathi ammal. Pushkarinis were developed closely associated
with temples. The water from the tank
was once used daily for thirumanjanam and all other religious functions of the
Lord. The conclusion of Brahmotsavam would be by ‘thirthavaari’ the sacred bath
at the tank.
திருவல்லிக்கேணி திவ்யதேசம்
முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள் நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது. இத்தலத்திற்கு 'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம்,
துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு. திருக்கோவிலின்
புஷ்கரிணி மிகவும் விசேஷமானது - ஒரு காலத்தில்
இவ்வூரில் திசைக்கொன்றாக - இந்திர தீர்த்தம்,
சோம தீர்த்தம், அக்னி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் என இருந்து, பின் இவை எல்லாம் சேர்ந்து
"கைரவிணீ' எனும் புனித தடாகமாக உருவானதாம்.
கைரவிணி புஷ்கரிணி என்பது இது திருக்கோவிலின்
புனித குளம். இந்த திருக்குளம் மிக புனிதமானது. இப்பொய்கையை கண்டாலே ஆனந்தம் மிகுந்து, தீவினைகள்
எல்லாம் அகலும். பருகிலினாலே மிக பேறு கிட்டும்;
குடைந்தாடுவோர்க்கு மறு பிறவியே கிடையாதாம் ! - அவ்வளவு சிறப்பு பெற்றது இந்த குளம். திருவல்லிக்கேணி என்ற பெயர்க்காரணம் ஆன தடாகை.
கைரவம் என்றால் செவ்வல்லி - ஆம்பல் வகை பூவினம். இந்த தடாகத்தில் செவ்வல்லி மண்டி நீரை மறைத்து இருந்து வந்தது. திருவட்டாறு, திருச்சிற்றாறு (திருச்செங்குன்னூர்),
பெருங்குளம், வெள்ளக்குளம் என பல திவ்யதேசங்கள் தடாகங்களின் கரையிலே அமைந்துள்ளது போல
- இவ்வூர் செவ்வல்லி நிறைந்த கைரவிணி திருக்குளக்கரையினில் அமைந்தமையால் "திரு
அல்லிக்கேணி"
இந்த தீர்த்தத்தின் கரையில் ப்ருகு முனிவர் பலகாலம் தவம் செய்து வந்தார். அவரது ஆஸ்ரமத்தில் சந்தன மரத்தடியில் பெரியபிராட்டியார் மஹாலக்ஷ்மி குழந்தையாக, வேதவல்லி எனும் திருநாமத்துடன் அவதரித்தாள். தவ வலிமையால் ஸ்ரீரங்கநாதரையே மன்னாதன் [என்னுடைய நாதன்] என அடையப்பெற்றாள். வேதவல்லி தாயார் ஸ்ரீரங்கநாதர் திருக்கல்யாணம் சிறப்புற நடந்தேறியது.
புனித திருவல்லிக்கேணி ஸ்தலப்பெருமை ப்ரஹ்மாண்ட புராணத்தில் 10 அத்தியாயங்களில்
விவரிக்கப்படுகின்றது. இத்தலத்தில் அற்புத
கைரவிணி புஷ்கரிணியிலே கேசவ சோமாஜியார் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, நம் எம்பெருமானார்
சுவாமி ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரிலே அவதரித்தார். இக்கரையிலே
- அத்ரி, ப்ருகு, மார்க்கண்டேயர், மதுமான், ஆத்திரேயர், போன்ற பெரிய ரிஷிசிரேஷ்டர்கள்
நெடுங்காலம் தவம் இருந்துள்ளனர்.
விசுவாவசு என்ற கந்தர்வன் ஒருநாள் ஆகாச மார்க்கமாக தெற்கில் சென்று
கொண்டிருந்தான். விந்திய மலையின் தென்பாகத்தில்,
ஒரு பொய்கைக்கரைதனிலே ஆழ்ந்து தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரின் மீது அவன்
நிழல் படர்ந்தது. முனிவர் கோபம் கொண்டார். சீற்றத்துடன் அவனை 'உடலிலி' ஆகக் கடவாய் என சாபமிட்டார். முனிவரது சாபத்தினால் பெரும்பயம் கொண்ட கந்தர்வன்,
அழகாபுரிக்கு இறைவனான குபேரனை அடைந்து, அபாயம்
காத்து அபாயமளிப்பீர் வேந்தே என்று அணுகினான்.
குபேரன் அவனுக்கு - ஒருவன் செய்யும் கொடுவினைகள் அழல் போல வாட்டும், நீ சிவபிரானை
நோக்கி கடுந்தவம் செய்வாய்' என உபதேசித்தான்.
