To search this blog

Tuesday, August 24, 2021

SingaPerumalkoil Sri Padalathri Narasimhar Pavithrothsava Sarrumurai 2021

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் பக்தர்களை ஓடோடி வந்து காப்பவன்.  நற்பயன் பெற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? - .. .. எம்பெருமானை நினைத்து, அவன்தம் பெருமைகளை நாம சங்கீர்த்தனம் செய்து, அவன் உறையுமிடங்களுக்கு சென்று, அவர்தம் அர்ச்சாவதார திருமேனியை கைகூப்பி வணங்கினாலே போதுமானது.   The founder of Pallava dynasty of Kachi was Simhavishnu also known as Avanisimha ~ was the first sovereign who extended his influence beyond Kanchipuram.  King Mahendravarman succeeding him inherited the vast kingdom and he perhaps had a long reign of 50 years to account for all his achievements in the novel method of excavating rock-cut shrines.  Stone inscriptions too found their way to appear from his time.  Tamil Nadu has some beautiful ancient temples and of the many, the earliest extant group belongs to  the Pallavas and the Chalukyas, while the subsequent groups fall into more or less  unbroken lines, with Pallava or Chalukyan characteristics as their basis. The rock-architecture of Pallavas start with their cut-in temples familiarly called the rock-cut cave temples.                                                               நம் எம்பெருமான் எத்தகையன் ? எனில் - மிக எளியன்; மிக மிக அழகானவன்; அடியார்களை எவ்வெப்போதும் ஓடி வந்து காப்பவன் .. .. எம்பெருமானுடைய திருமேனி வடிவழகையும், அவனது கல்யாண குணங்களையும் ஆழ்வார்கள் பல்லாயிரக்கணக்கான அற்புத வார்த்தைகளால் வர்ணித்துள்ளனர் - ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழி பாசுரத்தில் :

விட்டிலங்கு செஞ்சோதி   தாமரைபாதம் கைகள்கண்கள்,

விட்டிலங்கு கருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,  .. .. ... .. .. என்கிறார்.


மிக சிறப்பாக விளங்குகின்ற திருவபிஷேகத்தையுடைய ஸ்வாமி, மது என்ற அரக்கனை  கொன்ற பெருமானுக்கு -  திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும், விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரையுடைய தாமரைப்பூக்களேயாம்;  அவர்தம்  திருமேனியோவென்றால், நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை  உடைய மலைபோன்றது;  .. .. .. எம்பெருமான் மூலவர் அற்புத திருமேனி பல சேவித்து இருப்பீர்கள். மிக முக்கிய நரசிம்ம ஸ்தலம் [நவ நரசிம்ம ஸ்தலம்] - சிங்கவேள்குன்றம் என பிரசித்தி பெற்ற அஹோபிலம் திவ்யதேசம்.     திருக்கடன்மல்லை ஞானப்பிரான் சன்னதி,  திருமெய்யம் சத்தியமூர்த்தி  போன்ற இடங்களிலே - எம்பெருமான் திருமேனி மலையிலேயே தோன்றி அப்படியே நமக்கு தரிசனம் தரும். அதே போன்று மற்றோரு அற்புத சன்னதி "சிங்கப்பெருமாள் கோவில்".  இங்கே பாடலாத்ரி நரசிம்மர் - திருமலையையே தமது திருவுடம்பாக கொண்டுள்ளார்.  இங்கே கிரிவலம் வரும்போது எம்பெருமான் நரசிம்மரையும், அஹோபிலவல்லி தாயாரையும், கோதை பிராட்டி ஆண்டாளையையும் சேர்த்து வலம் வருகிறோம்.  எம்பெருமான் உக்கிரமூர்த்தி - த்ரிநேத்ரி. தவிர பெரிய சந்நிதியிலேயே - 'பிரதோஷ நரசிம்மரும்' எழுந்தருளி உள்ளார்.  எம்பெருமான் மூலவரது திருவடியில் எழுந்து அருளியிருக்கும் பேர மூர்த்தி வருஷத்தில் ஒரு நாள் மட்டும், திருக்கோவில் உள்ளே புறப்பாடு கண்டருள்கிறார்.

