For Srivaishnavaites, life is blissfully spent in kainkaryam
to Emperuman – today 6th August is day 5 in Thiruvadipura uthsavam
and being Punarvasu - is the masa
thirunakshathiram of Chakravarthi
Thirumagan Sri Ramapiran and Sri Kulasekara azhwar.
குற்றமற்ற வாழ்வு தவம் .. .. தவறிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்;
தவறு செய்வதற்கென்றே இருப்பவர்கள் உலகிலே மிகச்சிலரே
! சிலரை
நேரம், சந்தர்ப்பம் தவறு செய்ய வைக்கின்றது; சிலர் அத்தவறுகளை சந்தர்ப்பதை வைத்து ஞாயப்படுத்த முயல்வர். சிலர் தம்மை அறியாமல் தவறு செய்ததை உணர்ந்து, மனம்
வருந்தி திருந்துகிறார்கள். ‘மாரீசன்’ எனும் சந்தர்ப்ப சூழ்ச்சியினால் தான்
தவறு செய்தானோ ? ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வோர்
வலிமையான வாழ்க்கை உண்மைதனை உணர்த்துகின்றனர்.
In the divine Ithihasa puranam Sri Ramayanam, Ravana of evil mind,
planned deceitfully to carry Sitadevi by stealth. He, directed a
rakshasa by name Mareecha to appear as a golden hued deer. Maricha reached
Panchavati and in the form of a golden deer ambled in front of Sri Rama’s
cottage; his body was sleek, had attractive glow, his horns shone blue.
Sitadevi while plucking flowers noticed the deer with shining coat. Sri
Rama went after the deer …… when the evil minded Ravana abducted Sitadevi,
leading to his downfall and death.
சீதையை அடையும் பொருட்டு இராவணன்
தன் வஞ்சனைக்குத் துணை புரிய மாரீசனை வேண்டுகின்றான். மாரீசன் பலவாறு இராவணனைத் தடுக்கிறான்.
இறுதியில் அவனுக்கு அஞ்சி இராவணன் திட்டத்திற்கு இசைகிறான். மாயமானாகச் சீதை முன் விளையாடுகிறான்.
இராவணன் தவறு செய்ய நினைக்கிறான் என்று அறிந்த மாரீசன்,
அவனுக்கு நல்ல அறிவுரைகள் கூறுகிறான். மாரீசன் பலவாறாக இராவணனுக்கு உணர்த்த முயல்கிறான் : இராவணா , நீ
மட்டும் அல்ல , உன் உறவினர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள். நீ சொல்வதைக் கேட்டு என்
மனம் பட படக்கிறது . விஷத்தை ஒருவர் குடிக்கும் போது அருகில் நின்று, நல்லது தான் குடியுங்கள்
என்று யாராவது சொல்வார்களா "
"உஞ்சு பிழையாய் உறவினோடும்" * என
உன்னா,
நெஞ்சு பறைபோதும்; அது * நீ
நினையகில்லாய்;
அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து * அருகு நின்றார்,
நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" * எனலும் நன்றோ?
இக்கொடிய செயலை செய்ய நினைக்கும் இராவணனே ! நீ தப்பிப் பிழைக்க மாட்டாய். நீ மட்டும் அல்ல, உன் உறவினர்களும் அவ்வாறே என உணர்ந்து,
என் மனம் பறை அடிப்பது போல அடித்துக் கொள்கிறது.
அதைப் பற்றி நீ நினைக்க மாட்டேன் என்கிறாய் ! நஞ்சை அருந்துபவர்களை, அவனது பக்கலில் இருப்பவர்கள், இது நல்லது என்று சொல்வார்களோ !! என்றெல்லாம் எடுத்து உரைக்கின்றான்
எனினும் தீயவனான ராவணனின் அழுத்தம் காரணாமாக மாய தங்க
மான் உருவு எடுத்து சீதை தங்குமிடம் அருகே உலாவுகிறான். அம்மானைப் பிடித்துத்தரச் சீதை
வேண்டுகிறாள். இலக்குவன் தடுத்தும் கேளாமல், இராமன் மாய மான் பின்னே செல்கிறான். நெடுந்தூரம்
இராமனை ஈர்த்துச் சென்ற மாரீசன் இறுதியில் இராமன் அம்புபட்டு, 'சீதா லட்சுமணா' என்று
இராமன் குரலால் கூவி, இறந்துபடுகிறான். 'மாயம் இது' என்று உணர்ந்த இராமன் சீதைக்குத்
துயர் நேருமென விரைந்து ஆசிரமம் நோக்கி வருகிறான். இப்படலத்தின் செய்திச் சுருக்கம்
- கம்பர் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் என விரிவாக
உரைக்கின்றார்.
திருமங்கை மன்னன் தமது திருகுறுந்தாண்டகம் பாசுரத்தில்
இந்நிகழ்வினை :
மாயமான்
மாயச் செற்று* மருதிற நடந்து,* வையம்-
தாயமா
பரவை பொங்கத்* தடவரை திரித்து* வானோர்க்கு-
ஈயும்மால்
எம்பிரானார்க்கு* என்னுடைச் சொற்கள் என்னும்,*
தூய மாமாலை கொண்டு* சூட்டுவன் தொண்டனேனே.
என உரைக்கின்றார். மாயச்செய்கையையுடைய மாரீசனாகிற மான் முடியும்படி கொன்றவனாயும்; மருது - (இரட்டை) மருதமரங்கள்
வடிவில் அரக்கர்தமை கொன்றமையையும் என எம்பெருமானின் திருவவதார விசேஷங்களை பாராட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக்
குறிக்கிறார்; “மாயமான் மாயச்செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால்
க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை
திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் கூர்மாவதாரம். முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில்
மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்; அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம்
விளைக்க வந்தானென்று உயிர் மாயத் தொலைத்தானாயிற்று. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப்பாசுரங்களாகிய
தூயமாமாலையைக் கொண்டு சூட்டுவேனென்றாயிற்று, என்பது கலியனின் இப்பாசுரம்.
The photos here – Sri Rama piran Garuda sevai at Thiruvallikkeni taken in 2016; Thiruvayodhya Sri Rama piran (courtesy MA Madhusudhanan swami) and mareecha vatham photos of Thirumylai Sri Madhava Perumal thirukovil.
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
6th Aug 2021
Very nice. Beautiful photos. Especially maricha vadham.
ReplyDelete