கந்தருவர் சிவபிரானை வணங்க, நீலகண்டனோ -
விருந்தாவனமே தவத்திற்க்கான தலம், கைரவிணி கரையினிலே சென்று தவம் ஆற்றுவாய்
என வழி கட்டினான். இங்கே விசுவாவசு கடுந்தவம்
செய்து, தனது தீவினை நீங்கப்பெற்றானாம்.
இத்திருக்குளத்திலே நீராடும் போது ஓத வேண்டிய மந்திரம் - வசிஷ்ட முனிவர் அருளியது
அபஹர மம துரிதாநி ப்ரதிச தவம்! நிருபமாம்
யசோ லக்ஷ்மீம்
பகவதி கைரவிணி ! த்வாம் ப்ரணமாமி
* ..
ஜனார்தனப்ரியே ! சுபகே !!
பெருமை வாய்ந்த கைரவிணி புஷ்கரிணியே
- ஜனார்தனது விருப்பத்திற்கு உரியவளே, சோபனையே,
எனது பாவங்களை போக்குவாயாக ! நிகரற்ற கீர்த்தியும் செல்வமும் அளித்து என்னை
காப்பாயாக !!
முத்கலன் எனும் முனிவன் முன்னொரு காலத்தில் கோமதி நதி தீரத்தில் ஆஸ்ரமம்
அமைத்து தவ வாழ்க்கை அமைதியாக வாழ்ந்து வந்தான்.
இவரது ஆஸ்ரமத்திற்கு - கோகிலன், கௌதமன், உத்தமன், கதகன், விமலன் ஆகிய ஐந்து
முனிவர்கள் விஜயம் செய்தனர். அவர்களுக்கு பணிவிடை
செய்த முத்கலன் - தவஞ்செய்து சித்தி பெறக்கூடிய
தலம் யாது என வினவ, அவர்களும், கைரவிணி தடமே
சிறந்தது என பகர்ந்தனர். அந்த ஐந்து முனிவர்களுடன்,
இங்கே வந்த முத்கலன் இங்கே பல நாட்கள் நல்ல
தவம் செய்தான். ஒருநாள் ஒரு மிக பெரிய மீன்
ஒன்றை இந்த திருக்குளத்தினிலே கண்டான், மனைவி, மக்கள் என பலபேருடன் அந்த மீன் ஆரவாரமாக
சுற்றி வந்தது. அந்த மீன்களின் கோலாகல ஆர்பாட்டத்தினால் தவம் கலையக்கூடுமென முத்கலன்
- அம்மீனை தனது பரிவாரங்களுடன் நீங்குமாறு கூற - அந்த மீன் கூட்டமே, இவ்விடத்தை நீங்கி
வேறு தடாகத்திற்கு இடம் பெயர்ந்ததாம்.
இவ்வாறாக இத்திருக்குளத்திலே மீன்கள் கிடையாதாம். காலம் செய்த கோலத்தில், நீர்தடாகம், சிமெண்ட் தரையாகி
மழை நீர் தேங்க, அல்லிமலர்கள் பூப்பதில்லை ! - குளத்தை சுத்தமாக வைத்து இருக்க கெண்டை
மீன்கள், கொசுக்களை அழிக்கும் கப்பீஸ் மீன்கள் முதலியன விடப்பட்டு, இப்போது குளத்தில்,
பல மீன்கள் உள்ளதை காணலாம். சில பத்து வருடங்கள்
முன்பு - அதிகாலை திருக்கோவில் கைங்கர்யபரர்கள் வெள்ளி குடத்தில், இக்குளத்து புனித நீரெடுத்து ஆழ்வான் யானை மீது மாட வீதி ப்ரதக்ஷிணம்
சென்று எம்பெருமான் திருமஞ்சனத்துக்கு புனித நீர் எடுத்துச் செல்வர். .. .. அய்யகோ - இவையெல்லாம் வெறும் கடந்த கால நிகழ்வாயினவே
!!
Here are some photos of the Kairavini pushkarini taken in recent
times and some scribbling of mine in attempting to write something on the glory
of the divine pushkarini – which is the name of my blog too. Pray for the
divine blessings of Emperuman for peaceful living of us all, elimination of
dreaded diseases like Corona and soonest return to normalcy of good olden days
when we enjoyed the bountiful Sri Parthasarathi Emperuman thiruveethi purappadu
and uthsavangal.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1st Aug 2021.
விவரங்கள் திரட்டு நன்றி
: "கைரவிணி மஹிமை" - திரு
திருக்கண்ணபுரம் ராஜகோபால அய்யங்கார் - "திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி
வேத அத்யாபக கோஷ்டி சிறப்பு மலர் 1985"
Very nice.
ReplyDeleteஅழகான அற்புதமான தகவல்கள்...
ReplyDeleteகைரவிணி மஹிமை அத்யற்புதம்....