Now is the time for Pavithrothsvam in some temples – and it was grandly conductged at Singaperumal kovil too concluding on 22nd Aug 2021.   The famed Padalathri Narasimhar Thirukovil   is located around 50 km away from Chennai on GST Road, closer to Chingleput and has a Railway station too.  The temple is very well connected and as one gets down from the bus, the temple is around 100 meters away from the main road.  It is a rock-cut temple ~ a beautiful sannathi of Lord Narasimha housed inside the cave and devotees can do circumambulation around the hill housing the Lord.   The temple dates back to 8th Century built by Pallavas.  Patalam means red.  Athri means hill.  As Lord Narasimha appeared here furiously with Red Eyes and huge as a mount, the place came to be known as Patalathri.  The inscriptions on the walls of the temple are from the chola regime during the 10-11th  centuries.
Narasimha appeared here providing darshan for Maharishi Jabali after his intense penance.  Moolavar Ugra Narasimhar gives darshan  in seated posture with his right leg bent – chathurbujam (four hands) – two holding Conch and Chakra; one abaya mudra and other resting on his lap.  Lord has three eyes.  Uthsavar is the pleasing Prahlada Varadhar.  Thayar is  Ahobilavalli having a separate sannathi on the right side of the main sannathi.  There is sannathi for Sri Andal and for Alwar Acaryas.  The temple follows Thenkalai tradition of worship based on Vaikasana Agamic tradition. 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.  

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணணின்  திருவவதாரங்களில் நரசிம்ஹ அவதாரம் பெருமை பெற்றது.    இந்த அவதாரத்தின்போது  பெருமாள் சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் தூணிலிருந்து வெளிப்பட்டு தன பக்தனை காத்து அருளினார்.   சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்ஷன் எனும்  இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ   - பரிபூரண நம்பிக்கையுடன்,  நாரணன் எங்குமுளன் என உரைத்தான். ஆழ்வார் பாசுரத்தில் உள்ளது போல, அளந்திட்ட அத்தூணை அவன் தட்ட, அங்கேயே எம்பெருமான்  சிங்க உருவாக - ஆளரியாக  நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.  நரசிங்காவென்று வாடிவாடும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்கு ஓடோடி வந்து உதவிய அந்நரசிங்கன் அவனையே தொழும் ஒவ்வொரு பக்தனுக்கும் எளிதில் உதவிடுவான் என்பதில் ஐயமில்லை.. .. இதோ அவ்வெம்பெருமானையே நினைந்து உருகிய ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம். :

ஆடியாடி  அகம்  கரைந்து*, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*, எங்கும்

நாடிநாடி   நரசிங்காவென்று,

வாடிவாடும்  இவ்  வாணுதலே !!

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் - பராங்குச நாயகி பாவத்தில் - ஒளிபொருந்திய நெற்றியையுடையளான இப்பராங்குச நாயகி பலகாலும் ஆடி, மனமுருகி,  எம்பெருமானை உகக்கும் பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி, கண்களில் நீர்நிரம்பப் பெற்று, எவ்விடத்தலும் - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து  நரசிங்கா,  நரசிங்கமூர்த்தியே! என்று கதறி அவன் வரவை எதிர்கொண்டு மிகவும் வாடுகின்றால்.  தன் பக்தர்களுக்கு இரங்கி அவர்தம் குரலுக்கு உடனே பறந்து ஓடி வரும் எம்பெருமான் நம் கோரிக்கைகள் அனைத்துக்கும் செவி சாய்த்து நம்மை காத்து அருள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.   
I consider it a very great fortune to have darshan of Sri Padalathri Narasimhar and participate in the thiruvaimozhi sarrumurai goshti at Singaperumalkoil and have darshan of poornahuthi on Sunday, 22nd Aug 2021.  It was such blissful experience to hear the chantings of battachars and the divyaprabandha goshti led by Sri UVe  Sri Mudali Andan Swami - Kumara Bakthisarachaar. Here are some photos taken on the occasion of poornahuthi at Singaperumalkoil.

adiyen  Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th Aug 2021. 1 comment: