To search this blog

Saturday, June 27, 2020

Corona ~ Sun eclipse - Mahabaratha - வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய 2020


மஹாபாரதம் பாண்டவர்கள்  ஐவர்க்கும்  கௌரவர்கள்  நூறு பேருக்கும்  நடந்த போட்டி. துர்யோதனனின் (திருதராஷ்ட்ரனின்)  பதவி மோகத்தால் தர்ம அதர்ம யுத்தமாக மாறியது. திருதராஷ்டிரன் காந்தாரி தம்பதிகளின் நூறு ஆண்மகன்களைத் தவிர ஒரே ஒரு பெண் பிறந்தாள்.  அவள் பெயர் துச்சலை  இவளது கணவன் ஜயத்ரதன் ஒரு பெரிய வீரன், . சிந்து நாட்டு அரசன்.


In the final moments before a total solar eclipse, the temperature drops, birds and insects sing, and the ambient light becomes otherworldly.   Daytime morphs into a 360-degree dusk, and where the Sun once hung a black hole punches through the sky, wreathed by a white ethereal glow  -  what are we talking about ?  Some might be surprised.  ‘Corona’ is not a new word, not a bad one either.  That white ethereal glow   described in the starting para is the solar corona, the Sun’s tenuous upper atmosphere of ionized gas.  The Sun’s corona is the outermost part of the Sun’s atmosphere. The corona is usually hidden by the bright light of the Sun's surface. That makes it difficult to see without using special instruments. However, the corona can be viewed during a total solar eclipse.

The Sun god is driven by a seven-horsed Chariot depicting the seven days of the week.    The charioteer of Surya is Aruna, who is also personified as the redness that accompanies the sunlight in dawn and dusk. Aruna was born to Vinatai and Sage Kashyapa….. the other son is the most illustrious Periya Thiruvadi (Sri Garuda Azhwar)  ~ to Aruna was born Jatayu and Sampati, who are mentioned in the epic Ramayana.  The chariot of Sun travels at a speed of 3,400,800 yojanas calculated as 27,206,400 miles in a muhurtha.  


Solar Eclipse occurs when the new Moon gets between Earth and Sun and covers the solar disc completely. We all know that the   Earth and the Moon are not fixed objects. The moon is busy orbiting the earth. The earth is busy orbiting the sun and additionally rotating on its axis. This means that the spot on the earth where the umbra falls is always in motion and actually traces out a path.  At the time of eclipse, the Sun and Moon are in conjunction as seen from the earth.     There would be Total, Annular, Hybrid and partial eclipses.  Total solar eclipse is the most spectacular celestial event when an eerie darkness would descend in its totality, birds fall silent and stars peer out in day time. .. .. Mahabaratha has reference to Solar  eclipse.  


மஹாபாரதம் ஒரு வாழ்வியல் இலக்கியம். பாரதப்போர் வெறும் யுத்த காலமல்ல.  சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன் ஜெயத்ரதன்  மிக்க வீரமானவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன் அவனக்காக்க வரம் பெற்றிருந்தான்.  அபிமன்யு   சக்கர வியூகத்தை  உடைத்து உள் நுழைந்து, எதிரிகளை பந்தாடிய போது  கௌரவர் பக்கம் உள்ள அணைத்து வீரர்களும் சிறுவனிடம் யுத்த தர்மங்களை கடந்து தாக்குகின்றனர்.   அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான்.  கடும் போராட்டத்துக்குப் பிறகு, அபிமன்யு வஞ்சகமாக  வீழ்த்திக் கொல்லப்படுகிறான். அப்போரையும் தர்மமற்ற முறையில் அவன் கொல்லப்பட்டதையும் கேட்டு வெகுண்ட  அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான். 



ஜயத்திரதனை  துரோணர், கர்ணன் உள்ளிட்ட அனைவரும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.  கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை  விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. சவ்யசாசி அர்ஜுனன்  விட்ட அம்பு ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது.  எல்லாம் வல்ல கண்ணன் இல்லாமல் அர்ஜுனனின் சபதம் தோற்றிருக்கும். 


திருமழிசைப்பிரான் தமது நான்முகன் திருவந்தாதியில் :

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமே  மாற்றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்  மறைய
தேராழியால்    மறைத்தாரால்.


மஹாபாரதயுத்தம் நடந்த அக்காலத்தில்,  தேவாதிதேவனான கண்ணபிரான் தானே  பாண்டவர் பக்கலும் - அவர்தம் எதிரிகளுக்கு எதிரியாகவும் பல மன்னர்களை, குருக்ஷேத்திர யுத்த களத்திலே வதைக்க காரணமாய் இருந்தான்.  அர்ஜுனனுக்காக - ஒளிகொண்ட சூரியனையே அகாலத்தில்  அஸ்தமிக்கும் படியாகவும்,  பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும் - தேர் ஆழியால் (சக்கராயுதத்தினால்) மறைத்த ஸ்ரீ பார்த்தசாரதியான கண்ணபிரானையே எனது மனம் என்றென்றும் சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது ~ என நமக்கு வழிகாட்டுகிறார் நம் திருமழிசைப்பிரான்.


Sri Thirumazhisai Alwar guides us to reach to that Lord who by His divine act of holding high His Sudarshana chakra, caused temporary eclipse of Sun.  Enjoying the false sense of security concluding that the Sun has set for the day, Jayadrada came out.  Arjuna who had vowed to eliminate him before sunset, thereby utilized the opportunity to avenge the killing of his valiant son Abhimanyu. 

2020 has changed the lives of people and the Whole world is worried at the Covid 19 spread.  Six days after it recorded four lakh infections, India's COVID-19 tally raced past five lakhs  with the highest single-day jump of 18,552 cases, according to Union health ministry data.  However, the  number of active cases stands at 1,97,387, while 2,95,880 people have recovered.

Tamil Nadu on Thursday crossed the million mark in terms of number of Covid-19 tests. It was the first state to do so. That translates to around 15,000 tests per million of population (or 1.5% of the population), lower than Delhi’s 23,000+ and even Andhra’s 15,000+, but still among the highest in the country. The number is also much lower than that in some of the countries ravaged by the coronavirus disease - but it is still higher than the national average in India of around 5,834 tests per million of population. The state has rapidly increased testing. On June 11, it carried out only 16,829 tests. By June 25, this number increased to 32,543. And its daily positivity rate hasn’t changed much.  At a time when there are talks that going by the daily figures, the lockdown would perforce have to be extended for a month the least – we are concerned.

Let us pray to Emperuman for immediate containment and total eradication of the dreaded Corona sooner.  Here are some photos of Sri Parthasarathi Emperuman from thavana Uthsavam in 2018.

adiyen Srinivasa dhasan
Mamandur  Veeravalli Srinivasan Sampathkumar
27.6.2020.










No comments:

Post a Comment