To search this blog

Monday, August 9, 2021

Andal Thiruvadipura Uthsavam ~ காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்*

For Srivaishnavaites, life is blissful – today 9th August is day 8  in Thiruvadipura uthsavam  of Kothai piratti Andal 



இன்று ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில் 8ம் நாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,துளசிமலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்திபெருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.

Bird-watching, the observation of live birds in their natural habitat, a popular pastime and scientific sport that developed almost entirely in the 20th century. In the 19th century almost all students of birds used guns and could identify an unfamiliar species only when its corpse was in their hands. Modern bird-watching was made possible largely by the development of optical aids, particularly binoculars, which enabled people to see and study wild birds, without harming them, better than ever before.

On top is Koel (Cuckoo) and below is black drongo


You may or may not have watched this ‘glossy black bird’  with a distinctive forked tail and perched on a bare branch was looking for something when it suddenly flew and was next seen  hovering over a Tawny eagle, more than twice his size and much stronger. This  bird, known as the black drongo was unfazed and fearlessly fighting off the eagle from his territory. The drongo kept dive-bombing without any hesitation and the eagle eventually made off. Despite their small size, the black drongos are aggressive and fearless. They display mobbing behaviour and routinely attack birds of prey when their nests or young are threatened. It is also called the king crow, not because he is "as black as a crow" but because of this bird's courage to put crows, even kites and eagles, to flight should they venture out to plunder eggs and hatchlings.

கேளடா மானிடவா !  .. ....  எம்மில் கீழோர் மேலோர் இல்லை  ~ என்ற பாரதியார் பாட்டினை கேட்டு இருப்பீர்.   அது 'மகாகவி சுப்பிரமணிய பாரதியின் "குருவி பாட்டு.

அருவி போலக் கவி பொழிய - எங்கள் அன்னை பாதம் பணிவேனே

குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக் கோதைப் பாதம் அணிவேனே.

என்பன அவர்தம் வரிகள்.  1909 ஜனவரி 1ஆம் தேதி, பாரதியாரும் சில இளைஞர்களும் சரஸ்வதி விலாச சபையில் கூடியிருந்த சமயம் சபை அங்கே  குதூகலமாய் பறந்து சென்ற  குருவிகளின் இன்பகரமான வாழ்க்கை பற்றி  பாரதியார் பாடிய பாடலாம் இது. 




திருவல்லிக்கேணி தற்சமயம் கான்க்ரீட் காடாக இருந்தாலும், சில இடங்களில் மரங்கள் உள்ளன.  எங்கள் வீட்டு மாடியில் அருகில் உள்ள அரசமரத்தில் அழகான பச்சை கிளிகளையும், கொஞ்சும் புறாக்களையும், குயில்களையும், மைனாக்களையும்,  கீச்சு கீச்செனும் சிட்டுக்குருவிகளையும், இன்ன பிற குருவி வகைகளையும் காணலாம்.  அவை தம் இனிய சத்தம் மனதை கிறங்க வைக்கும்.   ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கண்டது கருங்குறுவியை  .. .. .. அவை கீசு கீசவில்லை !  ~  திருமாலின் வரவை சொல்லினவாம் !!!

பக்தி ஸ்ரத்தைக்கு உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி.  அதிகாலையில் என்ன நிகழும் ?  எங்கே என்பதும் முக்கியம் !! ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங்கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம்.  இதையே ஆண்டாள், மிக அழகாக – கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாக காலை எழுந்திருந்து இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என சிலாகிக்கிறார்.

கருங்குருவி  -  கரிச்சான் குருவி எனலாம்  (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.

It is  black drongo (Dicrurus macrocercus) (கருங்குருவி) seen commonly across the country, often seen perched high on power cables and exposed branches, keeping a keen eye out for passing insects, its chief form of nourishment.  It can also be spotted perched on grazing animals and picking grub off their hides.  Black drongo (Dicrurus macrocercus) is a small Asian passerine bird of the drongo family Dicruridae. It is a wholly black bird with a distinctive forked tail perching conspicuously on a bare perch or along power or telephone lines. The species is known for its aggressive behaviour towards much larger birds, such as crows, never hesitating to dive-bomb any bird of prey that invades its territory.  To the unobservant, the black drongo could appear rather unremarkable. Apart from the swift, balletic dives that it makes to pursue its prey, nothing about the drongo’s physical appearance — the small squat body, the glossy black feathers or even the distinctive forked tail — is spectacular. But to merely glance and then ignore this bird is to lose sight of a bird truly remarkable, fearless and aggressive.

Back in 1928, an English police officer and ornithologist in India named Hugh Whistler, called it the King Crow, not because it was related to crows, but because it surpassed the menacing behaviour of the Corvidae (Crow) family. At about 28 cm, it has a black plumage, its glossiness bordering on blue iridescence in favourable light. It has a small white spot at the base of the bill gape (base of the bill), called a rictal spot, a distinguishing mark that separates the Black Drongo from others in the family. Sexes look alike and the bird has a red iris, with its bill and legs fashionably all black.





இதோ இங்கே கோதைப்பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் இருந்து ஒரு பாசுரம் : 

காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்*

மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ*

சோலைமலைப் பெருமான்*  துவாராபதி எம்பெருமான்*

ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே*.

ஆண்டாள் பிறந்த திவ்யமான ஸ்ரீவில்லிபுத்தூரில் புள்ளினங்களும் கூட  எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டவையாக இருக்குமாதலால்,  சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக பறந்து வந்து,  இருந்து எம்பெருமானுடைய வரவை தங்கள் குரலில் இனிமையாக உரைப்பதாக  ஆண்டாள் நாச்சியார் உணர்கிறார்.   இப்பறவையினங்கள் - சோலைமலை எனும் திருமாலிருன்ச்சோலை வாழ் துவராபதி எனும் துவாரகையை ஆண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட எம்பெருமான் கண்ணன் உடைய வார்த்தைகளையே உரைப்பதாக ஆண்டாள் அனுபவிக்கிறார்.  அவ்வெம்பெருமானிடமே தான் சென்று சேர பிரார்திக்கின்றார்.

Celebrating Sri Andal Thiruvadipuram here are some photos from Thirumylai Sri Madhava Perumal – yesterday it should have been ‘sayanathivasam’ – Emperuman taking rest on the lap of Sri Andal but as Temples remained out of bounds for devotees and as there were restrictions, there was no special thirukolam.  Here are some photos of Sri Godha nayiga sametha Sree Niranjana Madhava Perumal at Thirumylai Sri Madhava Perumal thirukovil of day 7 on 8th Aug 2021. 

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9th   Aug 2021. 




No comments:

Post a Comment