To search this blog

Monday, July 6, 2020

Thiruvallikkeni Sri Azhagiya Singar Lakshmi Narasimha Thirukolam 2020 : ஸ்ரீ லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!


நல்ல வழிபோகத் தேடலாகாதா?  நல்ல காலத்திலும் கடின காலத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் ? - எப்போதும் எழும் கேள்விகள் அல்லவா ?


India's number of confirmed coronavirus cases is behind only the United States, Brazil and Russia, and sooner India could push back Russia and become no. 3 in the affected ranking.  The country's two-month lockdown kept transmission low but in a large population of 1.3 billion, people remain susceptible and the campaign against the virus is likely to go on for months.

India's lockdown was imposed nationwide in late March but has eased since, and it is now largely being enforced in high-risk areas.   India reported the highest single-day spike of 24,850 new coronavirus cases and 613 deaths in the last 24 hours on Sunday. The number of positive cases stand at 674,312 including 245,940 active cases. The death toll is at 19,289, according to Health Ministry.  Tamil Nadu is now the second state after Maharashtra to achieve the unfortunate milestone of crossing 100,000 cases; taking 82 days to reach that mark since it recorded its 1,000th case. While Maharashtra had taken only 66 days to reach 1,000 to 100,000 cases. The cases tally in Maharashtra is already touching 200,000. Tamil Nadu has added around 4,000 news cases daily, on an average, in last seven days.  For the last few days, India’s novel Coronavirus numbers are being powered mainly by the surge in the four southern states of Tamil Nadu, Karnataka, Telangana and Andhra Pradesh. All the four are now in the top ten list of states with maximum caseload in the country.


ஸ்ரீவைணவனின்  வாழ்க்கை மிக எளிதானது.  எளிமையாய் இரு ! மற்றோர் அனைவரிடமும் அன்பு கொள்.  திருக்கோவில்களுக்கு செல் ! எல்லாவிதமான கைங்கர்யங்களும் செய் ! பிறர் மனம் புண்பட நடக்காதே ! பகவத் பாகவத அபச்சாரங்கள், நிந்தனைகள் செய்யாதே ! எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனனை போற்றி புகழ் பாடு.  எம்பெருமானுடைய  கல்யாண குணங்களிலும் திவ்யசரிதைகளிலும்  பொருந்தி நின்ற நல்ல மனமும்,  அவனது  குண விசேஷணங்களை  பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கும் வாய்ப்பதுவும், அவனடியார்க்கு அன்பு செய்வதுவும் நம்மை பண்படுத்தி மேம்படுத்தும்.




At Thiruvallikkeni, there are two   Brahmothsavams – one for Sri Parthasarathi and the other for Azhagiya Singar.  Both are conducted in the same grand manner.  There are some small differences – On day 8th morning it is ‘Vennithazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’ for Azhagiya Singar.  On 9th evening – it is Kannadi pallakku for Sri Parthasarathi and Sadasarsha vimanam for Sri Azhagiya Singar.  Elders of Thiruvallikkeni state that Sri Azhagiya singar Aani brahmothsavam had not been stopped in any year, to their knowledge but sadly in 2020 due to Covid 19, we do not have the uthsavam – it would have been day 8 and this morning there would have been the beautiful purappadu in ‘Sri Lakshmi Narasimha thirukolam’.

கிருஷ்ணானந்த முகுந்த முராரே !   வாமன மாதவ கோவிந்தா !
ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ! .... லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!

~ நரசிம்ஹர் - அளந்திட்ட தூணை அவன் தட்ட, அதை பிளந்து கொண்டு வந்து உகிரால் இரணியனை அழித்தவர். உக்கிரமானவர்.  திருவல்லிக்கேணியிலே அவர் யோக நரசிம்மராயும், உத்சவர் தெள்ளியசிங்கராயும் காட்சி அளிக்கிறார்.    எட்டாம்நாள் காலை ஸ்ரீபார்த்தசாரதி வெண்ணெய்தாழிக்கண்ணன் திருக்கோலம்.  அழகியசிங்கருக்கோ ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.





அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர்.    வடிவழகிய பெருமாள் 8ம் நாள் காலை - "ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளிக்கிறார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருக்கும் திருக்கோலம் மிக அற்புதமானது. 


இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத வரிகள் - 'இயற்பா பெரிய திருவந்தாதியில்'

வகைசேர்ந்த   நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிக  வாய்ந்து
மாலைத்தாம்   வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை.

ஞானத்திற்கு  மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்,  எம்பெருமானையே நினைத்து உருகி அவனையே சேர்ந்து  அநுபவிக்காவிட்டாலும், சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள் நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் சிறப்பாக  பேசுவதற்கு உறுப்பான நாவோடு கூடிய வாக்கும், எம்பெருமானை வாழ்த்தாமல் சும்மா இருப்பவர்கள் , மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது ! ~ இதை பொல்லாத மானுடம் உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ளுதலே நலம்.








For us Pirattiyar is all  divine grace and kind to devotees of Sriman Narayana.  Emperuman is absolute, matchless and blemishless in all aspects.  Piratti complements HIM ~ she is always associated with Emperuman.  It is only She who can direct us towards the blessings of Emperuman.  At Thiruvallikkeni, Lord Narasimha is in the most pleasing form – He is Thelliya Singar, known as  Azhagiya Singar. On day 8 it is  Lakshmi Narasimha Thirukolam, the most beautiful Perumal having  Lakshmi Pirattiyar closest to Him -  the greatest darshan a baktha could have.  Here are some photos taken during purappadu on 30.6.2018.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6.7.2020











No comments:

Post a Comment