வாழ்வில் நமக்கு சில சமயங்களில் [சிலருக்கு பலசமயங்களில் !] கோவம் அதிகமாக வருகிறது - அவ்வாறு கோபம் வயப்படும்போது
நாம் தவறான எண்ணங்களால் பாதிக்கப்படுகிறோம்; தவறான வார்த்தைகளை பேசுகிறோம். அமைதியாக வாழ, நாம் நமது உணவு முறையையும் சரிபடுத்துதல் அவசியம்.
ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம். நாம் வாழ்வின் காரணமே நம் எம்பெருமான். நம் செய்யவேண்டியது - அவ்வெம்பெருமானையே நினைத்து அவனுக்கே கைங்கர்யங்கள் செய்து, அவன் பெயரை எப்போதும் நாத்தன்னால் நவில உரைத்து, அவன் தாள்களை பற்றி அவனிடம் சேர்வதே ! .. .. எம்பெருமானை வாழ்த்தப் பெறுவதொரு நாள் உண்டானால், கீழ்க்கழிந்த காலமும் மேல்வருங்காலமும் எல்லாம் நன்னாளாய் விடுமென்கிறார் நம் தமிழ் தலைவன் பேயாழ்வார்.
நாம் அமைதியாக வாழ, கோவமற்ற சரியான வார்த்தைகள் பேச நம் உணவும் எண்ணங்களும் சுத்தமாக இருத்தல் அவசியம். தூக்கம், விழிப்பு, ஓட்டம், ஓய்வு, வளர்ச்சி, வளர்சிதை மாற்றங்கள் போன்ற அதிமுக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நம் உடலின் 'சர்காடியன் ரிதம்' என்ற உடல் இசைவுக்கு ஏற்றபடிதான் அமைகின்றன. மனிதன் தோன்றும்போதே அவனுடன் சத்வ (சாத்விகம்), ரஜோ (ராஜச) தமோ (தாமச) என்ற முக்குணங்களும் தோன்றுகின்றனவாம். சாத்விகம் என்ற சத்வ குணம் பரிசுத்தமானது. இறைமை, ஒழுக்க நெறி, ஞானம், போன்றவற்றின் மீது பற்றுதலை உண்டாக்குவது. ரஜோகுணம் என்ற ராஜச குணம், இறுமாப்பு மற்றும் பேராசையால் ஏற்படும் நிலை. தமோகுணம் என்ற தாமச குணமோ, ஞானமில்லாத சூனிய நிலையாகும்.
இவற்றுக்குள் கோபதாபங்கள், காம மோகங்கள் இல்லாமல் நற்சிந்தனைகளுடன் இருக்கும் சாத்விக நிலைதான் மனிதனுக்கு நல்லது. மனிதனின் இவ்வாழ்வுக்கும், மறுவாழ்வுக்கும் அத்தியாவசியமான சத்வ குணம் உறங்க ஆரம்பித்தால், ரஜோ குணமும் தமோ குணமும் உச்சம் பெற்றுவிடும். அதே சத்வ குணம் விழிப்படைந்துவிட்டால் ரஜோ குணமும், தமோ குணமும் தாம் இருக்குமிடம் தெரியாமல் சத்வ குணத்துடன் ஐக்கியமாகிவிடும்.
“ஆஹார
சுத்தெள ஸத்வ சுத்தி'' - ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது
ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் கூட உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க
வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட
உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது
பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும். அதனால், ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுப்
பழக்கம் மிகவும் அவசியமாகிறது. இது வெறும் ஆன்மிக சொல்லாடலாக இருந்தால், பலருக்கு நம்பிக்கை
வாராது.
Eating more nutritious, plant-based foods is heart-healthy at any age, according to two research studies published in the Journal of the American Heart Association, an open access journal of the American Heart Association. In two separate studies analyzing different measures of healthy plant food consumption, researchers found that both young adults and postmenopausal women had fewer heart attacks and were less likely to develop cardiovascular disease when they ate more healthy plant foods.
The American
Heart Association Diet and Lifestyle Recommendations suggest an overall healthy
dietary pattern that emphasizes a variety of
fruits and vegetables, whole grains, low-fat dairy products, .. .. … nuts and legumes
and non-tropical vegetable oils. It also advises limited consumption of
saturated fat, trans fat, sodium, red meat, sweets and sugary drinks. One
study, titled "A Plant-Centered Diet and Risk of Incident Cardiovascular
Disease during Young to Middle Adulthood," evaluated whether long-term
consumption of a plant-centered diet and a shift toward a plant-centered diet
starting in young adulthood are associated with a lower risk of cardiovascular
disease in midlife. "Earlier research was focused on single nutrients or
single foods, yet there is little data about a plant-centered diet and the
long-term risk of cardiovascular disease," said Yuni Choi, Ph.D., lead
author of the young adult study and a postdoctoral researcher in the division
of epidemiology and community health at the University of Minnesota School of
Public Health in Minneapolis.
Choi and
colleagues examined diet and the occurrence of heart disease in 4,946 adults
enrolled in the Coronary Artery Risk Development in Young Adults (CARDIA)
study. Participants were 18- to 30-years-old at the time of enrollment
(1985-1986) in this study and were free of cardiovascular disease at that time.
Participants included 2,509 Black adults and 2,437 white adults (54.9% women
overall) who were also analyzed by education level (equivalent to more than
high school vs. high school or less). Participants had eight follow-up exams
from 1987-88 to 2015-16 that included lab tests, physical measurements, medical
histories and assessment of lifestyle factors. Unlike randomized controlled
trials, participants were not instructed to eat certain things and were not
told their scores on the diet measures, so the researchers could collect
unbiased, long-term habitual diet data.
தமிழ் தலைவன் என்ற புகழ் பெற்ற ஸ்ரீபேயாழ்வார் நமக்கு உரைக்கும் பாசுரம். ஏ, உலகத்தார்களே ! .. .. ‘எது நல்லது, எது தீயது‘ என சஞ்சலத்துடன் விவாதித்துக்கொண்டே வாழ்க்கையை வீணாக்காதீர் !! எம்பெருமானிடத்தில் ஈடுபடுவது நன்று ! மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தில் - "தனது நெஞ்சில் பொன்றாமை மாயன் புகுந்து" என உரைக்கின்றார். பொன்றாமை என்றால் - : - விச்சேதம்; வழுவு, குறை, பங்கம், தவறு, குற்றம், கேடு, பழிப்புரை என பலபொருள் கொள்ளலாம். பொன்றாமை – நான் நசித்துப் போகாதபடியாக என்றுமாம். ஹ்ருதயத்தினுள்ளே நிற்றலிருத்தல் கிடத்தல்களுக்க விச்சேத மில்லாதபடியாக என்றுமாம். ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை சாதித்தது : "பகவத் தியானத்துக்கு விச்சேதம் பிறந்தால் அதுக்குப் பரிஹாரமாகத் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகை":
உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை
நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றானிருந்தான்
கிடந்தானென்னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து !
மனத்தினாலும்
அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான
எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை
ஒன்றுமில்லாமல் ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று
பிறகு, வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார்
தமிழ் தலைவன் பேயாழ்வார்.
15.6.2015 - அன்று ரோஹிணி திருநக்ஷத்திரம்.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சிறிய மட வீதி புறப்பட்டு கண்டருளினார். எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளும் கூட
- அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன - எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும்
- பெருமாள் முன்பே திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது. இன்றைய கோஷ்டியில் தமிழ்
தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.
Today being a Saturday, crowds are seen everywhere in the
market, at beach and elsewhere but one cannot have darshan at Temple. According to State Govt policies – Friday,
Saturday & Sunday are holidays fro Temples !! – how sad !! – the principle
is simple, on every important occasion for Hindus, their rights would be
trampled .. .. Reminiscing the good olden days – here are some photos of Sri
Parthasarathi Perumal Rohini purappadu
on 15.6.2015.
adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli
Srinivasan Sampathkumar
28th Aug 2021.
No comments:
Post a Comment